For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சாலைகளில் உள்ள பாதிப்புகளை நெடுஞ்சாலைத் துறைக்கு தெரிவிக்க, ஒரு செயலி வந்தாச்சு!

07:08 PM Nov 01, 2023 IST | admin
சாலைகளில் உள்ள பாதிப்புகளை நெடுஞ்சாலைத் துறைக்கு தெரிவிக்க  ஒரு செயலி வந்தாச்சு
Advertisement

நாடெங்கும் சாலைகள் பல ஊர்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சென்னையில் பல இடங்களில் இன்னமும் மோசமான நிலையில் தான் இருக்கிறது. அரசு சார்பில் ஒப்பந்ததார்கள் போடும் சாலைகளின் தரம் குறித்து நீண்ட காலமாக விமர்சனங்கள் உள்ளன. ஏனெனில் சாலைகள் சில நாட்களிலேயே பெயர்ந்துவிடும் என்றும், எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சாலையின் தரம் மட்டும் மாறுவதே இல்லை என்ற புகார்கள் உள்ளது. இந்நிலையில் சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவிக்க ஏதுவாக தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் 'நம்ம சாலை' என்ற செயலி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு, சாலையில் உள்ள பள்ளங்கள் உள்ளிட்ட குறைகளை புகைப்படம் எடுத்து இந்த செயலியில் பதிவிட்டால் உடனடியாக அவை சரி செய்யப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியாவில் 2022-ம் ஆண்டு சாலை விபத்துகள் குறித்த ஆண்டறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கலெக்ட் செய்து , சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது குறித்து அரிவித்துள்ள சூழலில் பள்ளங்களற்ற சாலை மற்றும் பாதுகாப்பான சாலை என்ற நிலையை எட்ட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதில் சாலை புகார்களை உடனடியாக சரி செய்ய 'நம்ம சாலை செயலி' என்ற புதிய செயலி ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளங்களகளற்ற சாலை என்ற இலக்கை அடைய பொதுமக்களின் பங்களிப்பினை பெறுவதற்காக இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு, சாலையில் உள்ள பள்ளங்கள் உள்ளிட்ட குறைகளை புகைப்படம் எடுத்து இந்த செயலியில் பதிவிட்டால் உடனடியாக அவை சரி செய்யப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலை சம்பந்தமான குறைகள் என்றால் 24 மணி நேரத்திலும், மாவட்ட நெடுஞ்சாலை குறைகள் என்றால் 72 மணி நேரத்திலும் அந்த குறைகள் சரி செய்யப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் உதயநிதி, ``‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற முழக்கத்தை முன் வைத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘நம்ம சாலை’ செயலியின் பயன்பாட்டை சென்னையில் இன்று தொடங்கி வைத்தோம். சாலையில் பள்ளம் உள்ளிட்ட சேதங்கள் இருப்பின், பொதுமக்களே அதனைப் புகைப்படம் எடுத்து ‘நம்ம சாலை’ செயலியில் பதிவேற்றலாம். அந்தப்பழுது, 24 முதல் 72 மணி நேரத்துக்குள் அரசு சார்பில் சரி செய்யப்படும். இதுமட்டுமன்றி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களை எளிதில் இணைக்கின்ற வகையில், Closed User Group மொபைல் எண் சேவையையும் தொடங்கி வைத்தோம்.`இந்த புதிய தொழில்நுட்ப சேவைகளும் - சாலை வசதிகளும், தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கு வலிமை சேர்க்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.``என்று தெரிவித்துள்ளார்

Tags :
Advertisement