தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார்!

09:00 AM Jun 19, 2024 IST | admin
Advertisement

'பாவோ நுார்மி' 2024 விளையாட்டு பின்லாந்தில் நடந்தது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் ஒலிம்பிக் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா பங்கேற்றார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு (ஜூலை 26-ஆக. 11) தயாராகி வரும் இவர் சமீபத்தில் தோஹா 'டைமண்ட்' லீக் தடகளத்தில் 2 செ.மீ., வித்தியாசத்தில் தங்கத்தை தவற விட்டார்.

Advertisement

இம்முறை முதல் இரு வாய்ப்பில் 83.62 மீ., மற்றும் 83.45 மீ., துாரம் எறிந்தார். மூன்றாவது வாய்ப்பில் அசத்திய இவர் 85.97 மீ., துாரம் எறிந்தார். 4வது வாய்ப்பில் 82.21 மீ., துாரம் எறிந்தார். 5வது வாய்ப்பை வீணடித்தார். 6வது, கடைசி வாய்ப்பில் 82.97 மீ., துாரம் மட்டும் எறிந்தார். இருப்பினும் முதலிடம் பிடித்த (85.97 மீ.,) நீரஜ் சோப்ரா, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார்.

பின்லாந்து வீரர் டோனி கெரானென், நான்காவது வாய்ப்பில் அதிகபட்சம் 84.19 மீ., துாரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். பின்லாந்தின் மற்றொரு வீரர் ஆலிவர் ஹெலாண்டர், 83.96 மீ., துாரம் எறிந்து, வெண்கலம் வென்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ், 82.58 மீ., துாரம் மட்டும் எறிந்து நான்காவது இடம் பிடித்து ஏமாற்றி விட்டார்.

Advertisement

Tags :
Finland!gold medalNeeraj ChopraOliver Helanderpaavo nurmi 2024Paavo Nurmi Games 2024wins gold!
Advertisement
Next Article