For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சிவகார்த்திகேயன் நடிக்கும்,“மதராஸி”பட ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது!

09:02 PM Feb 17, 2025 IST | admin
சிவகார்த்திகேயன் நடிக்கும் “மதராஸி”பட ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது
Advertisement

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் N. ஶ்ரீ லக்‌ஷ்மி பிரசாத் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க, பிரம்மாண்டமாக உருவாகும் “மதராஸி” படத்தின், டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழில் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தந்து வரும் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளில், ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிறப்பு வீடியோ ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு, புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முறையாகக் கூட்டணி அமைத்துள்ள இப்படத்தின் மீது, அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போதைய டைட்டில் லுக் மற்றும் டீசர், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

ஃபர்ஸ்ட் லுக்கில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், ஸ்டைலீஷ் லுக்கில் இருக்கும் சிவகார்த்திகேயனின் தோற்றம் மிரட்டலாக உள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள, சிவகார்த்திகேயன் பங்குபெறும் ஆக்சன் காட்சிகள், ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்த டீசர் தற்போது இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் திரை வாழ்வில், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும், மிகப் பிரம்மாண்டமான படமாக இப்படம் இருக்கும். இதுவரை திரையில் தோன்றியிராத மிரட்டலான அதிரடி ஆக்சன் அவதாரத்தில், இப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் தென்னிந்தியா முழுக்க, இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட, கன்னட நடிகை ருக்மணி வஸந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். துப்பாக்கி படத்திற்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் ஏ ஆர் முருகதாஸுடன் இணைந்துள்ளார் வித்யூத் ஜமால். மேலும் பிஜு மேனன், விக்ராந்த், சார்பட்டா புகழ் டான்ஸிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவீஸ் நிறுவனம் சார்பில் N. ஶ்ரீ லக்‌ஷ்மி பிரசாத் பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக, இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை கெவின் குமார் மற்றும் மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கிறார்கள்.

Tags :
Advertisement