தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தமிழகத்தில் புதிதாக இரு வந்தே பாரத் சேவை!- முழு விபரம்!

08:25 PM Aug 30, 2024 IST | admin
Advertisement

சிங்காரச் சென்னையில் நாளை சென்னை - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூர் இடையே இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களை காணொலிக் காட்சி மூலம் நாளை பிரதமர் துவங்கி வைக்கிறார். சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் துவக்க நாளில், சென்னையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மேலும், இதன் துவக்க விழா சென்னையில் நடைபெறும் நிலையில், இதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை மேயர் மற்றும் சென்னை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். மேலும் மதுரை - பெங்களூர் கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில் துவக்க நாளில், மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு பெங்களூர் சென்று சேரும். மதுரையில் நடைபெறும் இதன் துவக்க விழாவில், மத்திய ரயில்வே துறை மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் வி.சோமன்னா, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மேயர் வி.இந்திராணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Advertisement

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் (20627): இந்த ரயில்களின் வழக்கமான சேவை செப்டம்பர் 2 முதல் துவங்க இருக்கிறது. அதன்படி, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் (20627), சென்னை எழும்பூரில் இருந்து புதன்கிழமை தவிர மற்ற வார நாட்களில் அதிகாலை 05.00 மணிக்கு புறப்பட்டு, மதியம் 01.50 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20628) நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Advertisement

மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் (20671): மதுரை - பெங்களூர் கன்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயில் (20671), செப்டம்பர் 2 முதல் மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை தவிர மற்ற வார நாட்களில் அதிகாலை 05.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.00 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்று சேரும். மறு மார்க்கத்தில், பெங்களூரு கண்டோன்மெண்ட் - மதுரை வந்தே பாரத் ரயில் (20672), பெங்களூரு கண்டோன்மெண்ட்டில் இருந்து மதியம் 01.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.45 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதற்கான முன்பதிவு தொடங்கியது.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே கட்டணமாக...

Chair Car #CC : 1760 & Executive Chaircar #EC : ₹3240

நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே கட்டணமாக...

Chair Car #CC : ₹1735 & Executive Chaircar #EC : 3220 என்று நிர்ணயம்.

-------------------------------
மதுரை சந்திப்பு - பெங்களூர் கன்டோன்மென்ட் இடையே கட்டணமாக... Chair Car #CC : ₹1575 & Executive Chaircar #EC : ₹2865

பெங்களூர் கன்டோன்மென்ட் - மதுரை சந்திப்பு இடையே கட்டணமாக... Chair Car #CC : ₹1740 & Executive Chaircar #EC : ₹3060 என்றும் நிர்ணயம் செய்ய பட்டுள்ளது.

Tags :
Egmore Nagercoilmadurai banModiPMVande Bharat Expressவந்தே பாரத்
Advertisement
Next Article