தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பொன்முடிக்கு அமைச்சர் பதவி:கவர்னர் போக்கைக் கடுமையாகக் கண்டித்த சுப்ரீம் கோர்ட் - முழு விபரம்!

08:05 AM Mar 22, 2024 IST | admin
Advertisement

மிழ்நாட்டில் பொன்முடி விவகாரத்தை சர்ச்சையாக்கி விட்ட கவர்னருக்கு இதில் முடிவெடுக்க இன்று வரை சுப்ரீம் கோர்ட் கெடு வழங்கி இருப்பது பெரும் அதிர்வலையையை ஏற்படுத்தியுள்ளது. . அதிலும் இவ்விவகாரத்தில் கவர்னர் தனி வழியில் செயல்பட்டால் சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை வேறு விதமாக இருக்கும். அதனை தற்போது கூற முடியாது. மேலும் கவர்னருக்கு நாங்களே உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை வரும். குறிப்பாக அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு கவர்னர் நடக்க வேண்டும் என நேரடியாக நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டியது இருக்கும்.கவர்னர் ஆர்.என்.ரவி என்ன உச்ச நீதிமன்றத்தின் சட்ட விதிகளுக்கு எதிராக விளையாடுகிறாரா என்று சரமாரி கேள்வி எழுப்பியதோடு வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைது இருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை ஐகோர்ட் விதித்த தண்டனை மீது, சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது. அதைத்தொடர்ந்து, பொன்முடியை மீண்டும் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கக் கோரி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால், சுப்ரீம் கோர்ட் பொன்முடிக்கு நிரந்தர தடை விதிக்கவில்லை எனக் கூறி பதவிப் பிரமாணம் செய்துவைக்காமலிருந்தார் கவர்னர். இதை அடுத்து, முதல்வர் பரிந்துரைத்தும் கவர்னர் மறுப்பு தெரிவிப்பதாக ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது.

Advertisement

மேற்கண்ட வழக்கானது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் தனது வாதத்தில், “இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இது ஒரு அமைச்சர் சார்ந்த ஒன்றாகும். பொன்முடிக்கு விதிக்கப்பட்டது தண்டனையும், குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பையும் சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்து உள்ளது. இதை அடுத்து முதல்வரின் பரிந்துரைப்படி பொன்முடிக்கு தமிழ்நாடு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுக்கிறார். இந்த செயல் அரசியல் அமைப்புக்கு எதிரானதாகும். கவர்னருக்கு இதுபோன்ற அதிகாரத்தை யார் வழங்கியது. குறிப்பாக தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தகுதி நீக்கம் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் பேரவை உறுப்பினரான ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க கவர்னர் எப்படி மறுப்பு தெரிவிக்க முடியும்.

அதிலும், முதல்வர் பரிந்துரை செய்த ஒருவருக்கு நான் பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என கவர்னர் கூறியுள்ளது என்பது அரசியல் சாசன விதிகளுக்கு புறம்பானது ஆகும். கவர்னர் ஆர்.என்.ரவியின் இதுபோன்ற நடவடிக்கையால் ஒவ்வொரு முறையும் இவ்வாறு நீதிமன்றத்தை தான் நாங்கள் நாட வேண்டுமா என்ற கேள்வி எங்களுக்கு எழுகிறது. குறிப்பாக தண்டனை நிறுத்தி வைத்த பிறகு பொன்முடிக்கு மீண்டும் பேரவை உறுப்பினர் பதவி திரும்ப கிடைத்து விடும். ஆனால் அமைச்சர் பதவிக்கு திரும்பவும் பதவிப் பிரமாணம் எடுத்துதான் ஆக வேண்டும். அந்த சட்ட விதிகள் கூட கவர்னருக்கு தெரியவில்லையா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

மேலும் பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் திட்டமிட்டு தவறு இழைத்துள்ளார் என்பதில் சிறிதளவும் சந்தேகம் கிடையாது. ஏற்கனவே சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி கொடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்தார். பின்னர் உச்ச நீதிமன்றம் அந்த விவகாரத்தில் தலையிட்டவுடன்தான் குடியரசுத் தலைவருக்கு அதனை அனுப்பி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தான் தற்போது ஒருவரை அமைச்சராக்க மாநில முதல்வர் பரிந்துரைத்ததை ஆளுநர் நிராகரித்துள்ளார். இந்த நடவடிக்கை என்பது அரசியல் சாசனத்தின்படி மிகவும் விநோதமாக இருக்கிறது. இதனை ஏற்கவே முடியாது“ என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி ’ இந்த வழக்கை நாளைக்கு (இன்று)ஒத்தி வையுங்கள். இதுகுறித்து விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிக்கிறோம்“ என்று கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “ இந்த விவகாரத்தை பொறுத்தவரை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி என்ன செய்கிறார் என்பது அவருக்கு தெரிகிறதா அல்லது இல்லையா? அவருக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா? ஒரு மாநிலத்தின் முதல்வர் கொடுக்கும் பரிந்துரையை கவர்னர் எப்படி நிராகரிக்க முடியும். அதற்கான அதிகாரம் அவருக்கு கிடையாது.குறிப்பாக யாரை அமைச்சரவையில் சேர்ப்பது என்பது முதல்வரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதில் கவர்னர் எப்படி தலையிட முடியும்? அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக கவர்னர் செயல்படலாமா? இந்த விவகாரத்தில் கவர்னருக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து ஆலோசனை கூற வேண்டும். இல்லை என்றால் கடுமையான கருத்துகளை சுப்ரீம் கோர்ட்டின் தரப்பில் இருந்து பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இந்த விவகாரத்தில் அமைச்சராக மீண்டும் பொன்முடி பதவி பிரமாணம் எடுக்க வேண்டுமா? அல்லது நேரடியாக அவருக்கு முதல்வர் துறைகளை ஒதுக்கலாமா ? என்று கேட்டார்.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், “இந்த விவகாரத்தில் நேரடியாக துறைகளை ஒதுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும். மேலும் பதவிப் பிரமாணம் தேவையில்லை எனவும் நீதிமன்றம் தெரிவிக்க வேண்டும்“ என்று கூறினார்.

இதை அடுத்து பேசிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “`தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்திவைத்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, பதவிப் பிரமாணம் செய்துவைக்க மாட்டேன் என்று கவர்னர் கூறுகிறாரா... அவரிடம் கூறுங்கள், இந்த விஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்போகிறோம். பதவிப் பிரமாணம் செய்து வைப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்று கவர்னர் எப்படிக் கூற முடியும். இந்த விவகாரத்தை நாங்கள் நாளை வரை கவர்னரிடம் விடுகிறோம். நாளை வரை பொறுத்திருப்போம், அதுவரை கவர்னர் தரப்பிலிருந்து எதுவும் வரவில்லை என்றால், அரசியலமைப்பின்படி நடந்துகொள்ளும்படி உத்தரவு பிறப்பிப்போம்' என்று கூறினார்.

அதற்கு, மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல், `ஆளுநர் கூறுவதை நான் நியாயப்படுத்தவில்லை, அதை அவர் செய்த விதத்தை தான் நான் கூறுகிறேன்' என்றார்.

அதையடுத்து, தலைமை நீதிபதி சந்திரசூட், `அட்டார்னி ஜெனரல்... ஆளுநரின் நடத்தை குறித்து நாங்கள் தீவிரமாகக் கவலைப்படுகிறோம். அதை நீதிமன்றத்தில் நாங்கள் உரக்கச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அவர் இந்திய சுப்ரீம் கோர்ட்டை மீறுகிறார்... அவருக்கு அறிவுரை கூறியவர்கள் யாரும் அவருக்கு சரியாக அறிவுரை கூறவில்லை. ஒரு தண்டனையை நிறுத்திவைப்பதாகக் கூறினால், தண்டனை நிறுத்திவைக்கப்படுவது தான் என்பதை கவர்னரிடம் தெரிவிக்க வேண்டும். ஒரு நபர் மீது எனக்கு வேறுபட்ட கண்ணோட்டம் இருக்கலாம். ஆனால், நாம் அரசியலமைப்பின்படியே செல்ல வேண்டும். இவரை நியமிக்க வேண்டும் என்று முதல்வர் கூறினால், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக கவர்னர் அதைச் செய்ய வேண்டும்" என்று கூறி, நாளை மீண்டும் விசாரிக்கப்படும் விசாரணையை ஒத்திவைத்தார்.

Tags :
GovernorPonmudiSupreme Courஅமைச்சர்கவர்னர்சுப்ரீம் கோர்ட்பொன்முடி
Advertisement
Next Article