சுதந்திர தின விழாவில்,மோடி அணியும் தலைபாகை!
இந்திய தலைநகர் டெல்லியில் இன்று நடந்த 78வது சுதந்திர தின(Independence Day 2024) நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி ஆரஞ்சு மற்றும் பச்சை நிற தலைப்பாகை அணிந்துள்ளார். பிரதமர் மோடி சுதந்திர தினத்தந்று என்ன தலைப்பாகை அணிவது என்று முடிவு செய்ய 2 அதிகாரிகள் தலைமையில் ஏழு பேர் கொண்ட கமிட்டி உண்டாம்!
2014 : பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கொடியேற்ற வந்த மோடி, ஜோத்புரி பந்தேஜ் தலைப்பாகையை சிவப்பு நிறத்தில் அணிந்திருந்தார்.
2015 : சிவப்பு மற்றும் நீல நிறத்தில் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்திருந்தார்.
சுதந்திர தினம்
2016 : இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களின் கலவையில் நேர்த்தியான தலைப்பாகை அணிந்தார்.
2017 : பிரகாசமான மஞ்சள் நிற தலைப்பாகையுடன் சிவப்பு நிறத்தில் தங்க இழைகள் பதிக்கப்பட்டிருந்தது.
2018 : எளிமையான காவி நிற தலைப்பாகை அணிந்திருந்தார்.
2019 : ராஜஸ்தானில் இருந்து துடிப்பான மஞ்சள் தலைப்பாகை அணிந்திருந்தார்.
2020 : கொரோனா காலத்தில், குங்குமப்பூ மற்றும் பழுப்பு நிற சஃபாவைத் தேர்ந்தெடுத்து, தலைப்பாகை மற்றும் பச்டேல் ஷேட் அரைக் கை குர்தா அணிந்தார்.
2021 : பிரதமர் மோடி, 2021ல், சிவப்பு நிற வடிவங்கள் கொண்ட குங்குமப்பூ தலைப்பாகையை அணிந்திருந்தார்.
2022 : 75 ஆண்டுகள் நிறைவையொட்டி, இந்தியாவின் மூவர்ணக் கொடி அச்சிடப்பட்ட வெள்ளைத் தலைப்பாகை
அணிந்திருந்தார்.
2023: ராஜஸ்தானி பந்தனி அச்சுத் தலைப்பாகை அணிந்திருந்தார்