தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மார்கழி திங்கள் - விமர்சனம்!

08:51 PM Oct 27, 2023 IST | admin
Advertisement

துவரை சுமார் 15 படங்களை டைரக்ட் செய்து வழங்கினாலும் ஓரிரு படங்களில் மட்டும் வணிக ரீதியான ஹிட் கொடுத்த சுசீந்திரன் என்ற இயக்குநர் தனக்கே தெரிந்த பள்ளிக் காதல், ஆணவப் படுகொலையை திரைக்கதையில் கோர்த்தாலும் பள்ளி பருவ ஹீரோயினே சாதி வெறி பிடித்தவர்களை கொலை செய்து விட்டு தூக்கு போட்டு செத்து விடுகிறாள் என்ற க்ளைமாக்ஸை வைத்து சொதப்பி விட்டார் .. அதிலும் தான் இயக்கிய பலப் படங்களில் காதலில் புனிதம் காட்டிய பாரதிராஜா கொலை, தற்கொலைக்கு தன் மகனோடு துணை போனதைதான் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னதான் இதெல்லாம் நடிப்பு என்று சொன்னாலும் பாரதிராஜா இதுவரை கோலிவுட்டில் உருவாக்கி வந்த பிம்பத்தை சிதைத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். அத்துடன் தன் மகன் மனோஜ் பாரதியை ஏன் டைரக்டராக ஆக விடாமல் செய்து கொண்டிருந்தார் என்பதும் புரிய வைத்து விட்டதும் கூட மார்கழி திங்கள் இந்த படம்.

Advertisement

கதை என்னவென்றால் அப்பா, அம்மாவை இழந்த தன் பேத்தி ரக்ஷனா மீது அன்பும், பாசமும் காட்டி வளர்க்கிறார் தாத்தா பாரதிராஜா. ஒரு ஸ்கூலில் படிக்கும் அவள் வகுப்பில் அவள்தான் முதல் மார்க் வாங்குவது வழ்க்கம். ஆனால் நாயகன் ஷியாம் செல்வன் அதே ஸ்கூலில் வந்து சேர்ந்த பிறகு அவன்தான் ஃப்ர்ஸ்ட் மார்க் வாங்குவான். அதைக் கண்டு ரக்‌ஷனா கடும் கோபமும், ஆத்திரமும் கொள்கிறாள்.. இப்படி .தேவையில்லாமல் தன்னைக் கண்டு ரக்ஷ்னா கடுப்பாவதைக் கண்ட வினோத் அவள் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் பொதுத் தேர்வில் விட்டுக் கொடுத்து விடுகிறான். இது விஷயம் தெரிந்தவுடன் அவன் மீது பரிதாபப்பட்டு காதலிக்கவும் தொடங்கி விடுகிறாள். கூடவே தன் காதலை தாத்தாவிடமும் சொல்லி சம்மதம் வாங்குகிறாள். ஆனால் அதற்கு தாய்மாமன் சுசீந்திரன் சம்மத்திக்க மறுத்து ஆக்ரோஷமாகி விடுகிறார். இதனிடையே குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியில்.நிறுத்தி விட்டு துபாய் சென்று சம்பாதிக்க முடிவு செய்து பெட்டியுடன் கிளம்புகிறான் வினோத். அப்படி கிளம்பியவன் குறித்து தோழியிடம் விசாரிக்கும்போதுதான் தன் தாய்மாமனால் வினோத் கொல்லப்பட்ட விஷயம் தெரியவருகிறது அதை அடுத்து ரக்ஷனா எடுக்கும் முட்டாள்தனங்களே கிளைமாக்ஸ்.

Advertisement

ஹீரோவாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஷ்யாம் செல்வன் மற்றும் ஹீரோயினாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ரக்‌ஷனா இருவரும் கையில் கிடைத்த ரோலின் வலிமையை உணர்ந்து பர்ஃபெக்டாக நடித்திருக்கிறார்கள். ஷ்யாம் செல்வன், பக்கத்து வீட்டு பையன் போல் மிக எளிமையாகவும், எதார்த்தமாகவும் நடித்திருப்பதோடு, அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார். ரக்‌ஷனா, பள்ளிப் பருவக் காதல் காட்சிகளிலும், தாத்தாவிடம் தன் ஆசையை சொல்லும் காட்சிகளிலும் இயல்பாக நடித்து ஸ்கோர் செய்கிறார். காதலுக்காக தாத்தா போடும் நிபந்தனையை ஏற்று நடப்பவர், தனது காதலுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு எதிராக செயல்படும் காட்சிகள் சகிக்கவில்லை என்றாலும் இவரின் பங்களிப்பு பங்கமில்லை.. தாத்தா ரோலி வரு பாரதிராஜாவுக்கு மட்டும் அல்ல அவரது, குரலுக்கும், நடிப்புக்கும் வயதாகி விட்டது என்பது அப்ப்பட்டமாக . மொத்த படத்திலும் உடம்புக்கு முடியாதவரை அழைத்து வந்து மிரட்டி நடிக்க வைத்தது அப்பட்டமாக தெரிகிறது.

இசைஞானி இளையாராஜாவிடம் பாரதிராஜா வாங்கும் இசை இலாவகம் மனோஜ் பாரதிராஜாவிடம் இல்லை பாடல்கள் எதுவும் எடுபடவில்லை.., பின்னணி இசை ஒரு காதல் கதைக்கு என்னவோ அதை வழங்கி ஒப்பேற்றி இருக்கிறார்.

"என் இனிய தமிழ் மக்களே நான் உங்கள் பாரதி ராஜா என்னை இயக்குனராக ஏற்றுக்கொண்டது போலவே என் மகன் மனோஜை இயக்குனராக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று பாரதிராஜா தழுதழுத்தக்குரலில் தொடக்கத்திலேயே வேண்டுகோள் விட்டத்தை ஏற்றுக் கொள்ள மனோஜ் இன்னும் வெகுகாலம் இருக்கிறது என்பதே நிஜம்

மொத்தத்தில் மார்கழித் திங்கள்- அபஸ்வர சினிமா

மார்க் 2/5

Tags :
BharathirajaaMargazhi Thingalreviewsuseentharan
Advertisement
Next Article