For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மனு பாகர் - ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற புதிய வரலாற்று சாதனை!

07:57 PM Jul 30, 2024 IST | admin
மனு பாகர்   ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற புதிய வரலாற்று சாதனை
Advertisement

லிம்பிக் தொடரின் 4-வது நாளான இன்று பல போட்டிகள் தீவீரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று இந்திய அணிக்கு 10மீ. ஏர் பிஸ்டல் கலப்பு அதாவது இரட்டையர் பிரிவு, போட்டியில் இறுதி சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மனு பாகர்- சரப்ஜோத் சிங் ஜோடி இந்திய அணி சார்பாக கலந்த கொண்டனர்.நடைபெற்ற இந்த இறுதி சுற்றில் இந்திய அணி 3-வது இடம் பிடித்து, வெண்கல பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.

Advertisement

இன்றைய நாளில் இந்தியா அணியில் பதக்க போட்டியாக இந்த 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டி மட்டுமே நடைபெற இருந்தது. இதனால், இந்தியாவிற்கு 2-வது தங்கம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்ட்டது.அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவுக்கு தற்போது 2-வது வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. இதற்கு முன் மனு பாகர் தனி நபர் பிரிவில் 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.

Advertisement

தற்போது இந்த வெற்றியின் மூலம் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாகர் 2-வது பதக்கத்தை வென்று அசத்தி இருக்கிறார். மேலும், ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கம் வென்ற புதிய வரலாற்று சாதனையையும் மனு பாகர் படைத்துள்ளார்.

Tags :
Advertisement