தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு- முழு விபரம்!

06:52 PM Dec 21, 2023 IST | admin
Advertisement

ம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும், விளையாட்டுகளில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கவும், அவர்களுக்கு ஊக்கமளிக்கவும் தேசிய விளையாட்டு விருதுகள் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அர்ஜுனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியார் விருதும், விளையாட்டுகளில் வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதாளர்கள் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement

மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் 26 பேருக்கு விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக இந்திய கிரிக்கெட் வீர முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், அண்மையில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் வீராங்கனை வைஷாலி என்பதும், கடந்த ஆண்டு பிரக்ஞானந்தா அர்ஜுனா விருது வென்ற நிலையில் இந்தாண்டு அவரது சகோதரி வைஷாலிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேட்மிண்டன் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ராங்கிரெட்டி சாத்விக் சாய்ராஜ் ஆகியோர் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதோடு 5 பேருக்கு துரோணாச்சாரியார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு செஸ் பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷ், மல்யுத்தம் பயிற்சியாளர் லலித் குமார், பாரா தடகள பயிற்சியாளர் மகாவீர் பிரசாத், ஹாக்கி பயிற்சியாளர் ஷிவேந்திர சிங், மல்லர் கம்பம் பயிற்சியாளர் கணேஷ் பிரபாகர் ஆகியோருக்கு துரோணாச்சாரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுகளில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்கான தயாந்த் சந்த் விருது, மஞ்சுஷா கன்வர் (பூப்பந்து), வினித் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி) ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 9 ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களால் விளையாட்டு வீரர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.

அர்ஜுனா விருது பெறுவோர் பட்டியல்

1. ஓஜஸ் பிரவின் டியோடலே (வில்வித்தை)

2. அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை)

3. ஸ்ரீசங்கர்.எம் (தடகளம்)

4. பருல் சவுத்ரி (தடகளம்)

5. முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை)

6. ஆர்.வைஷாலி (சதுரங்கம்)

7. முகமது ஷமி (கிரிக்கெட்)

8. அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்)

9. திவ்யகிருதி சிங் (குதிரைச்சவாரி கலை)

10. திக்ஷா தாகர் (கோல்ஃப்)

11. கிரிஷன் பகதூர் பதக் (ஹாக்கி)

12. புக்ரம்பம் சுசீலா சானு (ஹாக்கி)

13. பவன் குமார் (கபடி)

14. ரிது நேகி (கபடி)

15. நஸ்ரின் (கோ-கோ)

16. பிங்கி (லான் பவுல்ஸ்)

17. ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கிச் சூடு)

18. இஷா சிங் (துப்பாக்கிச் சூடு)

19. ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்)

20. அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்)

21. சுனில் குமார் (மல்யுத்தம்)

22. ஆன்டிம் (மல்யுத்தம்)

23. நௌரெம் ரோஷிபினா தேவி (வுஷு)

24. ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை)

25. இல்லூரி அஜய் குமார் ரெட்டி (பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட்)

26. பிராச்சி யாதவ் (பாரா கேனோயிங்)

Tags :
Arjuna Awardawardsfull detailsMinistry of Youth Affairs and Sports.national awardNational Sports Awards
Advertisement
Next Article