For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வருகிற தேர்தலில் மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்,-- இந்தியா கூட்டணி கடிதம்!

06:17 PM Oct 13, 2023 IST | admin
வருகிற தேர்தலில் மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்    இந்தியா கூட்டணி கடிதம்
Advertisement

முன்னதாக, செய்தித்தாள்கள் அல்லது தொலைகாட்சிகள் பொதுமக்களின் கருத்தை ஊக்குவிக்க பயன்படுத்தப்பட்டன; இன்று, மக்கள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி தங்களுக்குத் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்த செய்திகளையும் தகவலையும் பெறுகின்றனர். சமூக ஊடக தளங்களும் அரசியல் விவாதங்களுக்கு முக்கிய இடமாக மாறியுள்ளன. மாறாக நயவஞ்சகமாக, சர்வாதிகார ஆட்சிகளுக்கு ஆதரவாக, பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும், அச்சத்தைப் பரப்பவும், எதிர்ப்பைக் குறிவைக்கவும் ஒரு எளிதான கருவியாக மாறிவிட்டன.இச்சூழலில் 2024 மக்களவைத் தேர்தலில் நடுநிலையாக செயல்படுமாறு மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருக்கு இந்தியா கூட்டணி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Advertisement

வர இருக்கும் 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாட்ஸ்ஆப், பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக செயல்படுவதாக வாஷிங்டன் செய்தித்தாள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.முன்னதாக ஃபேஸ்புக் என்ற செல்வாக்கான சமூக ஊடகம், ஆளும் கட்சியான பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், இதற்கு நாட்டின் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமம் பகிரங்க உதவிகள் செய்ததாகவும், இவையனைத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாது இருந்ததாகவும்..’ நீண்ட குற்றச்சாட்டுகளை எளிதில் புறக்கணித்துவிட முடியாது. ’

Advertisement

தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ என்ற சுதந்திர ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு, ’ஆட் வாட்ச்’ என்ற விளம்பர ஆய்வு அமைப்போடு சேர்ந்து, தேர்தல் கால இந்தியாவில் சமூக ஊடக விளம்பரங்களின் பின்னணி குறித்து ஆராய்ந்தது. 2019, பிப்ரவரியில் தொடங்கி சுமார் 22 மாதங்களில் ஃபேஸ்புக்கில் வெளியான செய்தி வடிவிலான பல லட்சம் அரசியல் விளம்பரங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 2019 மக்களவை தேர்தல் மற்றும் 9 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்ற காலத்தை மையமாகக்கொண்ட இந்த ஆய்வு முடிவுகளில், பல விநோதமான உண்மைகள் வெளிப்பட்டிருக்கின்றன. ஆனால் மோடி அரசு அதை புறந்தள்ளி விட்டது

இச்சூழலில் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் இணைந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அனுப்பியுள்ள இந்த கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது சமூகவலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு எழுதிய கடிதத்தில், வாஷிங்டன் போஸ்ட்டின் முழுமையான விசாரணைகளை மேற்கோள் காட்டி, மெட்டா நிறுவனம் சமூக ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பதாகவும் மதவெறியைத் தூண்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல, கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சைக்கு எழுதியுள்ள கடிதத்திலும், இந்தியாவில் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பதாகவும் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டுவதாகவும் குறிப்பாக ஆல்பபெட் குறிப்பாக யூடியூப் மீது குற்றம் சாட்டப்படுவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 'ஆளும் பாஜகவின் வகுப்புவாத வெறுப்புப் பிரச்சாரத்திற்கு வாட்ஸ்ஆப், பேஸ்புக் உதவுவதாகக் கூறிய வாஷிங்டன் போஸ்ட் செய்தி குறித்து அறிந்திருக்கலாம். குறிப்பாக, பாஜக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாட்ஸ்ஆப் குழுக்களைப் பயன்படுத்தி இந்த கீழ்த்தரமான, வகுப்புவாத பிரசாரம் செய்வது இதன் மூலமாகத் தெளிவாகத் தெரிகிறது. அதுபோல ஃபேஸ்புக்கிலும் இதுபோன்றே நடக்கிறது. இது எங்களுக்கு நீண்ட காலமாக தெரியும், தொடர்ந்து இதற்கு எதிராக குரல் எழுப்பி வருகிறோம். இது எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்குகிறது, ஆளும் கட்சியினரை ஊக்குவிக்கிறது' என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே, குறிப்பாக வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும், சமூக பதற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
Advertisement