For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தோனியின் ஜெர்சி நம்பரான 7 க்கு ஓய்வு - பிசிசிஐ அறிவிப்பு!

06:34 PM Dec 15, 2023 IST | admin
தோனியின் ஜெர்சி நம்பரான 7 க்கு ஓய்வு   பிசிசிஐ அறிவிப்பு
Advertisement

ந்திய கிரிக்கெட் வாரியம் 2004ல் தோனி அறிமுகமானதில் இருந்து விளையாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் தோனியின் ஜெர்சி நம்பரான 7 க்கு பிசிசிஐ ஓய்வளித்துள்ளது. இனி எந்த கிரிக்கெட் வீரர்களுக்கும் ஜெர்ஸி 7 வழங்கப்படாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.இதற்கு முன்னர் சச்சினுக்கு மரியாதை அளிக்கும் விதமாக ஜெர்ஸி 10 க்கு ஓய்வளித்தனர். இந்நிலையில் தோனியின் ஜெர்ஸி 7 க்கும் ஓய்வளித்தது சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisement

மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி பல சாதனைகளைப் படைத்துள்ளது.கிட்டத்தட்ட15 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியில் விளையாடி வருகிறார் தோனி. 2007ம் நடைபெற்ற டி20 உலககோப்பையில் இந்தியா வெற்றிபெற்றதுக்கு முக்கிய காரணம் தோனியின் கேப்டன்ஸி தான்.அதுமட்டுமல்லாது 2011ம் ஆண்டின் உலககோப்பை, 2013 சாம்பியன் ட்ராஃபி ஆகிய சர்வதேச போட்டிகளிலும் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் தோனி. இதுவரை 350 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக்கொண்ட தோனி 10,773 ரன்களைக் குவித்துள்ளார். அதேபோல் 90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களும், 98 டி20 போட்டிகளில் 1,617 ரன்களும் எடுத்துள்ளார்.2010ம் ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு கேப்டன்ஸி செய்து வரும் தோனி ஐந்து வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளார்.விராட் கோலி ,ரோகித் ஷர்மா ஆகிய வீரர்களையும் இந்திய அணியில் நிரந்தர வீரராக மாற்றியது தோனிதான். எப்போது இளம் வீரர்களுக்கு வழிவிடுவது என்பதை நன்கு அறிந்து நடப்பவர் தோனி.

Advertisement

மேலும் தோனி ஒரு கேப்டனாக டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் 60 கிக்கெட்டுகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 200 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகளை எடுத்த கேப்டன் என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.இதுவரை அனைத்து விதமான தொடர்களிலும் 332 போட்டிகளில் கேப்டன்ஸி செய்து அதிக கேப்டன்ஸி செய்த வீரர் என்ற சாதனையையும் படத்துள்ளார். அதேபோல் ஒரு டி20 போட்டியில் அதிக பந்துகளைப் பிடித்த வீரர் என்ற பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளார்.தோனி தனது அட்டகாசமான விளையாட்டுகளின் மூலமும் தனது கேப்டன்ஸி மூலமும் இந்திய மக்களில் இதயத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தார் என்றே கூற வேண்டும்.

அந்த வகையில் அவருடைய 7 ஜெர்ஸி இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு உணர்வுப்பூர்வமாக மாறியது. ஜெர்ஸி 7 என்றால் அது தோனித்தான் என்று மனதில் பதியும் அளவிற்கு மாறிவிட்டது.இதனைக் கருத்தில் கொண்ட பிசிசிஐ ஜெர்ஸி 7க்கு நிரந்தர ஓய்வு அளித்துள்ளது. அதாவது இனி கிரிக்கெட்டில் எந்த வீரர்களும் ஜெர்ஸி 7 ஐ அணிய முடியாது.

இது குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா , தோனியின் ஜெர்சி நம்பர் 7க்கு ஓய்வு அளிக்கப்பட்டது என்பது ஒரு நல்ல முடிவு. இந்திய கிரிக்கெட்டுக்கு தோனியின் இணையற்ற பங்களிப்புகளுக்கு இது ஒரு சான்றாகும். இந்தியா கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர். எனவே, பிசிசிஐயின் இந்த முடிவுஎன்பது எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்குக் கிடைத்த மரியாதையாகும். உலக கிரிக்கெட்டிற்கும் இந்திய கிரிக்கெட்டிற்கும் மகத்தான பங்களிப்பை செய்துள்ளார். இதன்மூலம் ஜெர்சி நம்பர் 7-ஐ இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது. அனைத்து வகை கோப்பைகளை வென்ற முன்னாள் இந்திய கேப்டனான எம்எஸ் தோனி, தனது 15 ஆண்டுகால வாழ்க்கையில் கிரிக்கெட் உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளார் என தெரிவித்தார்.

Tags :
Advertisement