நியூ சீப் ஜட்ஜ் சஞ்சீவ் கன்னா பயோ டேட்டா!
சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்ட நிலையில்வரும் நவம்பர் 11 ஆம் தேதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.தற்போது தலைமை நீதிபதியாக உள்ள டி. ஒய். சந்திரசூட், அடுத்த மாதம் 10ஆம் தேதியோடு ஓய்வு பெறுகிறார். இந்த சூழலில், சுப்ரீம் கோர்ட்டின் இரண்டாவது மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு சந்திரசூட் கடிதம் அனுப்பினார்.இந்த நிலையில், சந்திரசூட்டின் பரிந்துரையை ஏற்று புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர், "இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி, இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை இந்தியத் தலைமை நீதிபதியாக நியமினம் செய்திருக்கிறார். நவம்பர் 11ஆம் தேதி, இந்த நியமனம் அமலுக்கு வரும்" என குறிப்பிட்டுள்ளார்.புதிதாக தலைமை நீதிபதியாக பதவியேற்கும் சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 13 தேதியோடு நிறைவடையும். எந்த ஒரு நீதிமன்றத்திலும் சஞ்சீவ் கண்ணா தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தது. 51 வது நீதிபதியாக பதவியேற்க இருக்கும் சஞ்சீவ் கன்னா கிட்டத்தட்ட 6 மாதங்கள் தலைமை நீதிபதி பொறுப்பை வகிப்பார்.
நியூ சீப் ஜட்ஜ் சஞ்சீவ் கன்னா பயோ டேட்டா;
1960 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி பிறந்த நீதிபதி கன்னா, 1983 ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, தீஸ் ஹசாரி வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பயிற்சி பெற்றார். டெல்லி ஐகோர்ட் மற்றும் தீர்ப்பாயங்களிலும் வழக்கறிஞராக பணியாற்றியவர். அரசியலமைப்புச் சட்டம், நேரடி வரி விதிப்பு, நடுவர் மன்றம், வணிகச் சட்டம், நிறுவனச் சட்டம், நிலச் சட்டம், சுற்றுச்சூழல் சட்டம் என பல்வேறு துறைகளில் பயிற்சி எடுத்துள்ளார்.
நீதிபதி கன்னா 2005 இல் டெல்லி ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக உயர்த்தப்பட்டார் மற்றும் 2006 இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக டெல்லி சர்வதேச நடுவர் மையம் உள்ளிட்டவைகளிலும் இடம்பெற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ஜனவரி 18, 2019 அன்று, நீதிபதி கண்ணா நீதிபதி கன்னா டெல்லி ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு உயர்த்தப்பட்டார்.அங்கு ற நீதிபதியாக, அவர் 17 ஜூன் 2023 முதல் 25 டிசம்பர் 2023 வரை உச்ச நீதிமன்ற சட்ட சேவைக் குழுவின் தலைவராக பதவி வகித்துள்ளார். அவர் தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகவும், போபாலில் உள்ள National Judicial Academy-ன் ஆளும் ஆலோசகரின் உறுப்பினராகவும் உள்ளார்.
அடிசினல் ரிப்போர்ட்:
சுப்ரீம் கோர்ட் தொடர்பான செய்திகள் முக்கிய அறிவிப்புகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்காக செய்தியாளர்கள் அல்லது நிருபர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்நியமனத்திற்கு சட்ட கல்லூரியில் பட்டம் பெற்றிருப்பது நிபந்தனையாக இருந்து வந்தது.இதனை தளர்த்தி இப்போது ஓய்வு பெற இருக்கும் தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தியில் , ''சுப்ரீம் கோர்ட்டின் அங்கீகாரம் பெற்ற செய்தியாளராக விண்ணப்பிக்க சட்டப்படிப்பு தேவை என்ற நிபந்தனையை தளர்த்தி அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். இனி சட்டபடிப்பு என்ற தகுதி தேவையில்லை. சட்டப் பின்னணி இல்லாதவர்களும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் அங்கீகாரம் பெற்ற செய்தியாளர்கள் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்தி கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது