For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மகாராஜா - விமர்சனம்!

08:55 PM Jun 14, 2024 IST | admin
மகாராஜா   விமர்சனம்
Advertisement

துக்கடா சீன்களில் தலைக்காட்டி அப்படி, இப்படி எப்படியோ ஆளாகி விட்ட நடிகரும் கோலிவுட் தத்துவஞானியுமான விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாம் `மகாராஜா`. நான்லீனியர் ஸ்கீரின் பிளே ரைட்டர் என்று பேரெடுக்க ஆசைப்படும் ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் தனது திறமையை நிரூபித்த டைரக்டரான நிதிலன் சாமிநாதன் படமாம் ‘மகாராஜா’. இந்த நித்திலன் உருவாக்கிய ` ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்ற ஷார்ட்ஃபிலிம் பார்த்தோரை கலங்கடித்தது இன்றும் நினைவில் இருக்கிறது. பார்க்காதவர்கள் அவசியம் அதை பார்க்கவும். மேலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் பல படங்களைத் தந்த ’பேஷன் ஸ்டுடியோஸ்’ சுதன் சுந்தரம் இந்தப் படத்தைத் ’தி ரூட்’ ஜெகதீஷ் பழனிச்சாமியுடன் இணைந்து தயாரித்துள்ள படமாம் `மகாராஜா`. ஆனால் வயதுக்கு வந்த தன் மகளுடன் இந்த கோலிவுட் ஓஷோ தியேட்டருக்கு வந்து  மகாராஜா படத்தை பார்க்க விரும்புவாரா என்றுக் கேட்டால் கேள்விக் குறியே.

Advertisement

அதாவது ஹீரோ மகாராஜா (விஜய் சேதுபதி) சென்னை நகரில் சலூன் கடை ஒன்றை நடத்திக் கொண்டிருப்பவர். மனைவி இறந்துவிட்ட நிலையில், ஒரே மகள் ஜோதி (சச்சனா). தான் எல்லாம் என வாழ்ந்து வருகிறார் . அந்த பார்பர் மகாராஜாவும், செல்ல மகள் ஜோதியும் தங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக லக்ஷ்மியையும் பார்க்கிறார்கள். மகள் ஜோதி ஸ்போர்ட்ஸ் கேம்புக்காக வெளியூர் சென்றுவிட, வீட்டில் தனியாகிறார் மகாராஜா. வேலை முடித்து வீடு திரும்பிய தன்னை, திடீரென தாக்கிவிட்டு வீட்டிலிருந்த லக்ஷ்மியை ஒரு கும்பல் திருடிவிட்டார்கள் என்ற புகாருடன் போலீஸ் ஸ்டேசன் செல்கிறார். முதலில் அந்த வழக்கில் ஆர்வம் காட்டாத இன்ஸ்பெக்டரிடம், லக்ஷ்மியை கண்டுபிடித்துக் கொடுத்தால் 7 வட்சம் வரை தருவதாக ஒரு ஆஃபர் தருகிறார். இதைக் கேட்டு தி கிரேட் சென்னை போலீஸ் விசாரணையை துரிதப்படுத்துகிறது. ஆக அந்த லக்ஷ்மி யார்? மகாராஜாவின் நிஜத் திட்டம் என்ன? என்பதுதான் கதை. (அப்பாடா .. கதையே சொல்லாமல் கதை சொல்லி விட்டோம்)!

Advertisement

கூத்துப்பட்டறையில் கணக்காளராக பயிற்சி பெற்ற விஜய்சேதுபதி கிடைத்த ஹீரோ கேரக்டரின் வெயிட்டை முழுமையாக உணர்ந்து மிகச் சரியாக எக்ஸ்போஸ் செய்து பாஸ் மார்க் வாங்கி விடுவதென்னவோ நிஜம். இந்த நிஜம் என்பதை சொல்ல அவரின் எக்ஸ்பிரஸன்ஸ், ஃபீலிங்ஸ், ஸ்டெப்ஸ் - அதாவது அவரின் நடை போன்றவற்றைச் சுட்டிக் காட்டுவதெல்லாம் சரியாகப்படவில்லை. ஆனால் இந்த ரோலில் அவரை பார்பராக உருவகப்படுத்த சரியான பிளாட்ஃபார்ம் இல்லை என்பதும் சோகம்.

தன்னை நேரில் சந்திக்க பிரியப்பட்டவர்களிடம் கூட பேமண்ட் கேட்ட அனுராக் காஷ்யப் தன்னால் முடிந்த அளவு ஆக்டிங்கை எக்ஸ்போஸ் செய்த நிலையிலும், கேரக்டருடன் அவரை கனெக்ட் செய்ய முடியவில்லை. குறிப்பாக அவரின் லிப் சிங்கிங் பல்லை இளித்துக் காட்டிக் கொடுத்து விடுகிறது. மேலும் எதற்கு இந்த ஆள் இந்த ரோலுக்கு என்றும் யோசிக்க வைத்து விடுகிறார் . நட்டி நட்ராஜ் சென்னை சிட்டி போலீஸ் ஆபீசர்களின் போக்கையே அறியாமல் டைரக்டர் சொன்னப்படி வந்தார், சென்றார்..ஆனால் இந்த கேரக்டரிசேஷன் மிகவும் தவறாகப் போய் விட்டது.

பாய்ஸ் மணிகண்டன் நீண்ட காலத்துக்கு பின்னர் . சில காட்சிகளே வந்தாலும் கவனம் பெறுகிறார். சிங்கம்புலி கேரக்டர் முத்தாய்ப்பாக சொல்லும் வசனங்களுக்கு சிலர் கைதட்டினாலும் உவ்வே சொல்ல வைத்து விடுகிறது. நாயகி மம்தா மோகன்தாஸ், அபிராமி மற்றும் திவ்யபாரதி ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி பிரமாதமாக நடித்து கவனம் பெறுகிறார்.

கேமராமேன் தினேஷ் புருஷோத்தமன் கைவண்ணத்தில் படத்தின் கிரேடே ஒரு ஸ்டெப் உயர்ந்து இருக்கிறது. படத்தில் பாடல்கள் இல்லை. ஆனால், பின்னணி இசையைத் தனக்குக் கொடுத்த ஸ்பேஸை சிறப்பாக பயன்படுத்தி மிரட்டலாக கொடுத்திருக்கிறார் அஜனீஸ் லோகநாத். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு சத்தம் தேவையோ ஒரு திரில்லர் படத்துக்கான இசையை சிறப்பாக கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார்.

ஆனால் டைரக்டருக்கு கை வந்த நான்லீனியரில் விறுவிறுப்பாக அடுத்தடுத்த திருப்பங்களை உள்ளடக்கிய கதை மற்றும் திரைகதைதான். அதுவும் போதிய சுவாரஸ்யங்கள் நிறைந்ததுதான் என்றாலும், படம் சொல்ல வரும் கருத்து என்ன என்பதும், அது சொல்வது சரிதானா என்பது பற்றிய கேள்வியும் இப்படத்தை உருவாக்கிய யாருக்குமே எழவில்லையோ என்பதுதான் ஆச்சரியக் கேள்வி. வில்லன் என்றால் அசால்ட்டாக கொலை செய்வதும், சிறுமிகளிடமான பாலியல் சீண்டல் குறித்தான அடுக்கடுக்கான வசனங்களும் மகாராஜா தகுதியைக் குறைத்து விட்டது.

மொத்ததில் இந்த மகாராஜா - மறுபரிசீலனை செய்யத் தக்கவன்

மார்க் 2.5/5

Tags :
Advertisement