For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மறக்குமா நெஞ்சம் - விமர்சனம்!

06:46 PM Feb 01, 2024 IST | admin
மறக்குமா நெஞ்சம்   விமர்சனம்
Advertisement

ழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 2006ம் வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரின் மனங்களை கவர்ந்த ஒரு தொடர் - அது கனா காணும் காலங்கள். பலரின் பள்ளிக் கால நினைவுகளை அப்படியே கண்முன் நிறுத்தியது அந்தத் தொடர். அதற்குப் பின்னர் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை, கனா காணும் காலங்கள் 2 போன்ற பல தொடர்கள் வந்திருந்த போதிலும் முதலில் வந்த கனா காணும் காலங்களே மக்களின் மனங்களில் நிறைந்து இருக்கின்றன.. அந்த பாணியில் உருவாகி ஒரு டீன் ஏஜ் லவ் படமாக, பேமிலி ஆடியன்ஸூக்காக வந்து இருக்க வேண்டிய மறக்குமா நெஞ்சம் படம் நடிகர்கள் தேர்வில் கோட்டை விட்டதுடன், திரைக்கதையில் போதிய அக்கறைக் காட்டாத காரணங்களால் கோலிவுட்டுக்கு வந்த இன்னொரு சினிமா என்ற பெயரை மட்டும் தட்டிச் செல்கிறது.

Advertisement

அதாவது கன்னியாகுமரி டிஸ்டிரிக்கில் இருக்கும் பிரைவேட் ஸ்கூலில் 2008 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்தடுத்து தாண்டி வேறு வேறு வேலைக்கு போய் செட்டில் ஆகி விடுகின்றனர். இந்நிலையில் அந்த 2008 பேட்ஜ் ஸ்டூடண்ட்ஸ் எழுதிய தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி இந்த தேர்வை ரத்து செய்ய கோரி வழக்கொன்று தொடுக்கப்படுகிறது. இதையடுத்து 10 வருடங்கள் கழித்து அந்த மாணவர்கள் எழுதிய தேர்வு செல்லாது என தீர்ப்பு வருகிறது. அந்த ஆண்டு படித்த மாணவர்கள் அனைவரும் மூன்று மாதங்கள் மீண்டும் பள்ளிக்கு வந்து படித்து தேர்வு எழுத வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்குகின்றனர். இதனால் மாணவ, மாண்விகள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகி மறுபடியும் அதே பள்ளிக்கு வருகிறார்கள்.. இச்சூழலில் சிறுவயது முதல் பள்ளி தோழியான மலினாவை ஒரு தலையாக காதலித்தார் நாயகன் ரக்‌ஷன். அந்தக் கால இதயம் முரளி பாணியில் கடைசி வரை தன் காதலை கூறாமலேயே இருந்து விடுகிறார். இந்தத் தீர்ப்பு வெளியானதை அடுத்து ஹேப்பியாகும் அவர் எப்படியாவது தன் காதலை இந்த தடவை சொல்லி விட முடிவு செய்து என பழைய மாணவர்களோடு அவரும் அதே பள்ளிக்கு மீண்டும் பொதுத் தேர்வு எழுத செல்கின்றார். போன இடத்தில் ஹீரோ தன் காதலை வெளிப்படுத்தினாரா, இல்லையா? இவர்களின் பிடிப்பும், வகுப்பு தேர்ச்சியும் என்னவானது? என்பதே இப்படத்தின் கதை..!

Advertisement

ஹீரோ ரக்‌ஷன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு தேவையான பிரசண்டேசனை வழங்கி தப்பித்து போகும் ரக்ஷன் வெள்ளி திரையில் ஜொலிக்க கொஞ்சம் கூட அக்கறைக் காட்டவில்லை. , பல இடங்களில் தீனா இவரைத் தாண்டி தெரிகிறார். மீசையை மழித்தால் மாணவன் என்று வரும் போதும் , ஏழு கழுதை வயசான யங்க்ஸராக வரும் போது யாதொரு முகவாவனையும் காட்டாமல் கடுபேற்றுகிறார். . படத்தில் உள்ள நிறைய கதாபாத்திரங்களும் நடிப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக ஸ்போர்ட்ஸ் டீச்சராக வரும் சீனியர் ஆர்டிஸ்ட்முனீஸ்காந்த் கூடசொதப்பி இருக்கிறார்.

அதே சமயம் நாயகி மாலினாவின் நடிப்பு ஏ கிளாஸ். பள்ளி மாணவியாகவும்,கிளைமாக்ஸ்சில் காதலை வெளிப்படுத்தும் போதும் தானொரு நடிகை என்பதை உணர்த்துவதில் ஜெயித்து விடுகிறார். அடுத்தடுத்து சரியான கதை கிடைத்து விட்டால் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்ரு நம்பலாம்.

இசை அமைத்து இருக்கும் சச்சின் வாரியர் வழங்கியுள பாடல்கள் அப்போதைக்கு கேட்க நன்றாக இருந்தாலும், பின்னணிசையில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.. ! கேமராமேன் கோபி துரைசாமி இந்தப் படத்துக்கு என்ன தேவையோ அதை வழங்கி எஸ்கேப் ஆகி விடுகிறார் . டைரக்ட் செய்திருக்கும் ராகோ.யோகேந்திரன் மலையாளத்தில் வெளியான பிரேமம் பட தாக்கலில் இருந்து விடுபடாமல் நிறையக் காட்சிகளைக் கோர்த்திருக்கிறார். . மேலும் நாம் அடிக்கடி காணும் பள்ளிப் பருவக் காதலைச் சொல்லிம் போது தேவையான திரைக்கதைகளில் அக்கறைக் காட்டாததால் ஆரம்ப பேராவில் சொன்னது போல் கோலிவுட்டில் எக்ஸ்ட்ரா ஒரு சினிமா - அவ்வளவே என்று ஃபீல் பண்ண வைத்து அனுப்பி விடுகிறது..

மொத்தத்தில் மறக்குமா நெஞ்சம் - சின்னத்திரைக்கு வரும் போது நேரம் கிடைத்தால் பார்க்கலாம்.

மார்க் 2 / 5

Tags :
Advertisement