தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பேசிய ஆக வேண்டிய நீட் தேர்வு அவலங்கள்!

12:48 PM Jul 22, 2024 IST | admin
Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா என்னும் ஊர், நீட், ஐஐடி ஜேஈஈ தேர்வுகளுக்கான கோச்சிங் நிறுவனங்களுக்கு பேர் போனது. ஆனால், அதை விட சிக்கர் என்னும் இன்னொரு ஊர் இந்த ஆண்டு நம்ப முடியாத அளவுக்கு நீட் தேர்வு வெற்றிகளைக் குவித்திருப்பது பெரும் ஐயங்களை எழுப்பியுள்ளது.இந்த ஊரில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டுமே இந்தியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6.8% இடங்களைக் கைப்பற்றுவார்கள் என கேரியர் 360 என்னும் மாணவர்களுக்கான ஆலோசக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த ஓரு ஊரில் இருந்து மட்டுமே பரிட்சை எழுதிய மாணவர்கள் 4000 அரசுக் கல்லூரி சீட்களைப் பெறுவார்கள் என்கிறது அந்நிறுவனம். தமிழ்நாட்டில் மொத்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சீட்கள் 5600. பல மாநிலங்களில் இதை விடக் குறைவு.

Advertisement

எடுத்துக்காட்டாக தாகூர் பிஜி பள்ளியில் தேர்வு எழுதிய 356 மாணவர்களில், 5 பேர் 700 மதிப்பெண்களும், 45 பேர் 650 மதிப்பெண்களுக்கும் அதிகமாக எடுத்திருக்கிறார்கள். தேசிய அளவில், ஒரு போட்டித் தேர்வு மையத்தில் 1.3% மாணவர்கள் மட்டுமே வெற்றி பெறும் நிலையில், இந்தப் பள்ளியில் மட்டுமே 12.56% (பத்து மடங்கு) அதிக மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது எப்படி எனக் கேள்வி எழுப்புகிறது கேரியர் 360 (கட்டுரைக்கான சுட்டி ).

முக்கியமான புள்ளி விவரங்கள்:

சிக்கர் நகரில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்: 27216
700 மதிப்பெண்களுக்கு மேலே பெற்றவர்கள்: 149
650 மதிப்பெண்களுக்கு மேலே பெற்றவர்கள்: 2037
600 மதிப்பெண்களுக்கு மேலே பெற்றவர்கள்: 4297

இதில் நிச்சயம் ஏதோ பெரிய தில்லுமுல்லு இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் இதை பாராளுமன்றத்தில் பேசியே ஆகவேண்டும். இதற்கு ஒன்றிய அரசுதான் பொறுப்பு. அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஆனால், வழக்கம் போல 1-2 நாட்கள் பேசி விட்டு, நமது ஊடகங்கள் அடுத்த தலைப்புக்குப் போய்விட்டன. இது நம் கல்வியமைப்பின் அடிப்படையையே குலைக்கும் செயல்.

பாலசுப்பிரமணியம் முத்துசாமி

Tags :
examneetPGScamstudentsநீட்முறைகேடு
Advertisement
Next Article