For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லிங்க்ட்இன்(LinkedIn) 2-ம் கட்ட பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது!

08:09 PM Oct 17, 2023 IST | admin
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லிங்க்ட்இன் linkedin  2 ம் கட்ட பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது
Advertisement

லகின் பெரும்பாலான முன்னணி பெரு நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் அமேசான், ட்விட்டர் ஆக இருந்த எக்ஸ், கூகுள், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்கம் செய்ததால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்தனர். இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்க்ட்இன்(LinkedIn) நிறுவனம் 2-ம் கட்ட பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement

கொரோனா காலத்தில் சரிவைக் கண்டிருந்த, பல்வேறு துறைகளும் படிப்படியாக மீண்டெழுந்து வருகின்றன. ஆனால் டெக் நிறுவனங்களைப் பொறுத்தளவில் நிலைமை நேர்மாறாக இருக்கிறது. எதிர்கால தொழில்நுட்பங்களில் முதலீடு செய்கிறோம், வளர்ச்சிப் பணிகளில் ஆர்வம் காட்டுகிறோம், நட்டத்தை தவிர்க்கிறோம் என்ற பெயரில் ஆட்குறைப்பில் அவை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிலும் சாட்ஜிபிடி போன்ற ஏஐ வருகையில், நிறுவனத்தின் பல்வேறு தளங்களிலும் ஆட்குறைப்பு அதிகரித்து வருகிறது.

Advertisement

இவ்வாறு அமேசான், மெட்டா, கூகுள் போன்ற நிறுவனங்களின் வரிசையில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்தது. சுமார் 10 ஆயிரம் பணியாளர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்யப்போவதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது. இந்த ஆட்குறைப்பினை, லிங்க்டு இன் போன்ற தனது இதர நிறுவனங்களிலும் அடுத்தபடியாக மைக்ரோசாப்ட் அமல்படுத்த ஆரம்பித்திருக்கிறது. இந்த வகையில் சமூக வலைதள தொழில் நுட்ப நிறுவனமான லிங்க்டு இன் பணியாளர்களில் 668 பேர் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. லிங்க்டு இன் நிறுவனத்தில் இது இரண்டாவது ஆட்குறைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பணிநீக்கம் என்பது மொத்த ஊழியர்களில் 2.5% பேர் ஆவார்கள். உற்பத்தி, திறன், நிதி மற்றும் பொறியியல் பிரிவுகளில் இந்த ஆட்குறைப்பு அமைந்திருக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாகவே லிங்க்டு இன் நிறுவனத்தின் வருவாய் இறங்குமுகத்தில் இருந்ததால், செலவினத்தை குறைக்கும் முயற்சியில் ஆட்குறைப்பு அமலாகிறது. மேலும் புதிதாக பணிக்கு ஆளெடுப்பதும் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

லிங்க்டு இன் நிறுவனத்தில் மொத்தம் 20,000 பணியாளர்கள் உள்ளனர். மைக்ரோசாப்ட் அந்நிறுவனத்தை 2016 இல் $26.2 பில்லியன் கொடுத்து வாங்கியது. 2023 நிதியாண்டின் நான்காவது காலாண்டில், LinkedIn நிறுவனத்தின் வருவாய் முந்தைய காலாண்டில் இருந்த 10% உடன் ஒப்பிடும்போது, ஆண்டுக்கு ஆண்டு 5% அதிகரித்துள்ளது.புதிய உறுப்பினர்களை சேர்ப்பதைத் தொடர்ந்தாலும், லிங்க்ட்இன் நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு குறைவதோடு, விளம்பரச் செலவு குறைவதையும் மைக்ரோசாப்ட் சுட்டிக்காட்டி உள்ளது. இது நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் விரைவான முடிவுகளை எடுக்க உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement