ஸ்டேட் பேங்க்கில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளார்க் பணியிட அறிவிப்பு!
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ்பிஐ வங்கியை பொறுத்தவரை பிற வங்கிகளை போல ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் வாயிலாக ஆட்சேர்ப்பு நடத்துவதில்லை. நேரடியாக எஸ்.பி.ஐ வங்கியே ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பினை வெளியிட்டு பணியிடங்களை நிரப்பி வருகிறது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியில் பல பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கவுரவமான வேலை, நல்ல சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை கிடைப்பதால் வங்கிகளில் வேலை பார்க்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக இருக்கும். இதனால், போட்டி தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் தேர்வர்கள் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகும் என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருப்பார்கள். இந்த நிலையில்தான் தேர்வர்கள் பெரிதும் எதிபார்த்து இருந்த எஸ்பிஐ வங்கியில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்:
ஜூனியர் அசோசியேட் எனப்படும் கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 13,735 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சென்னை, புதுவை வட்டாரத்தில் 340 காலிப்பணியிடங்கள் உள்ளன. திருவனந்தபுரம் வட்டாரத்தில் 426 பணியிடங்கள் உள்ளன. குஜராத்தின் அகமாதாபத் வட்டாரத்தில் 1073 பணியிடங்களும், ஆந்திர மாநிலம் அமராவதி வட்டாரத்தில் 50 பணியிடங்களும் என மொத்தம் 13,735 பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதும். டிகிரி இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்ககலாம்.
வயது வரம்பு:
01.04.2024 தேதிப்படி 20 வயது முதல் 28 வயதுக்குட்ப்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்க்கு அடிப்படை சம்பளமாக ரூ..26,730 நிர்ணயிக்கப்படும். இதில் இருந்து இதர சலுகைகள் சேர்த்து கணக்கிடப்பட்டு ரூ.64,480 வரை கிடைக்கும். சம்பளம் பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முறை:
முதல் நிலை தேர்வு, மெயின்ஸ் தேர்வு, மொழித்திறன் தேர்வு ஆகியவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வு வினாத்தாள் இருக்கும்.
விண்ணப்ப கட்டணம்: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ. 750 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்:
17.12.2024,
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.01.2025 .
தேர்வு அறிவிப்பினை படிக்க:
ஆந்தை ரிப்போர்ட்டர் வேலைவாய்ப்பு/வழிகாட்டி என்ற லிங்க்-கை செய்யவும்