For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

முத்தையா முரளிதரன் பெங்களூர் தொழிலதிபர் ஆகிறார்!.

04:51 PM Jun 19, 2024 IST | admin
முத்தையா முரளிதரன் பெங்களூர் தொழிலதிபர் ஆகிறார்
Advertisement

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் ஐபிஎல் தொடரின் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக செயலாற்றி வருகிறார், இந்நிலையில், இவர் தற்போது கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ் நகரில் கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.1400 கோடி முதலீடு செய்யவுள்ளதாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

Advertisement

இது குறித்து முத்தையா முரளிதரன் பெங்களூரில் அமைச்சர் எம்.பி.பாட்டீலை நேற்றைய சந்தித்து பேசி இருக்கிறார். அதை தொடர்ந்து இது குறித்து அமைச்சர் எம்.பி.பாட்டீல் பேட்டி அளித்துள்ளார். அதில், ” சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இல்ல பதனகுப்பேயில், ‘முத்தையா பெவரேஜஸ் & கன்பெக் ஷனரிஸ்’ என்ற குளிர்பானம் மற்றும் இனிப்பு தொழிற்சாலையை முத்தையா முரளிதரன் துவக்க உள்ளார்.இதற்காக இவர் முதலில் 230 கோடி ரூபாய் முதலீடு செய்ய நினைத்தார். ஆனால், தற்போது இவர் 1,400 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளார். இதற்காக ஏற்கனவே, அவர்களுக்கு 46 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள சிறு சிறு பிரச்னைகளை பூர்த்தி செய்து அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த குளிர்பானம் தொழிற்சாலையில் அடுத்தாண்டு ஜனவரி முதல் உற்பத்தி துவங்கப்பட உள்ளது.மேலும், வரும் நாட்களில் தார்வாடிலும் தொழிற்சாலையின் யூனிட்டை, அவர் துவக்க உள்ளார்” என்று அவர் கூறினார்.

மேலும், நேரில் சந்தித்து பேசிய முரளிதரன், கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு நினைவுப்பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார். இந்த புகைப்படத்தையும் அமைச்சர் எம்.பி.பாட்டீல் அவரது X பகிர்ந்து இருந்தார்.

Advertisement

Tags :
Advertisement