For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தேசிய விளையாட்டு தினம்!

06:50 AM Aug 29, 2024 IST | admin
தேசிய விளையாட்டு தினம்
Advertisement

புகழ் பெற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த்தின் பிறந்தநாளான ஆகஸ்டு 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1928 முதல் 1964 வரையிலான காலகட்டத்தில் நடந்த 8 ஒலிம்பிக் போட்டிகளில் தயான் சந்த் இடம்பெற்றிருந்த இந்திய ஹாக்கி அணி 7 போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்றது. அவர் பங்கேற்ற 185 சர்வதேச ஹாக்கி போட்டிகளில் 570 கோல்கள் அடித்தார். ஒட்டுமொத்தமாக 1000 கோல்களுக்கு மேல் அடித்திருப்பதாக ‘Goal’ என தலைப்பிட்ட தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டும் உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது இவரது பெயரிலேயே வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி பிறந்த தயான் சந்த், தமது 16-வது வயதில் தந்தையைப் போன்று ராணுவப் பணியில் சேர்ந்தார். அதுவரை ஹாக்கி மட்டையைத் தொடாத அவர், பின்னாளில் ஹாக்கி பயிற்சியால் ஈடுபட்டு சாதிக்கத் தொடங்கினார் 1926 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக தமது சர்வதேச ஹாக்கி பயணத்தை தொடக்கினார். 1928-ஆம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து 3 முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல உறுதுணையாக இருந்தார். பந்தை கட்டுக்கோப்பாக கடத்திச் செல்வதிலும், கோல் அடிப்பதிலும் வல்லவரான தயான் சந்த், 1934 ஆம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

Advertisement

சர்வதேச போட்டிகளில் 400 கோல்களுக்கு மேல் அடித்துள்ள தயான் சந்த், ஓலிம்பிக்கில் மட்டும் 101 கோல்களைப் பதிவு செய்துள்ளார். சுமார் 30 ஆண்டு காலம் விளையாடிய அவர், 1949 ஆம் ஆண்டில் தமது ஹாக்கி மட்டைக்கு ஓய்வு கொடுத்தார். அவரின் சாதனைகளைக் கண்டு உலகமே வியந்தது என்பதற்கு ஆஸ்திரியாவின் வியன்னாவில் தயான் சந்தின் உருவச்சிலை அமைக்கப்பட்டிருப்பதே சான்று. உலகம் முழுவதும் உள்ள ஹாக்கி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த தயான் சந்த்துக்கு இந்தியாவின் மூன்றாவது பெரிய விருதான பத்ம பூஷன் விருது, 1956ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 1979-ஆம் ஆண்டு, 74-வது வயதில் மண்ணை விட்டு அவர் மறைந்தார். தயான்சந்தின் சாதனைகளை போற்றும் வகையில், விளையாட்டுத்துறையில் வாழ்நாள் சாதனை படைப்போருக்கு அவரது பெயரில் 2002 ஆம் ஆண்டு முதல் விருது வழங்கப்பட்டு வருகிறது. தயான் சந்த்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் தேதி, தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஆண்டு தேசிய விளையாட்டு தினத்தின் தீம்:

2024 ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு தினத்தின் கருப்பொருள் 'ஊக்குவிப்பு மற்றும் அமைதியான மற்றும் உள்ளடக்கிய சமூகங்களுக்கான விளையாட்டு' என்பதாகும். தனிநபர்களை ஒன்றிணைப்பதற்கும் சமூக பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கும் ஒரு கருவியாக விளையாட்டின் முக்கியத்துவத்தை இந்த கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறது.

தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம்:

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பொதுமக்கள் வெளிப்புற விளையாட்டுகளில் பங்கேற்குமாறு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நான்கு ஆண்டுகளுக்கு முன் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா இயக்கத்தில் பொது மக்கள் பங்கேற்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்

Tags :
Advertisement