தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ராஜஸ்தான் முதல்வராக புதுமுகம் பஜன்லால் ஷர்மா தேர்வு!-

06:22 PM Dec 12, 2023 IST | admin
Advertisement

ராஜஸ்தானில் புதிய முதல்வராக சங்கனர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ ஆன பஜன் லால் சர்மா, தேர்வாகி இருக்கிறார்ர். டெல்லி பாஜக தலைமை நியமித்த மேலிட பார்வையாளர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்திற்குப் பிறகு, பஜன் லால் சர்மாவின் பெயரை முடிவு செய்ததை அடுத்து. கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. ராஜஸ்தானின் பரத்பூரில் வசிக்கும் பஜன் லால் சர்மா (Bhajan Lal Sharma) , இந்த அமைப்பில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். மாநில பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார். அதாவது முதல் முறையாக எம்எல்ஏ-வான பஜன் லால் சர்மா, 4 முறை மாநில பொதுச் செயலாளராக இருந்துள்ளார். ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபியுடன் நெருங்கிய தொடர்புடையவர்.

Advertisement

ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான தகுதியைப் பெற்றது. இதையடுத்து, முதல்வர் யார் என்ற கேள்வி கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, எம்.பி.யாக இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாலக்நாத், கிரோரி லால் மீனா, தியா குமாரி ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டன.இந்நிலையில், கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றது. கட்சியின் மேலிடப் பார்வையாளர்களாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வினோத் தாவ்டே, சரோக் பாண்டே ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவை தலைவராக, அதாவது முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார்

Advertisement

முன்னதாக ராஜஸ்தான் மாநில முதல்வராக முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே அறிவிக்கப்படுவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதுமுக முதலமைச்சரை பாஜக அறிவித்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் என மூன்று மாநிலத்திற்கும் புதுமுக முதலமைச்சர்களை பாஜக அரசு அறிவித்துள்ளது.

பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பஜன்லால் ஷர்மா, ராஜஸ்தான் மாநில பாஜக பொதுச் செயலாளராக பணியாற்றியவர். ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சங்கானெர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பேந்திர பரத்வாஜை தோற்டித்து முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினாரானார்.சங்கனர் தொகுதி பாஜகவின் கோட்டை என்று சொல்லலாம். அந்த தொகுதியில் தான் பஜன் லால் சர்மா வெற்றி பெற்றார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் முக்கியப் பங்காற்றுவதைக் கருத்தில் கொண்டு அவருக்கு முதல்வர் பதவி என்ற மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பஜன் லால் சர்மாவின் சொத்து மதிப்பு

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், 56 வயதான சர்மா முதுகலை பட்டதாரி. ரூ.43.6 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகள் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் அடங்கிய அவரது மொத்த அறிவிக்கப்பட்ட சொத்து மதிப்பு ரூ.1.5 கோடி. அறிவிக்கப்பட்ட மொத்த வருமானம் ரூ.11.1 லட்சம், இதில் ரூ.6.9 லட்சம் சொந்த வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Bhajanlal SharmaBjpelected as Chief Ministerrajasthan
Advertisement
Next Article