தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

புதுடெல்லி எய்ம்ஸில் 3000-க்கும் மேற்பட்ட காலியிட வாய்ப்புகள்!

09:48 PM Nov 21, 2023 IST | admin
Advertisement

ந்தியாவில் தன்னாட்சி பெற்ற பொதுத்துறை உயர்கல்வி மருத்துவக் கல்லூரிக் குழுமமாக அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences, AIIMS) செயல்பட்டுவருகிறது. புவனேஸ்வர், ஒரிசா, போபால், பாட்னா போன்ற பல இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டுவந்தாலும், டெல்லி தான் இந்தியாவின் முக்கியமான மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையாக இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையின் கீழ் குறைந்த செலவில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதால், அனைத்துத்தரப்பட்ட மக்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் வகையில் உள்ளது. இதோடு எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில் அவ்வப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகும். அதன்படி, தற்போது டெக்னிசியன், தட்டச்சு எழுத்தர், சமூக பணியாளர், பல்நோக்குப் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் பி மற்றும் சி பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்(புதுடெல்லி -எய்ம்ஸ்) வெளியிட்டுள்ளது.

Advertisement

மொத்த காலியிடங்கள்:

Advertisement

3036

இட ஒதுக்கீடு:

இப்பதவிகளுக்கு, இந்திய அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை பொருந்தும். எனவே, விண்ணப்பதாரர்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படும்.

முக்கியமான நாட்கள்:

ஆட்சேர்ப்பு அறிவிக்கை நாள் : 17.11.2023

இணையதள விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் : 01.12.2023, மாலை 5 மணிக்குள்விண்ணப்பக் கட்டணம்: அன்றிரவுக்குள்ளே கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்.

கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 18 . 12. 2023

விண்ணப்பக் கட்டணம்:

பொது / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் : ரூ.3000/- (ரூபாய் மூன்று ஆயிரம் மட்டும்)

பட்டியல்/ பழங்குடியினர் / பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் - ரூ.2400/ (ரூபாய் இரண்டுஆயிரத்து நானூறு மட்டும்)

தேர்வில் கலந்து கொள்ளும் பட்டியல்/ பழங்குடியின விண்ணப்பதாரர்களின் விண்ணப்பக் கட்டணம் விரைவில் தேர்வு முடிவுகள் அறிவித்த பிறகு திருப்பித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள்:

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தும் முறை:

விண்ணப்பதாரர்கள் நெட்பாங்கிங் / கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு மூலம் நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். ஏதேனும் பரிவர்த்தனைகள் / ப்ராசசிங் கட்டணம் பொருந்துமாறு இருப்பின் அவை வங்கிக்கு செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை விண்ணப்ப கட்டணம் செலுத்தப்பட்டு விட்டால் எந்த ஒரு சூழ்நிலையிலும் திருப்பித்தரபடமாட்டாது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணமின்றி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் பூரணமாக நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பதாரர்கள் எய்ம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு ஆந்தை வேலைவாய்ப்பு - என்ற லிங்கைக் கிளிக் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த இணைப்பைக் கிளிக் செய்து ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்.

Tags :
3036 vacanciesAIIMS Delhimassive recruitment driveNon-Faculty positions
Advertisement
Next Article