சிபிஎஸ்இ பாடப்புத்தக்கங்களில்‘இந்தியாவுக்கு பதில் பாரத்?’ - விவகாரத்தைக் கிளப்பும் என்சிஈஆர்டி!
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களின் கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயர் வைத்த பிறகு மோடி தலைமையிலான மத்திய அரசு நம் நாட்டின் பாரத் என பெயர் மாற்றம் செய்ய தீவிரம் காட்டி வருவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தது. அண்மையில் மீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் கூட இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்றே இடம் பெற்றிருந்தது.பிரதமர் மோடி அமர்ந்திருந்த மேஜையின் இருக்கை மீது இருந்த பெயர் பலகையிலும் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலரும் பாரத் என்பதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதே நேரம் பாரத் என பெயர் மாற்ற எதிர்ப்பும் எழுந்தது. இந்நிலையில் NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரிக்கும் பாட புத்தகங்களில் இந்தியா என்ற சொல்லிற்குப் பதிலாக பாரத் என்ற சொல்லைப் பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது.
என்.சி.ஈ.ஆர்.டி அமைப்பால் சிபிஎஸ் இ பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவிற்கு வரலாற்று ஆய்வாளர் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தார். அந்த குழுவானது சில முக்கியப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதிலும் பாடத்திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட இந்த உயர்மட்டக் குழுவில் உள்ள 8 உறுப்பினர்களும் ஒரே மனதாக ஒரு பரிந்துரையை வழங்கியுள்ளனர்.
அது என்னவென்றால் இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்டது என்றும், காலனி ஆதிக்க அடையாளங்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் பாடப்புத்தகங்களில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்ற சொல்லைப் பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளது
மேலும் இந்து மதம் சார்ந்த படையெடுப்பு, இந்து மதம் சார்ந்த தாக்குதல்கள் எல்லாம் எப்படி இருந்தது போன்ற விஷயங்கள் எல்லாம் சேர்க்கப்பட வேண்டும் என்றும், காலனியாதிக்கத்தின் காரணமாக என்னென்ன அடையாளங்களை எல்லாம் நாடு இழந்ததோ அது எல்லாம் கல்வி முறைகளில் கொண்டுவரப்பட வேண்டும். பண்டைய கலாச்சாரங்கள் குறித்த புரிதல்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் போன்ற பரிந்துரைகளை அந்த குழு வழங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அத்துடன்
மேலும் பண்டைய வரலாறு என்பதற்கு பதிலாக செவ்வியல் வரலாறு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், அனைத்து பாடப்புத்தகங்களிலும் இந்திய பாரம்பரிய அறிவு என்ற பெயரிலும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது..இம்முடீவு வழக்கம் போல் பெரும் விவகாரமாக வெடிக்கும் என்று தெரிகிறது