🦉மெட்ராஸ் ஆகிய சென்னை டே டுடே!
சென்னை மாநகரம் உருவாகி இன்றுடன் 384 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆம், 1939 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நாம் மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் என்று கொண்டாடி வருகின்றோம். அதாவது கடந்த 1996-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி மதராசபட்டினம் என்பது சென்னை என பெயர் மாற்றப்பட்டது. கடந்த 1688-ஆம் ஆண்டு இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் மதராசபட்டினத்தை முதல் நகராட்சியாக அறிவித்தார். அதன்படி நாட்டின் முதல் நகராட்சி சென்னை என்பது குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை நகரம் முறைப்படி நிர்மாணிக்கப் பட்டது. இதனால் ஆகஸ்ட் 22-ஆம் நாளை மெட்ராஸ் தினமாக கொண்டாட ஆரம்பித்தனர். கடந்த 1969-ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம் என்ற பெயர் மாற்றப்பட்டு தமிழ்நாடு என அழைக்கப்பட்டது. பின்னர் 1996-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் மெட்ராசுக்கு “சென்னை” என பெயர் சூட்டினார்.
இந்த மெட்ராஸ். மதராஸ், மதராசபட்டினம், மதராபட்னம், மத்ராஸ்படான், மதராஸ்படம், மதரேஸ்பட்னம், மத்தராஸ், மதரேஸ்படான், மாத்ரிஸ்பட்னம், மதேராஸ் என்றும் இந்த நகரம் பலவாறாக அழைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள் என இங்கு வந்து வாழ்ந்துவிட்டுப் போன பல இனத்தவரும் அவரவர் நாக்கு வசதிக்கேற்ப இந்த நகரத்தின் பெயரை வளைத்து வளைத்து அழைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இன்றுடன் மெட்ராஸ் ஆகிய சென்னை தினம் பிறந்து 385 ஆண்டு ஆகிறது. என்றாலும் வருடத்தில் ஒரு நாள் ஒதுக்கி சென்னையின் பெருமையை பேசி விட முடியுமா.... பருவம் அடைந்த பெண்ணைப்போல நாளுக்கு நாள் மெறுகேறி பார்ப்போரை எல்லாம் தன்னகத்தே காதல் கொள்ளவைக்கும் திறன் சென்னைக்கு உண்டு. நாள் தோறும் பேசினாலும் தீர்ந்து விடாத, பேசி பேசி சலிக்காத வரலாறை சென்னை தன்னுடன் கொண்டுள்ளது. இந்தியாவின் வளர்ந்த நகரங்களை எல்லாம் ஒப்பிட்டால் சென்னையின் வளர்ச்சி அபரிமிதமானது. தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியும் சென்னை என்ற ஒற்றை நகரைக் கொண்டு கணிக்கலாம். எந்த ஒரு விஷயத்துக்கும் நேர்மறை எதிர்மறை என இரண்டும் இருக்கும். நேர்மறை ஒரு படி அதிகம் இருந்தால் அதுவே போதும்.அந்த வகையில் சென்னை நேர்மறையாக பல படிகள் மேலே இருக்கின்றது.
இன்று பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சென்னை பெருநகரம் உருவான வரலாறு, மிக நீண்டது. சென்னை மாநகரம் உருவாகி இன்றுடன் 385 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆம், 1939 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நாம் மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் என்று கொண்டாடி வருகின்றோம். இன்று பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சென்னை பெருநகரம் உருவான வரலாறு, மிக நீண்டது. அன்று முதல் இன்று வரை தன்னுள் பல்வேறு சுவடுகளை புதைத்து வைத்திருக்கும் சென்னை, எப்பொழுதும் மக்களுக்கு பிடித்த நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வரத்த ரீதியாக பல சாதனைகளை புரிந்து மதராஸ்பட்டினம் என்று பெயர் பெற்று, ’சென்னை’யாக இன்று நிமிர்ந்து நிற்கிறது.
வரலாற்றின்படி, இது வெள்ளையர்களால் உருவான நகரம் என்றாலும் அதற்கும் முன்பு இங்கு ஊர்களே இல்லையா என்கிற குரல்கள் இப்போது நிறையக் கேட்கின்றன. ஆமாம் வெள்ளையர்கள் வருவதற்கு முன்பே இங்கே சின்ன சின்ன ஊர்கள் இருந்தது உண்மைதான். ஆனால் அவை அனைத்தும் நகரமாகப் பரிணமித்தது வெள்ளையர்கள் வருகைக்கு பின்புதான் என்பது மிக உண்மையான வரலாறு.இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான தாமஸ் இந்த கடற்கரை பகுதிக்கு வந்திருக்கிறார் தாமஸ் மலையில் அவரது ரத்த சுவடுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவரது சடலம் சாந்தோம் சர்ச்சின் நிலவறையில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இங்கே மார்க்கோபோலோ வந்து போயிருக்கிறார். ஆங்கிலேயர்களுக்கு முன்பாகவே பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் வந்து சாந்தோம் பகுதியில் தமது குடியிருப்பை உருவாக்கியிருக்கிறார்கள். சாந்தோமுக்கு வடக்கே மாதரசன் பட்டிணமென்ற மீனவ கிராமமும் இருந்திருக்கிறது. இவ்வளவும் இருந்த கடற்கரை ஊர்தான் இது!
சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் தனிச்சிறப்பு, பழைய வரலாறு உள்ளது. இன்றும் திராவிட மாநிலங்கள் என கூறப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என பல்வேறு மாநில மக்களும் நம்மை நம்பி சென்னையை நம்பி வந்து வாழ்கின்றனர். பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மொழிகள் பல ஊர்களின் மக்கள் என சென்னைக்கு பல்வேறு முகங்கள் உண்டு. சென்னை என்று சொன்னாலே மக்களுக்கு மனதில் தனி உணர்வு உண்டு. பலதரப்பட்ட மக்களோடு வாழும் சூழல் இங்கு கிடைக்கிறது. சாதி, மதங்களை கடந்து அன்புடன் பழகும் மக்களை சென்னையில் காணலாம். குறிப்பாக, நாட்டில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொருளாதார ரீதியாக சென்னைக்கு இடபெயர்ந்து, வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகம். பல்வேறு தேசங்களிலிருந்து வேலைக்காக இன்றளவும் கூட சென்னையை நோக்கி வரும் இளைஞர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு சிறந்த உதாரணமாக சென்னை விளங்குகிறது.பல்வேறு மொழிகள் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு நகரமாக சென்னை உள்ளது.
அதே சமயம் அண்ணா, மு கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி காலத்தில், ஆங்கிலேயர்களுக்கு துதி பாடும் மெட்ராஸ் டே வை ஒரு போதும் ஆதரிக்க வில்லை, எதிர்த்தார்கள். இந்த ஆட்சியும் தமிழர்கள் சார்பாக, சென்னையின் 2000 ஆண்டுகளுக்கு மேலான பண்பாட்டை, கலாச்சாரத்தை காக்கும் விதத்தில் , தமிழர்களின் உணர்வோடு துணையாக இருக்க வேண்டும், அரசுத்துறை எதுவும் இந்த போலியான கொண்டாட்டங்களை தவிர்க்கவேண்டும், என்று கலைஞர் வழி வந்த முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவிக்கவேண்டும். என்று ஆர். ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளை கோரிக்கை வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது
ஆனாலும் 'வந்தாரை வாழ வைக்கும் சென்னை' என்பதைத் தாண்டி, பலதரப்பட்ட கலாசாராங்கள் ஒன்றுகூடும் இடமாகவும் சென்னை இன்று மாறியிருக்கிறது என்பது நிஜம்தானே?. நகர நெரிசல், அதிகமான வாழ்வாதார செலவு, மழை வெள்ளம் என இங்கு நிறையவே பிரச்னைகள் இருந்தாலும், பலருக்கு வாழ்வளித்ததும், வாழ்வளித்துக் கொண்டிருப்பதும் இதே சென்னைதானே?இங்கே வேலை பார்க்கும் பலரும் தங்களின் சொந்த ஊருக்குப் புறப்படும் போது இருக்கும் சந்தோஷம், திரும்ப வரும்போதும் இருக்கிறதென்றால் அது சென்னையின் மனிதர்களை மனதில் வைத்துத்தான் என்பதாலேயே கொண்டாடலாமே சென்னை டே-யை!
நிலவளம் ரெங்கராஜன்