தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை!

02:08 PM Dec 29, 2023 IST | admin
Advertisement

ம் அண்டை நாடான பாகிஸ்தான் பொருளாதாரம், வர்த்தகம் என அனைத்திலும் பின்தங்கியிருப்பது மட்டும் அல்லாமல் அந்நாட்டின் மக்கள் வறுமையில் தவிக்கும் நிலையில் இஸ்ரேல் தாக்குதல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு ஆதரவு வெளிப்படுத்தும் வகையில், புதிதாக பிறக்கவுள்ள 2024ம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்களை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடைசெய்வதாக அந்நாட்டின் பொறுப்பு பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

2023-ம் ஆண்டு முடிவடைந்து 2024-ம் பிறக்கவுள்ள நிலையில், பெரும்பாலான உலக நாடுகள் புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ளன. இந்தியா ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புத்தாண்டை கொண்டாட இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் அரைமணி நேரம் கழித்து புத்தாண்டு பிறக்கும். இந்த நிலையில் பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அந்த நாட்டின் காபந்து (caretaker) பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கர் தடைவிதித்துள்ளார்.

Advertisement

2023 ஆம் ஆண்டு ஒவ்வொரு நாடும் பல விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்ட விஷயம் இஸ்ரேல் - பாலஸ்தீனம் ராணுவ தாக்குதல் தான். அதிலும் குறிப்பாக இஸ்ரேல் காசாவில் உள்ள மருத்துவமனையில் செய்யப்பட்ட தாக்குதல் உலக மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

இச்சூழலில் இந்த புத்தாண்டுக்கான தடை குறித்து மக்களிடம் பேசி பேசிய பொறுப்பு பிரதமர் கக்கர், 'காசாவில் நமது சகோதர சகோதரிகள் தொடர்ந்து உயிரிழக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்கு நம் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது' எனத் தெரிவித்தார்.

அத்துடன் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் நாட்டின் குண்டுவீச்சுத் தொடங்கியதில் இருந்து இதுவரை 21,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் வன்முறை மற்றும் அநீதியின் அனைத்து எல்லைகளையும் தாண்டி இஸ்ரேலியப் படைகளால் சுமார் 9,000 குழந்தைகள் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் அன்வாருல் ஹக் கக்கர் தெரிவித்தார்.

மேலும், “விதிமுறை அனைத்தையும் மீறி இஸ்ரேல் படை 21 ஆயிரம் பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துள்ளது. இதில் 9 ஆயிரம் குழந்தைகள் அடங்குவர். அப்பாவி குழந்தைகள் படுகொலை, காசா மற்றும் மேற்கு கரையில் ஆயுதமின்றியுள்ள பாலஸ்தீனர்கள் இனப்படுகொலை என்பது ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களையும், முஸ்லிம் உலகத்தையும் கவலையைில் ஆழ்த்தியுள்ளது. பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் நாடு இனப்படுகொலை செய்வதையும் கண்டு சகிக்க முடியாத வேதனையில் இருக்கிறோம்” என்றார்

Tags :
banIsrealnewyearPakistan
Advertisement
Next Article