தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தேசிய பெண் குழந்தை நாள்

04:41 AM Jan 24, 2025 IST | admin
Advertisement

ந்தியாவில் பெண் குழந்தை தினம் ஒவ்வொரு வருடமும் 24 ஜனவரி 2023 அன்று கொண்டாடப்படுகிறது. தேசிய பெண் குழந்தை தினக்  கொண்டாட்டத்தைவிட, இப்போது பெண் குழந்தைகளின் நலன் குறித்த அலசலே இந்நாளின் தேவையாக இருக்கிறது. இத்தனைக்கும் பெண்களை தெய்வமாக சித்தரித்துக் கொண்டாடும் நம் நாடுதான் இந்தியா. ஆனால் உண்மை நிலை? பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறைவாக உள்ள நாடுகளில் முன்னணியில் இந்தியா இருப்பதை சமீப காலங்களில் நம் நாட்டில் நிகழும் பெண் குழந்தைகளின் மீதான வன்கொடுமைகள் மூலம் கண்கூடாக அறியலாம். வயது வித்தியாசமின்றி சக குடும்பத்தினராலேயே குழந்ததைகள் பாதிக்கப்படுவது வேதனையான ஒன்று. உதாரணமாக இன்றும் தமிழகத்தில் 30% சிறுமிகள் குழந்தைத் திருமணத்துக்கு ஆளாகிறார்கள். மாலையும் தாலியுமாக இருக்கும் அவர்களுக்கு எப்படிச் சொல்வது நம் பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்களை...?!

Advertisement

உயர உயரப் பறந்தாலும் பெண் இனம் சந்திக்கும் பிரச்னைகளின் எண்ணிக்கை குறையவில்லை. இன்றும் அரங்கேறும் சிசுக்கொலைகள், பெண் இனம் வேரோடு அறுக்கப்படுவதற்கான சமூகத்தின் விருப்பத்தை உணர்த்துகிறது. பிறந்த பின்னர் பெண் என்பதற்கான ஒதுக்குதலால் அவள் போதிய சத்துணவு கிடைக்காத குழந்தையாக வளர்கிறாள். பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பெண் எனும் அடையாளம் அந்தக் குழந்தைகளின் தலையில் பெரும் சுமையாக வைக்கப்படுகிறது. பெண் கல்வியில் பெரும் முன்னேற்றம் என பெருமை கொண்டாலும், முழுமையான உயர்கல்வி இன்னும் பெண்களுக்குக் கிடைக்கவில்லை என்பதே நிஜம். சாதிய வழியில் பெண் கல்வி கற்கும் சுதந்திரம் தடைபடுவது ஒருபுறம் என்றால், கிராமப்புறங்களில் பெண் வயதுக்கு வந்தவுடன் கல்வி கற்பதில் தடை விழுந்து விடுவது உண்மை. நகர்ப்புறங்களை சேர்ந்த பெண்களுக்கோ வெளியே கல்வி பயில செல்லும் பெண் காதல் வயப்பட்டு குடும்ப கவுரவத்தை பாதித்து விடுவாளோ என்று எண்ணி அச்சம் கொண்டு, உயர் கல்விக்கான முட்டுக்கட்டை போடப்படுகிறது.

Advertisement

மேலும் நாகரிகம் என்னும் பெயரில் பாரம்பரியத்தை தொலைத்திருக்கிறோம் என்பதை விட ஆரோக்கியத்தை தொலைத்திருக்கிறோம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். பெண்கள் பிறந்தது முதல் ஒவ்வொரு பருவத்தையும் கடக்கவேண்டிய அத்தனையும் இயற்கை யாக இருந்த வரை எந்தவிதமான பிரச்சனையும் இருக்கவில்லை. குறிப்பாக இன்று பெண்களுக்கே உரிய மாதவிடாய் பிரச்சனை, குழந் தையின்மை, கருப்பை பிரச்சனை அத்தனையும் இயல்பாக நடக்கவிடாமல் நம் உணவு பழக்கத்தையும் வாழ்க்கைமுறையையும் மாற் றிக்கொண்டுள்ளோம். அதில் ஒன்று தான் சிறுவயதிலேயே குழந்தைகள் பூப்படைவது.இதனால் உடலுக்குள் நடக்கும் மாற்றங்களை கூட அறிந்துகொள்ளமுடியாமல் பெண் குழந்தைகள் திணறுகிறார்கள்.இரண்டு கெட்டான் வயது என்று சொல்லக்கூடிய இக்காலகட்டத்தில் அவர்களுக்கு மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை தருவதற்கு அம்மாக்கள் தான் படாத பாடு படுகிறார்கள். சற்று ஆழ்ந்து யோசித்தால் மாறிய பழக்கங்களால் இத்தகைய பூப்படைவு விரைவாக நடப்பதையாவது தவிர்க்கலாம். அதற்கு முன் பூப்படையும் காலம், அதிவிரைவில் ஏன் என்பதையும் பார்த்து பிறகு தீர்வு காணலாம்.

அது மட்டுமின்றி பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தான் தற்போது ஓரளவுக்கு வெளிச்சத்துக்கு வருகிறது. ஆனாலும் பெண் குழந்தைகள் சிறு வயதில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுவது பரவலாக நடக்கிறது. அவர்களுக்கு மிகவும் தெரிந்த நபர்களாலேயே, வீட்டிலேயே இந்த பயங்கரம் நடக்கிறது என்பதும் அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள். பள்ளி, வீடு மற்றும் குழந்தைகள் கூடும் இடங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இது தவிர, பெண் சிசுக்கொலை, பாலியல் இச்சைகளுக்காக பெண் பிள்ளைகளை கடத்துவது போன்ற கொடூர குற்றச் செயல்களும் நம் சமூகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இவற்றை நம் சமூகம் பெரிய குற்றங்களாக கருதுகிறாரா என்ற கேள்வி் எழுகிறது. இக்கேள்விக்கான விடையாக, பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பல்வேறு குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் நீதி வழங்கல் முறையிலும் மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான பெண்கள், பெண் பிள்ளைகளுக்கு துரிதமாக நீதி கிடைக்கும் விதத்திலும், குற்றவாளிகள் விரைவாக தண்டிக்கப்படும் வகையிலும் நமது நீதிபரிபாலன முறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் நீதி வழங்க முடியாவிட்டால், பிறகு பெண்களை தாய். சகோதரி, மகள் என்று வர்ணிப்பது அர்த்தமற்றதாகிவிடும்.

நாட்டின் முதல் பெண் குழந்தை தினம் 2008ம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது. இது மத்திய அரசு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கூட்டு முன்னெடுப்பாகும். சமூகத்தில் பல்வேறு நிலைகளில் பெண்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இது முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பாகுபாடு, சமத்துவமின்மை மற்றும் சுரண்டல் போன்ற பிரச்சனைகளை ஒழிப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
and medical carechild marriageelfare of Girl Childhonourlegal rightsnational girl child daynutritionPromoting awareness of issues facing girl child in IndiaProtectionsuch as educationசிறுமிதேசிய பெண் குழந்தை தினம்பெண் குழந்தை
Advertisement
Next Article