தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உங்கள் மொபைலில் இருந்து ஒரு போதும் ‘*401#’டயல் செய்ய வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை!

09:55 AM Jan 13, 2024 IST | admin
Advertisement

ப்போது எல்லோர் கையிலும் புழங்கும் மொபைல் போனில் , அடையாளம் தெரிய நபர்களிடம் இருந்து அழைப்புகள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல மோசடிகள் அரங்கேறுகின்றன. தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளா் சேவை மைய பிரதி அல்லது தொழில்நுட்ப பணியாளா் என்ற பெயரில் தொடா்புகொள்ளும் மா்ம நபா்கள், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் சிம் காா்ட் அல்லது தொலைத்தொடா்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறி, பயனர்களின் கடவுசொல், வங்கி செயல்பாடுகளை தெரிந்துகொண்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.இதை தடுக்கும் வகையில், தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பிவிடும் வகையில் வரும் மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சிரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடா்புத் துறை தெரிவித்துள்ளது.தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளா் சேவை மைய பிரதி அல்லது தொழில்நுட்ப பணியாளா் என்ற பெயரில் தொடா்புகொள்ளும் மா்ம நபா்கள், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் சிம் காா்ட் அல்லது தொலைத்தொடா்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனா். இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய ‘ *401#’-ஐ தொடா்ந்து அவா்கள் கூறும் செல்பேன் எண்ணை டயல் செய்யுமாறு கூறுகின்றனா்.

Advertisement

இதைச் செய்வதன் மூலம் வாடிக்கையாளருக்கு வரும் அழைப்புகள், அடையாளம் தெரியாத கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறது.இதைப் பயன்படுத்தி, மா்ம நபா்கள் மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனா். இந்நிலையில், இது போன்ற மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடா்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘எந்த தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளா்களைத் தொடா்பு கொண்டு ‘*401#’ எண்ணை டயல் செய்யுமாறு கூறுவது இல்லை. அவ்வாறு டயல் செய்து, வரக் கூடிய அழைப்புகள் வேறொரு கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், கைப்பேசி அமைப்பில் அழைப்புகளைத் திருப்பி அனுப்பும் வசதியை உடனடியாக செயலிழக்கச் செய்யவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
401central govtNever DialScamwarningYour Mobileமோசடி
Advertisement
Next Article