மனமும், உணவு முறையும்- கொஞ்சம் அலசல்!
மனம் மற்றும் உடல் இரண்டையும் பாதிப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு நமது உடல் அமைப்புகளின் சரியான செயல்பாட்டை ஆதரிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது மற்றும் நமது மன நலனை பாதிக்கிறது. உங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பரவலாக அறியப்படுகிறது.உணவும், மனமும் ஒன்றுக்கு ஒன்று அதிகம் தொடர்புக்கொண்டது. அதில் உள்ள பல விஷயங்கள் நுண்ணிய ஆராய்ச்சிகளுக்கு உட்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஏற்கனவே ஸ்ட்ரெஸ்தான் பல பிரச்சனைகளுக்கு மூலக்காரணம் என பலரும் சொல்ல கேட்டிருக்கலாம். இன்று கார்பரேட் ஆன்மீகம் வளர்ந்து வருவதும் நம் மன அழுத்த பிரச்னைகளால் தான். ஆனால் உணவுக்கும், மூளைக்கும் உள்ள தொடர்பு அறிவோமா? ஆம் நம்முடைய கட் ஃபோளாரா சரியான அளவில் இல்லையெனில் நேரடியாக நம் மூளையில் பல விஷயங்கள் பாதிக்கப்படும்.
இன்று காலை என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால் சரியாகச் சொல்வீர்கள். அதுவே போன மாசம் பதினேழாம் தேதி காலை என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால் நம்மால் சொல்ல முடியாது. அதே சமயம் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உங்கள் வீடு தீப்பிடித்திருந்தால் அப்போது சாப்பிட்டோம் என்பது நன்றாக நினைவிருக்கும். காரணம் என்ன? உணர்ச்சிகளுக்கும் நினைவுகளுக்கும் என்ன தொடர்பு?
கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் குடல்தான் நம்முடைய இரண்டாவது மூளை. அதில் இருக்கும் அட்டானமிக் நரம்புகளின் செயல்பாடுகள் ஹார்மோன்களின் செயல்பாடுகளையும் தீர்மானிக்கின்றன. முக்கியமான ஒரு விஷயம்..வயிறும், உணவும் சரியில்லாவிடில் மூளையும் சரியாக செயல்படாது. தற்பொழுது Sibo, IBS போன்றவர்களுக்கு டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் மற்றும் பல்வேறு பிரச்சனைகளில் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிகிறது. ஏன் சின்ன கான்சிடிபேஷன் கூட மனதை பெருமளவு பாதிக்கும் காரணியாக மாறும். அசிடிட்டி, அல்சர் இருப்பவர்கள் மனதில் ஒரு எரிச்சலோடு உழல்வதை கவனிக்க முடியும்.இப்படி வயிற்றுக்கும், மனதுக்கும், மூளைக்கும் உள்ள தொடர்பே ஹெல்த் சைக்காலஜியில் விவாதிக்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை கட் ஃபோளாரா, கட் பிரச்சனைகள் போன்ற விழிப்புணர்வுகள் குறைவு. Gut என்பதில் கூடுதல் புரிதல் தேவையாக இருக்கிறது. இதில் நாம் என்ன செய்ய வேண்டும். மனமது செம்மயானால் என்பதை விட..உடலது செம்மையானல் என்பதை விட. குடலது செம்மையானால் என்பதே பொறுத்தமாக இருக்கும். பெரும்பாலும் இப்பிரச்னைக்காக பெண்களே ஆலோசனை கேட்க வருகிறார்கள். அவர்கள் அறியாத அளவுக்கு கவுன்சலிங் அங்கு நடக்கும். டிடாக்ஸ் முடித்து சரியாக கட்டுக்கோப்பாக இருப்பவரகள் மன உறுதி அடுத்த நிலை அடைகிறது. சில சமயம் வியப்பளிக்கும்.. அன்று கவுன்சலிங் வாங்கியவர்கள் திருப்பி அளிப்பார்கள். அந்தளவுக்கு முன்னேற்றம் அடைந்து விடுகிறார்கள். அதுவரை இருந்த மனக்குழப்பங்கள் குறைந்ததாக பலர் சொல்கிறார்கள். எல்லாமே சப் கான்ஷியஸ் மைண்ட் மேல் பழிப்போடும் சைக்காலஜி உலகம் .இன்னும் கட் பற்றி அதிகம் பேசவில்லை.
வலிப்பு நோய், அல்சைமருக்கு கீட்டோ நன்றாக செயல்படுகிறது. அதாவது மூளைக்கும் , உணவுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை இது நிருப்பிக்கிறது. குப்பை உணவுகளுக்கும், டிபரஷனுக்கும் நேரடி வளர்ச்சி உள்ளது. இப்படி பலக்கதைகள், நம்மிடைய இருக்கும் கார்விங், உடல் மொழி அனைத்தும் மிக கவனமாய் கேட்டுக் கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள்.இது சம்பந்தமாய் வாசிக்க வாசிக்க பூதம் போல் பல தகவல்கள்.ஆனால் அதற்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு, அதற்கும் ஆட்டோ இம்யூன் பிரச்சனைகள், இப்படி பல விஷயங்கள் உணவுக்குள் உள்ளன. உடனே சைவம் சாந்தம்,அசைவம் உயர்வு இப்படி எதற்குள்ளும் நுழையாமல் எந்த உணவு நம் மனதை செம்மைப் படுத்தும் என்பதை மட்டும் பார்க்கலாம்.
பாக்டீரியாக்களின் உலகமது. உலகமே நுண்ணுயிர்களால் ஆனதுதான். அவைதான் உலகை ஆள்கின்றன. மனிதர்கள் என நாம்தான் குழப்பிக்கொள்கிறோம். மனித உடம்பில் ஒரு லட்சம் கோடி நுண்ணுயிர்கள் உள்ளன. அது ஒரு யூனிவர்ஸ் க்கு சமானம். அறிவியல் அதில் மிக சிறு பகுதியே கண்டறிந்து உள்ளது. உள்ளே செல்ல செல்ல வியக்குமளவுக்கு அந்த் உலகம் இருக்கு. நாம் பிறக்கும் பொழுதே நம் தாயின் வேஜினல் அதாவது கர்ப்ப வாய் மூலம் ஒரு பேக்கேஜ் பாக்டீரியா காத்திருக்கும். குழந்தை பிறக்கும் பொழுது..அதாவது நார்மல் டெலிவரியில் பிறக்கும் பொழுது அது குழந்தை உடலுக்கு செல்லும். சிசேரியன் குழந்தைக்ளூக்கு தாயின் கட் ஃப்ளோரா பேக்கேஜ் கிடைப்பதில்லை அதனால் எதிர்ப்பு சக்தி குறைவாக ஆகும் வாய்ப்பு மிக அதிகமாக் இருக்கும்.
இயற்கை மிக நுண்ணியதாக் ஒவ்வொரு விஷயத்திலும் வலைப்பின்னல் போல் எதையாவது ஒளித்து வைக்கிறது. அப்படிதான் இந்த சுகப்பிரசவமும். இருப்போன்ற் பல விஷயங்கள் இதில் இருக்கின்றன.
கிருத்திகா