பிரதமர் பதவியில் அமர்ந்த நாள் முதலாகவே மோடி, ஒரு சுற்றுலாப்பயணிதான்!
வடமாநிலங்களில் பாஜகவின் வெற்றியை அதிகப்படுத்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கிடைத்திருக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த் தேர்தல் ஆயுதம் அயோத்தி ராமர் கோயில்தான்...!இந்தியாவின் பாரம்பரியத்தை , புராண கால கதைகளை நினைவுக்கு கொணர்ந்து மகிழ்வது என்பது, எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றுதான். ஆனால், ஒவ்வொரு குடிமகனின் ரசணைக்குட்பட்ட ஒரு விடயத்தை, பெரும்பான்மையான மக்களின் விருப்பமாக மாற்றுவதற்கு கொடுக்கப்படும் அதீத அழுத்தம் பெரும்பாலும் அமுதமாக இன்பத்தை தருவதற்குப் பதிலாக, நஞ்சுவின் சுவையை உணர்த்துவதாக தான் அமைந்துவிடுகிறது என்பது பகுத்தறிவாளர்களின் கருத்தாக இருக்கிறது...
பழம்பெருமைகளை பேசுவதில் காட்டும் அக்கறையை விட, அறிவார்ந்த, அறிவியல் ரீதியான வளர்ச்சியை நோக்கி பயணிப்பதுதான் மானுடத்தின் மகத்துவமாக வரலாற்றில் பதிவாகும். என்னை எப்போதுமே வியப்பில் ஆழ்த்துவது வாண வேடிக்கைககளும் கோமாளித்தனமாக செயல்களும் அல்ல...ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு நாளும் அறிவுக்கண்ணை திறக்க வைக்கும் விடயங்கள்தான்...!
பத்தாண்டுகளுக்கு முன்பு அயோத்தி., சாதாரண சுற்றுலா தலம் தான். ஆனால், மத்திய பாஜக அரசால், இன்றைக்கு புனித தலமாகவும் ஆன்மிக தலமாகவும் மாறியிருப்பதற்கு பாஜக தலைவர்களின், குறிப்பாக அரசியல் ஆதாயத்திற்காக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பத்தாண்டு கால தனித்த உழைப்புதான் பிரதானம்.. இந்திய திருநாட்டின் பிரதமர் பதவியை அலங்கரிப்பவர், அறிவில் சிறந்தவராக, ஜனநாயகத்தை மதிப்பவராக, குடிமகன்களின் தவறுகளை மன்னித்து அறிவழியில் நடத்துபவராகவும் பூமியை விட மிகுதியாக தாங்கும் மனப்பான்மை கொண்டவராகவும், ஆடம்பர வாழ்க்கை மீது பற்றற்றவராகவும் திகழ வேண்டும்.
ஆனால், பிரதமர் பதவியில் அமர்ந்த நாள் முதலாகவே மோடி, ஒரு சுற்றுலாப்பயணி போலதான் பத்தாண்டு காலத்தையும் கடத்தியிருக்கிறார். பத்தாண்டு காலத்தில் அவர் ஆற்றிய உரைகள் மூலம் இந்திய திருநாட்டின் குடிமகனுக்கு எந்தவொரு பெருமையும் ஏற்பட்டுவிடவில்லை என்பதுதான் நிதர்சனம். மனிதவாழ்வை புரட்டி போடும் அறிவாயுதமாகவும் மாறிவிடவில்லை.
அடுத்த 5 ஆண்டுகள் மட்டுமல்ல, மோடியின் ஆயுள் முழுவதும் இந்திய திருநாட்டின் பிரதமராக பதவி வகிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்குமானால், அதானியும், அம்பானியும் தான் உலகத்திற்கு தெரிவார்களே தவிர.,பண்டைய காலம் முதலே நாகரிகத்தின் தொட்டில் என்ற பெருமையும், ஜனநாயகத்தின் கோயில் இந்தியா என்பதெல்லாம் கேலிக்குரிய ஒன்றாகி விட்டது என்ற அவப்பெயர்தான், உலகின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் எதிரொலிக்கும்...
இந்தியாவிற்கு இதுவரை இல்லாத அவப்பெயரை தேடி தரப் போகிறமோ...?1