மகாவிஷ்ணுவா..?மகாகிறுக்கனா..?
நன்றாகப் பேசத் தெரிந்தவர்கள் பேசுவது எல்லாம் சரி என்று நினப்பது நம்மில் பலரும் செய்யும் தவறு..! இதனால்தான் சில சுமாரான அரசியல்வாதிகளை, சுமாரான ஆன்மிகவாதிகளைக் கூட நாம் தூக்கி வைக்கிறோம்..! வார்த்தைகள் சரளமாக வந்து விழ, கவிதை எழுதறது ஒரு கலை, அவ்வளவே..! ஆனால் பாருங்க - நல்லா எழுதற கவிஞர்கள், உலகத்துக்கு கருத்து சொல்ல தமக்கு மட்டுமே தகுதி இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள் (உதா: வைரமுத்து). அது போலத்தான் நல்லா பேசத் தெரிந்தவர்களும்..! நல்லா எழுத, பேசத் தெரிந்தவர்கள் எல்லோரும் நல்லவர்களோ, அறிவாளிகளோ அல்லர்..!
எனக்கு இந்த மகாவிஷ்ணு நபரைப் பார்க்கும் போது நித்யானந்தா போலவே இருக்கிறது..! நித்தியும் இப்படித்தான் தன் இள வயதில் வெகு அழகாய்ப் பேசுவார்..!அதனாலேயே நம்ம மக்கள் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடி, இப்பத்தான் தெரிந்து கொள்கிறார்கள்: அவர் ஒரு மனநிலை பிழன்றவர் என்பதை..! Eccentric என்பதும் Lunatic என்பதும் பக்கம் பக்கம்தான்..! மனநிலை பிழன்றவர்களும் சில சமயங்களில் பேசும் போது மகா அறிவாளி 'போலவே' இருக்கும்..!
இந்த மகாவிஷ்ணு, நித்தி போன்ற கிறுக்குகளுக்கு , தாங்கள் அறிந்தவை, எல்லோரும் அறிந்த சாதாரண விஷயங்கள்தான் என்பதே புரியாது..! என்னவோ தமக்கு மட்டும்தான் அவை தெரியும் என்று அவர்கள் நம்பிக் கொண்டு, அந்த விஷயங்களை ரொம்ப assertiveவாகப் பேசுவார்கள்..! அவர்களின் அந்த அழுத்தமான பேச்சைக் கண்டே பலர், 'ஓஹோ..! மகா ஞானம் கொண்டவர்கள் போல..?' என்று நினைப்பார்கள்..!
கிருத்துவ சுவிசேஷ பேச்சாளர்களின் சீப் டெக்னிக்தான்..! ஆன்மிகம் என்பதும் ஓரு ஏமாற்றுக் கலைதானே..? கோபப்படுவது, பதட்டப் படுவது, தனக்குத் தெரிந்தது மட்டுமே சரி என்று நினைப்பது, 'Yes or No..?" என்ற அந்த கால டெக்னிக்கான மேனிபுலேட்டிவ் கேள்விகளைக் கேட்டு குழந்தைகளை ஏமாற்றுவது என்ற இந்த மகாவிஷ்ணுவின் அப்ரோச்சைப் பார்த்தாலே நமக்குப் புரிகிறது : இந்த ஆள் ஒரு lunatic கேஸ் என்பது..!
ஆனா பாருங்க : இந்த மகாவிஷ்ணுவும் ஒரு நாள் நித்யானந்தா, ஜக்கி வாசுதேவ் போல உலகப் புகழ் பெறுவார்..! ஏன்னா நம்ம மக்களின் டிசைன் அப்படி..!இப்படியான கிறுக்கத்தனமான, Psychகில் ஏதோ ஒரு பிழையிருக்கும் பையனைப் போய் 'மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்' என்று ஒரு அரசாங்க பள்ளியில் பேச ஏறபாடு செய்தவர் யாரோ அவர் அநியாயத்துக்கு படுமுட்டாளாய் இருக்க வேண்டும்..!
நிற்க,
அந்த அசோக் நகர் அரசாங்க பள்ளி, டிபிக்கல் அரசு பள்ளிகள் போல அல்லாமல் மிக நல்ல பள்ளி..! தனியார் பள்ளிகளுக்கொப்ப அருமையான கல்வியோடு ஒழுக்கத்தையும் போதிக்க மெனக்கெடும் பள்ளி..! அவர்கள் நல்ல எண்ணத்தில்தான் இந்த மனிதரை மோட்டிவேஷனல் ஸ்பீச் செய்யச் சொல்லி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், இப்படியான ஒரு psycho, கிறுக்குதனமான ஆளுக்கு எப்படி அரசுப் பள்ளியில் பேச வாய்ப்பு கிடைத்து என்பது புதிர்தான்..! எங்கேயோ ஏதோ ஒரு கூதல் நடந்திருக்கிறது..!