தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார்: சடலமாக மீட்பு!

01:10 PM May 04, 2024 IST | admin
Advertisement

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் தன்சிங் திடீரென மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியானது. அவரது மொபைல் போனும் சுவிட்ச்ஆஃப் செய்யப்பட்டுள்ளதால், அவரது மாயம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், காணாமல் போன, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Advertisement

முன்னதாக அவர் எழுதியதாக வெளியாகி உள்ள கடிதத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ, ரூபி மனோகர் நிறைய காரியம் செய்து தருவதாக ரூ. 70 லட்சம் வரை வாங்கியதாகவும், திரும்ப கேட்டால், செல்லப்பாண்டியன் என்பவர் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து, உவரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனது வீட்டிற்கு அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலையொட்டி, தீவிரமாக கட்சி பணியாற்றியவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார்,. இவர் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூரைச் சேர்ந்தவர். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட்புரூசுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார்.

தேர்தல் முடிந்த பிறகு, அவ்வப்போது கட்சியினரை சந்தித்து பேசி வந்த நிலையில், அவர் கடந்த 2 நாட்களாக காணவில்லை என கூறப்படுகிறது. அவரை கடந்த இரு நாட்களாக கட்சியினர் மற்றும் உறவினர்களிடம் தேடி வந்த அவருடைய குடும்பத்தினர், ஜெயக்குமார் மாயமனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரது மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது தந்தை கடந்த 2 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்றும், காணாமல் போன தனது தந்தையை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உவரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

முன்னதாக, கடந்த 30 ஆம் தேதி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலருக்கு (எஸ்.பி) மரணம் வாக்குமூலம் என தலைப்பிட்டு கே.பி ஜெயக்குமார் கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார். அதில் ஜெயக்குமார், தன்னுடைய வீட்டிற்கு முன்பு சிலர் நோட்டமிட்டு கொண்டு இருப்பதாகவும், அவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவார்கள் என நினைத்ததாவும், ஆனால், தனக்கு கொலை மிரட்டல் நடத்துவதற்காக அவர்கள் வீட்டை சுற்றி வருவதாக குறிப்பிட்டு சிலரின் பெயர்களை கூறியுள்ளார்.

ஜெயக்குமார் குறிப்பிட்ட பெயர்களில் நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகர், நெல்லை நாடாளுமன்ற தொகுதி மேற்பார்வையாளர் கே.வி தங்கபாலு ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ரூபி மனோகர் நிறைய காரியம் செய்து தருவதாக ரூ. 70 லட்சம் வரை வாங்கியதாகவும், திரும்ப கேட்டால், செல்லப்பாண்டியன் என்பவர் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். கே.வி தங்கபாலு தன்னை தேர்தல் நேரத்தில் செலவு செய்யச் சொன்னதாகவும், அதற்காக ரூ. 11 லட்சம் ரூபி மனோகரிடம் கேட்கவே அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தக் கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயக்குமார் மொபைல் போன் 3 நாட்களாக சுவிட்ச் ஆஃப் ஆகி இருப்பதாக பதற்றத்துடன் அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் குறித்து நெல்லை எஸ்.பி.,சிலம்பரசன் பேசுகையில், ஜெயக்குமார் காணாமல் போனதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாகவும், அவருக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் வருவதாக அவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையிலும் விசாரணை நடைபெறுகிறது என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில், கே.பி.கே ஜெயக்குமார் மாயமாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருப்பது நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தரப்பினரும், மற்றொரு தரப்பினர் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறி வந்தனர். இந்த நிலையில், தனது வீட்டிற்கு அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
congressDistrict SecretaryjayakumarpoliceTirunelveli
Advertisement
Next Article