தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

நீட் முறைகேடு:புகாரை விசாரிக்க 7 பேர் கொண்டக்குழு!

07:23 PM Jun 22, 2024 IST | admin
Advertisement

ர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நீட் தேர்வு முறைகேடு புகாரை விசாரிக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் அமைத்தது. சென்னை ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி, டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா, மத்திய அரசின் கல்வித்துறை இணை செயலர் கோவிந்த் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement

நடப்பாண்டில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்திய இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கி ரத்து செய்யப்பட்டது போன்ற சர்ச்சைகள் வெடித்தன. இந்த விவகாரம் பூதாகரமாக மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்நிலையில் யுஜிசி-யுடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நெட் தேர்வை, என்டிஏ நடத்தவிருந்தது. இந்தத் தேர்வு வரும் 25ம் தேதி தொடங்கி, 27ம் தேதி வரை நடைபெறவிருந்த நிலையில் திடீரென, தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தத் தேர்வை ஒத்திவைப்பதாக என்டிஏ நேற்று அறிவித்தது.

இந் நிலையில் என்டிஏ-வால் நடத்தப்படும் தேர்வுகளை வெளிப்படையாக, சுமூகமாக நடத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு இஸ்ரோ முன்னாள் தலைவரும், ஐஐடி கான்பூர் ஆட்சிமன்ற குழுத் தலைவருமான டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில், உயர்மட்ட நிபுணர் குழுவை மத்திய கல்வித் துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த குழு இரண்டு மாதங்களில் அறிக்கையை சமர்ப்பிக்கும். மேலும், தேர்வு செயல்முறையில் சீர்திருத்தம், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல், என்டிஏ-ன் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து தேவையான பரிந்துரைகளை வழங்கும்" என்றார்.

Tags :
neet
Advertisement
Next Article