தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

’மிஷன்-சாப்டர் 1’-விமர்சனம்!

08:32 PM Jan 13, 2024 IST | admin
Advertisement

ஜெ.வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுத்த டைரக்டர் விஜய் மற்றும் ஆக்டர் அருண் விஜய் கூட்டணியில உருவாகி இருக்கிற ஆக்சன் படம். தொடக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற டைட்டிலில் பூஜைப் போடப்பட்ட இந்தப் படம் மிஷன் சாப்டர் 1 ஆக மாறி ரிலீஸ் ஆகி உள்ளது. .

Advertisement

கதையை சிம்பிளாகச் சொல்வதானால் தன் குழந்தையின் ஆபரேஷனுக்காக லண்டன் போகும் அருண் விஜய், அங்கே எதிர்பாராத விதமா ஒரு வழக்கில் சிக்கி, ஜெயிலுக்குள் போய் விடுகிறார்.. அதே ஜெயியில் இருக்கும் தீவிரவாதிகள் சிலரை விடுவிக்க, ஒரு மிஷன் அங்க நடக்கிறது. தீவிரவாதிகள் நடத்துற அந்த ஆபரேஷன்ல இருந்து, அந்த ஜெயிலையே எப்படி ஹீரோ காப்பாற்றுகிறார், ஏன் காப்பாற்றுகிறார், யார் அவர் ? என்பதையெல்லாம் கண், காது, மூக்கு வைத்து சொல்லி இருப்பதுதான் மிஷன் சாப்டர் 1.

Advertisement

பெரும்பாலும் லண்டனிலேயே பலக் காட்சிகள் எடுத்து இருக்கிறார்கள். இயக்குநர் விஜய் மெலோ டிராமா படங்கள்தான் இதுவரைக்கும் எடுத்திருக்கிறார், அவர் முதல் முறையா ஒரு முழு ஆக்ஷன் படமாக இந்த படத்தை பண்ணி இருக்கார். அதே சமயம் அருண் விஜய் ஏகப்பட்ட ஆக்சன் படங்கள் பண்ணி இருந்தாலும், இந்த படத்தில் கொஞ்சம் மாறுபட்டு நடிக்க முயற்சி பண்ணி இருக்கிறார்.

வித்தியாசமான கூட்டணியில் அட்டகாசமாக வந்திருக்க ஆக்ஷன் படம் தான் மிஷன் சாப்டர் 1. ஆனால் இப்போதெல்லாம் நிறைய ஆக்ஷன் படங்கள் இதே மாதிரி கதைகளுடன் வந்ததினால், அந்த அளவுக்கு ஈர்க்க வில்லை. ஆனால் படத்தோட ஐடியா ரொம்ப சூப்பர். . அதுவும் இன்டர்வல்லில் வரும் அந்த டுவிஸ்ட் எதிர்பாராததுதான் ஆனா அதை தொடர்ந்து வரும் பிளாஷ்பேக், அதை அடுத்த நடக்கும் ஆக்ஷன் காட்சிகளும் படத்துக்கு பிளஸ்-ஸாக அமையாமல் மைனஸாக மாரி விட்டது, காரணம் அது திரைக்கதையில் கொஞ்சம் கூட நம்பும்படி இல்லாததால், திரையில் நாயகன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது கொட்டாவி வருவதுதான் சோகம்..

ஜெயில் செட் சூப்பராக இருக்கிறது. ஆனால் அந்த ஜெயிலுக்குள்ள இருந்து தீவிரவாதிகள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதும் அவர்களுடன் ஹீரோ எப்படி டிஷ்ஷூம் டிஷ்ஷூம் பண்ணுகிறார் என்பதையெல்லாம் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் காட்டி சொதப்பி விட்டார்கள்.! இதற்காக கையில் உள்ள போனில் ஏதாவது வீடியோ கேம் பார்த்திருந்தால் கூட இக்காட்சிகளை இன்னும் அழகாக பண்ணி இருக்க முடியும். அதிலும் இதுவரை ஏகப்பட்ட ஜெயில் படங்கள் வந்திருகிறது அந்த படங்களில் இருந்தாவது புதிதாக ஐடியாக்கள் கிடைத்திருக்கும்.

தீவிரவாதிகள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள், ஹீரோவும் அவர்களை துரத்திக் கொண்டே இருக்கிறார். தீவிரவாதிகளும் புத்திசாலித்தனமாக எந்த திட்டமும் போடுவதில்லை, ஹீரோவும் புத்திசாலித்தனமா அதை முறியடிக்கவும் இல்லை. வழக்கமாக நாம் பார்க்கும் ஆக்ஷன் படங்களில் வர அதே சீக்குவன்ஸ் தான் இந்த படத்திலும் வருகிறது. புதிதாக எதுவுமே இல்லாதது படத்துக்கு பெரிய மைனஸ்.

பல வருஷத்துக்கு அப்புறமா எமி ஜாக்சன் ..அதுவும் லண்டன் ஜெயிலரா வருகிறார்.. போனார். இவ்வளவு வீக்கான ஒரு ஜெயிலர் எந்த நாட்டிலும் இருக்க மாட்டார்கள் பாவம்தான்.

மொத்தத்தில் படத்தோட ஆக்ஷன் காட்சிகளையாவது இன்னும் சிறப்பாக அமைத்து இருந்தால் கூட இது ஒரு அட்டகாசமான படமாக மாரி இருக்கும். ஆனால அருண் விஜய்க்கும்,டைரக்டர் விஜய்க்கும் ரொம்ப வீக்கான ஒரு படமாக அமைந்து விட்டது .!

மார்க் 2.24/5

Tags :
Amy JacksonArun VijayGV prakashMission Chapter 1NimishareviewSubaskaranVijay
Advertisement
Next Article