தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மகாராஷ்டிரா,ஜார்கண்ட் தேர்தல் & வயநாடு இடைத்தேர்தல் தேதிகள் இதோ!

07:09 PM Oct 15, 2024 IST | admin
Advertisement

 அண்மையில் நடந்து முடிந்த ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்களை அடுத்து, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்திற்க்கான சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

Advertisement

இது  குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ,''சமீபத்தில் நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து தங்கள் வாக்குரிமைகளைச் செலுத்தி உள்ளனர். அவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இரு மாநிலங்களிலும் மறுதேர்தல் என்று எதுவும் நடத்தப்படவில்லை. இரு மாநிலங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. வாக்குப்பதிவு அதிகரிப்பு தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதைக் காட்டுகிறது'' என்று கூறி அறிவித்த விபரம்.

Advertisement

ஜார்கண்ட் மாநில தேர்தல் விவரங்கள் :

முதற்கட்ட தேர்தல் (43 தொகுதிகள்) : 

வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 18.10.2024.

வேட்புமனு நிறைவு – 25.10.2023.

வேட்புமனு வாபஸ் –  30.10.2024.

வாக்குப்பதிவு நாள் : 13.11.2024. 

இரண்டாம் கட்ட தேர்தல் (38 தொகுதிகள்) : 

வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 22.10.2024.

வேட்புமனு நிறைவு – 29.10.2023.

வேட்புமனு வாபஸ் –  04.11.2024.

வாக்குப்பதிவு நாள் : 20.11.2024. 

மகாராஷ்டிரா மாநில தேர்தல் விவரங்கள் :

வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 22.10.2024.

வேட்புமனு நிறைவு – 29.10.2023.

வேட்புமனு வாபஸ் –  30.10.2024.

வாக்குப்பதிவு நாள் : 20.11.2024. 

வயநாடு மக்களவை இடைத்தேர்தல் :

வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 18.10.2024.

வேட்புமனு நிறைவு – 25.10.2023.

வேட்புமனு வாபஸ் –  30.10.2024.

வாக்குப்பதிவு நாள் : 13.11.2024.

மகாராஷ்டிரா, ஜார்கண்ட், வயநாடு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் – நவம்பர் 23, 2024.

Tags :
datesgeneral electionJharkhandMaharashtraWayanad By-election
Advertisement
Next Article