பிரதமர் மோடிக்கு நியூஸ் மேக்கர் விருது- இந்தியா டுடே வழங்கியது!
பிரதமர் மோடி பல்வேறு உயரிய விருதுகளை வாங்குவது என்பது வாடிக்கை. அவர் ஏகப்பட்ட நாடுகளின் உயரிய விருதுகளை அநாயசமாக பெற்றுள்ளார். இப்படித்தான் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக கடந்த ஜூன் மாதம் எகிப்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் தி நைல், மே மாதம் பப்புவா நியூ கினியாவின் கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோஹு, பலாவ் குடியரசின் எபகல் விருது, ஆர்டர் ஆஃப் தி 2021 விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது..
மேலும் பூடானின் டிரக் கியால்போ, 2020ல் அமெரிக்காவின் லீஜியன் ஆப் மெரிட், 2019 ல் பக்ரைனின் கிங் ஹமாத் ஆர்டர் ஆப் தி ரினாய்ஸ்சன்சன், 2019 ல் ரஷ்யாவின் ரஷ்யாவின் ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருது, ஐக்கிய அரபு எமிரேட்சின் ஆர்டர் ஆஃப் சயீத் விருது, 2018 ல் பாலஸ்தீனத்தின் கிராண்ட் காலர் விருது, 2016ல் ஆப்கானிஸ்தானின் காஜி அமீர் அமானுல்லா கான் ஸ்டேட் ஆர்டர், சவுதி அரேபியாவின் ஆர்டர் ஆஃப் அப்துல்அஜிஸ் அல் சவுத் விருது உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பெற்றுள்ளார். இதை எல்லாம் கவனத்தில் கொண்டு இவ்வாண்டின் சிறந்த நியூஸ் மேக்கர் என்ற சிறப்பளிக்கும் விதமாக நியூஸ்மேக்கர் 2023- என பிரதமர் மோடியை இந்தியா டுடே குழுமம் தேர்வு செய்து கவுரவித்துள்ளது.
அதாவது பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மிகவும் பரபரப்பான தலைப்பு செய்திகளில் அடிக்கடி இடம் பெறும் பிரபலங்களை இந்தியா டுடே குழுமம் நியூஸ்மேக்கர் என அறிவித்து கவுரப்படுத்தி வருகிறது. இதன்படி இந்த ஆண்டின் நியூஸ் மேக்கராக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அந்த நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தியாவில் ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, தனது வெளிநாட்டு பயணங்களின் போது அந்நாட்டு தலைவர்களுடனான நட்புறவு, போன்றவற்றால் தேசிய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் 2023-ம் ஆண்டு தலைப்பு செய்தியாக பிரதமர் மோடி இடம் பெற்றுள்ளார்.
இதையடுத்து பிரதமர் மோடியை இந்தியா டுடே நியூஸ்மேக்கர் 2023 என தேர்வு செய்து அறிவித்தது. இது தொடர்பாக இந்தியா டுடே குழும தலைவர் அருண் பூரி,, துணைத் தலைவர் கலில் பூரி ஆகியோர் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து இதற்கான விருதை வழங்கினர்.
அத்துடன் 2024 ஜன.8-ம் தேதி வெளியாக உள்ள 'இந்தியா டுடே' இதழில் பிரதமர் மோடியின் படம் கவர்ஸ்டோரியாக வெளியாக உள்ளது.