For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அரிய வாய்ப்பை ஒருபோதும் இழக்காதீர்கள்!

05:13 PM Nov 10, 2023 IST | admin
அரிய வாய்ப்பை ஒருபோதும் இழக்காதீர்கள்
Advertisement

ரிச்சர்ட் டாக்கின்ஸ் Poetry of Reality எனும் பெயரில் ஒரு பாட்காஸ்ட் வழங்கி வருகிறார். அதன் சமீபத்திய அத்தியாயத்தில் அமெரிக்க உயிரியலாளர் ஜெர்ரி காய்ன்-னை பேட்டி கண்டிருக்கிறார். இதில் வழக்கத்துக்கு மாறாக இருவரும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் குறித்துப் பேசுகிறார்கள். [1] இஸ்ரேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் பிரச்சினைக்கான பொறுப்பை ஜெர்ரி காய்ன் முழுமையாக ஹமஸ்சின் முன்தான் கொண்டு வைக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணங்கள் பலமாக உள்ளன. இஸ்ரேல் 2005லேயே காஸாவில் இருந்து முழுமையாக வெளியேறி விட்டது. அதற்குப் பிறகு அது ஹமஸ் வசம்தான் இருந்திருக்கிறது. ஹமஸ் விரும்பி இருந்தால் காஸாவை வளர்த்தெடுத்திருந்திருக்கலாம். ஹமஸ்சுக்கு ஆண்டுக்காண்டு பில்லியன்களில் நிதியும் கிடைக்கிறது. ஆனால் அதையெல்லாம் காஸாவின் கட்டுமானங்களை வளர்க்கப் பயன்படுத்தாமல் அங்கே ரகசிய சுரங்கங்கள் அமைக்கவும், ஆயுதங்கள், ராக்கெட்டுகள் வாங்கவும் மட்டுமே ஹமஸ் பயன்படுத்துகிறது என்கிறார்.

Advertisement

கூடவே, ஹமஸ்சின் முக்கிய தலைவர்கள் எல்லாரும் கோடிக்கணக்கான சொத்துகளை வைத்துக் கொண்டு ஆடம்பரத்தில் உழல்கிறார்கள். இவர்களில் மூன்று பேர் - இஸ்மாயில் ஹனியே, மூஸா அபு மர்சக், கலீல் மஷால் - இவர்களின் சொத்து மதிப்பு மட்டுமே கூட்டினால் 11 பில்லியன் வருகிறது. [2] இவர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் யாரும் காஸாவில் வாழவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. கத்தார், லெபனான் அல்லது கைரோவில்தான் பாதுகாப்பாக வாழ்கிறார்கள். காஸாவில் மக்கள் அஞ்சுக்கும் பத்துக்கும் அடித்துக் கொண்டிருக்க, இவர்கள் வாழ்க்கையோ கிளப்புகளுக்குப் போவது, சொந்தமான தனி ஜெட்டில் பயணிப்பது என்று சொகுசாக போகிறது.

Advertisement

இப்படி காஸாவில் மக்கள் தினம் படும் துன்பங்கள் குறித்த எந்த அக்கறையும் காட்டாத இவர்கள்தான் காஸாவின் வளர்ச்சியின்மைக்கு 2005லேயே அங்கிருந்து வெளியேறி விட்ட இஸ்ரேல் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஹமஸ் விரும்பி இருந்தால் தங்களிடம் இருக்கும் நிதியை வைத்துக் கொண்டு காஸாவை இன்னொரு சிங்கப்பூராக மாற்றி இருக்க முடியும். ஆனால் காஸா ஏழ்மையில் நொந்து கொண்டிருப்பதுதான் அவர்களது பிரச்சாரத்துக்கும் உதவுகிறது என்கிறார். தற்போது நடைபெறும் போரிலுமே கூட காஸாவின் அப்பாவி மக்களை மனிதக் கேடயமாக ஹமஸ் பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டுகிறார். அப்படி அவர்களை முன் நிறுத்தி அவர்கள் சாகும் போது அதை இஸ்ரேல் கணக்கில் எழுதுவதும் இஸ்ரேல் மீதான சர்வதேச எதிர்ப்பை வலுப்படுத்த உதவுகிறது.

இந்த பாட்காஸ்ட்டுக்குப் பின் நான் படித்த வரையில் ஹமஸ் தலைவர்களின் மீதான பல குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று தெரிகிறது. ஹமஸ் தலைவர்கள் சொகுசு வாழ்க்கையில் திளைக்கிறார்கள். அரபு நாடுகளின் நிதி உதவி தவிர, காஸாவுக்கு உள்ளேயே கூட வரிகள் என்ற பெயரில் ஹமஸ் கொள்ளையடிக்கிறது. தீவிரவாத செயல்களுக்கு இவர்கள் கட்டமைத்த சுரங்கங்கள் வழியாக பொது மக்கள் கடத்திக் கொண்டு போகும் பொருட்களுக்கு 20 சதவிகிதம் வரை வரி வசூலிக்கிறார்கள். [3]

ஹமஸ்சின் ஊடக தொடர்பாளர் தாஹிர் எல்-நூனோ என்பவர் நியூ யார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் 'காஸாவுக்கு தண்ணீர், மின்சாரம் கொண்டு வருவதெல்லாம் ஹமஸ் வேலை கிடையாது,' என்று சொல்லி விட்டுக் கூடவே, 'I hope that the state of war with Israel will become permanent on all the borders, and that the Arab world will stand with us,' என்கிறார். அதாவது இஸ்ரேலுடன் நிரந்தமாக போர் தொடர வேண்டும் என்பதுதான் தங்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் என்கிறார். [4]

இரு-தேச தீர்வுகளை நோக்கிய பல்வேறு அமைதி ஒப்பந்தங்களுக்கு இஸ்ரேல் தயாராகவே இருந்திருக்கிறது என்று சுட்டிக் காட்டும் காய்ன் அந்த வாய்ப்புகளை எல்லாம் ஹமஸ் ஒதுக்கித் தள்ளியே கடந்திருக்கிறது, என்கிறார். ஹமஸ்சின் பிடிவாதம் குறித்து பராக் ஒபாமா முன்னர் சொன்ன ஒரு வாக்கியத்தை மேற்கோள் காட்டுகிறார்: Hamas leaders never miss a chance to miss a chance.

கடைசியாக ஒன்று சொல்கிறார்: Anti-Zionism is nothing but Anti-Semitism in disguise. Those who claim they are only anti-Zionist are either deceiving themselves or willfully deceiving others.

- ஸ்ரீதர் சுப்ரமணியம்

Tags :
Advertisement