தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஜோஹோவில் புதிய வேலைவாய்ப்பு!

07:29 PM Jun 23, 2024 IST | admin
Advertisement

மிழகத்தில் இயங்கும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஜோஹோவும் ஒன்று. தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், தென்காசி உள்பட உள்ளிட்ட நகரங்களில் ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Advertisement

இந்த நிறுவனத்தில் பணி செய்வது பலருக்கும் கனவாக உள்ளது. இந்த கனவை நனவாக்கும் வகையில் தான் ஜோஹோ நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி ஜோஹோ நிறுவனத்தில் Cloud Operations Engineer பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் லினக்ஸ் ஓஎஸ் (Linux OS), Cloud Infrastructure-ல் Virtualization, Load Balancers உள்ளிட்டவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

Advertisement

வெப் சர்வர்ஸ்களான Apache/Nginx பற்றி அறிந்திருக்க வேண்டும். நெட்வோர்க்கிங் கான்ஸ்செப்ட்டுகளான VLAN, NAT, ARP, Firewall மற்றும் ஸ்வீட்ச் கான்பிகரேஷன் உள்ளிட்டவற்றின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். DNS, DHCP, NTP, Proxy ஆகியவற்றையும் அறிந்திருக்க வேண்டும். ஓபன் சோர்ஜ் ஆட்டோமேஷன் டூல்ஸ்களான Puppet மற்றும் Ansible பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

இதுதவிர Shell/Python ஸ்கிரிப்படிங் , சர்வர் ஹார்ட்வேர்களான சிபியூ, RAM, டிரைவ்ஸ், இன்டனல் டிசைன் மற்றும் Saas காம்பேனென்டஸ் RDBMS, NoSQL, Hadoop பற்றி தெரிந்திருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை மற்றும் 24X7 என்ற முறையில் ஷிப்ட் முறையில் பணியாற்றுவதில் விருப்பம் இருக்க வேண்டும்.

தற்போதைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த பணிக்கு குறைந்தபட்சம் ஒன்று முதல் 4 ஆண்டு வேலை அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணி அனுபவம் மற்றும் திறமையின்படி சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படாததால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லதாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Tags :
Cloud Operations EngineerNew Jobszohoவேலை வாய்ப்பு
Advertisement
Next Article