உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடங்கியது!
சர்வச அளவில் டாப் 10இல் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அந்நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் ஏராளமான இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐ.டி ஊழியர்கள், மீடியா, தொழில்நுட்பம், வங்கி சேவை, மருத்துவ சேவை, விமான சேவை, அமேசான் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் பெரும்பான்மையான மைக்ரோசாப்ட் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் 'ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்' என காட்டுவதால் பயனாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியுள்ளன. இதனால் கணினி சார்ந்த தொழில்நுட்பத் துறைகள் முடங்கின. மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகளை பயன்படுத்தி வரும் விமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் போன்றவையும் பிரச்னைக்கு உள்ளாகியுள்ளன.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக டில்லி, மும்பை, சென்னை, உள்ளிட்ட விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.அத்துடன் ஊடகமும் முடங்கியது. உலகம் முழுவதும் இதே நிலை ஏற்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.விண்டோஸ் எக்பியில் தற்போது 11 ஆவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல புதிய அப்டேட்டுகளுடன் இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் செயல்படுகிறது. இதற்காக தொழில்நுட்ப ரீதியில் பல வரவேற்புகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் இந்த செயலிழப்பு குறித்து பல நெட்டிசன்கள் நீல நிற ஸ்கிரீனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்