தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு!

10:35 AM May 25, 2024 IST | admin
Advertisement

மிழ்நாடு அரசு துறைகளில் உள்ள துணைக் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், உதவி ஆணையர் (வணிகவரி), நில நிர்வாகத்தின் துணை தாசில்தார் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப TNPSC தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

குரூப் 1, 2, 4 தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. அதில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும்.

Advertisement

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும்.

அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குரூப் -2, 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் புதிய பாடத்திட்டம் குறித்து அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வு-II (குரூப் II சர்வீசஸ்), ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வுக்கான பாடத்திட்டம் - குரூப் IIA சேவைகள் மற்றும் தேர்வுத் திட்டம் ஆகியவை கமிஷனின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. பாடத்திட்டம்-https://tnpsc.gov.in/English/syllabus.html திட்டம்-https://tnpsc.gov.in/English/scheme.html’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கு தனித்தனியே முதன்மை தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
2Aexamsgroup 2new syllabustnpsc
Advertisement
Next Article