For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பிரதமர் மோடி தொடங்கி வைத்த நாகை - காங்கேசன் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தம்!

04:38 PM Oct 18, 2023 IST | admin
பிரதமர் மோடி தொடங்கி வைத்த நாகை   காங்கேசன் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தம்
Advertisement

ம் தமிழகத்தில் உள்ள நாகை சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் கப்பல் சேவை 20-ம் தேதியுடன் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் 2024 ஜனவரியில் சேவை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவை தொடங்கிய 7 நாளில் நிறுத்தப்படுவது சுற்றுலா பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.முன்னதாக நாகப்பட்டினம் - காங்கேசன் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தினசரி சேவையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

கடந்த 14ந்தேதி (அக்டோபர் 14, 2023 சனிக்கிழமை) சுமார் 40 பயணிகளுடன் , தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து, பாக் ஜலசந்தியைக் கடந்து, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்குச் செரியபாணி என்ற பயணிகள் கப்பல் வெற்றிரகமாக பயணித்தது. இந்த கப்பல் சேவையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் வரும் 20ந்தேதியுடன் கப்பல் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

இந்த பயணிகள் கப்பல் நாள்தோறும் காலை 7 மணிக்கு புறப்பட்டு, பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு சென்றடையும். அங்கிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும். பயணிகள் 50 கிலோ எடை வரை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடைமைகளைக் கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கப்பலில் பயணிக்க நபர் ஒன்றுக்கு டிக்கெட்டின் விலை 7,600 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டணம் சற்று அதிகமாக உள்ளது என விமர்சனங்கள் எழுந்தன. மேலும் முன்பதிவு வசதிகள் இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை மறுதினத்துடன் (அக்டோபர் 20ந்தேதி) நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இலங்கை சென்றுள்ள சுற்றுலா பயணிகளில் பெரும்பாலோனோர் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும், மீண்டும் ஜனவரி மாதம் கப்பல் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement