தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை தண்டனை & அபராதம்!

05:56 AM Jul 02, 2024 IST | admin
Advertisement

போராட்டமே வாழ்க்கை என்றாலும் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுக்காமல், அமைதி வழியில் அடித்தட்டு மக்களின் குரலை எதிரொலித்து வந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கருக்கு 24 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் கோர்ட் 5 மாதம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உள்ளது.

Advertisement

நர்மதா பச்சாவோ அந்தோலன் (என்பிஏ) அமைப்பின் தலைவராகவும், பழங்குயினருக்கான வாழ்வாதார போராட்டங்களுக்காகவும் தேசிய மேதா பட்கர் நன்கறியப்பட்டவர். இவருக்கு எதிராக தற்போது டெல்லியின் துணைநிலை ஆளுநராக இருக்கும் வி.கே.சக்சேனா தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.

Advertisement

தேசிய குடிமையியல் விடுதலைகள் சங்கத்தின் அப்போதைய தலைவராக பதவி வகித்த வி.கே. சக்சேனா, தனது பெயரைக் களங்கப்படுத்தும் விதத்தில் நவம்பர் 5, 2000இல், பத்திரிகை ஒன்றில் "தேசபக்தரின் உண்மை முகம்" என்ற பெயரில் தவறான உள்ளீடுகளை இணைத்து, மேதா பட்கர் கட்டுரை ஒன்றை வெளியிட்டதாக அவதூறு வழக்கை தொடுத்தார்.இந்த வழக்கின் விசாரணையில், சக்சேனா பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பட்கர் செயல்பட்டிருப்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து பாட்கர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, ஆகஸ்ட் 1 வரை அவரது தண்டனை ஒத்தி வைக்கப்படுவதாகவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக் கூடும் என்ற நிலையில், அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு தண்டனைக் காலத்தை 5 மாதமாக குறைத்ததாக நீதிபதி கூறினார். மேலும், அவதூறு வழக்கில் விகே சக்சேனாவுக்கு 10 லட்ச ரூபாய் வழங்கவும் மேதா பட்கருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேதா பட்கர் - வி.கே.சக்சேனா இடையே 2000-ம் ஆண்டு முதல் சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. சக்சேனாவுக்கு எதிராக மேதா பட்கரும் வழக்குகளை தொடர்ந்துள்ளார். வி.கே.சக்சேனா அப்போது அகமதாபாத்தைச் சேர்ந்த நேஷனல் கவுன்சில் ஃபார் சிவில் லிபர்டீஸ் என்ற என்.ஜி.ஓ அமைப்பின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
5 months in jaildefamation casefinedMedha Patkarsentenced
Advertisement
Next Article