For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

எம்.ஃபில் (M.Phil) டிகிரி செல்லாது..அந்த படிப்புகளில் சேராதீங்கோ - யுஜிசி எச்சரிக்கை!

08:23 PM Dec 27, 2023 IST | admin
எம் ஃபில்  m phil  டிகிரி செல்லாது  அந்த படிப்புகளில் சேராதீங்கோ   யுஜிசி எச்சரிக்கை
Advertisement

மிழகத்தில் உள்ளபல்கலைக்கழகங்களில் எம்.ஃபில்படிப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதுடன், மத்திய கல்விக் கொள்கைக்கு எதிரான செயல்பாட்டை தமிழக அரசு தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் சூழலில் மாணவர்கள் எம்.ஃபில் (M.Phil) படிப்புகளில் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு (UGC)மறுபடியும் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

நம்நாட்டின் உயர்கல்வித்துறையில் தேசிய கல்விக்கொள்கை-2020 அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பிஎச்டி ஆராய்ச்சி படிப்புக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைத்து, அதன்வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டது. அதில் 4 ஆண்டுகால இளநிலைபடிப்பை முடித்த பட்டதாரிகள் முதுநிலை பட்டமின்றி பி.எச்டி கல்வியில் நேரடியாக சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2022-23-ம் கல்வியாண்டு முதல் எம்.ஃபில். படிப்புகள் முழுமையாக நீக்கப்படுகிறது. அதேநேரம் இதுவரை வழங்கப்பட்டுள்ள எம்ஃபில் பட்டங்கள் செல்லுபடியாகும் என்று தெரிவித்து இருந்தது. அதாவது கற்பித்தல் பணிக்கு தகுதியானது இல்லை என்பதால் 2022-23 ஆம் ஆண்டிலிருந்து எம்.ஃபில் படிப்பு நீக்கப்படுகிறது என்றும், இனிமேல் இந்த படிப்பில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று போன ஆண்டே சொல்லி இருந்தது.

Advertisement

எம்.பில் படிப்பை முடித்தவர்கள் கல்லூரியில் பாடம் நடத்தத் தகுதி உடையவர்களாக முன்பு பார்க்கப்பட்டு வந்தது. எனவே, பெரும்பாலான மாணவர்கள் இளநிலை, முதுநிலை படிப்பை முடித்த பலரும் அடுத்து தொடர நினைப்பது எம்.பில் படிப்பைதான். எனவே எம்.ஃபில் படிப்புக்கான அங்கீகாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தபோதிலும், சில பல்கலைக்கழகங்கள் அந்த படிப்புக்கு மாணவர்களை சேர்த்து வருவதாக தகவல் வெளியானது,

இந்த நிலையில் தற்போது மிண்டும் யூஜிசி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எம்.ஃபில் படிப்புக்கு அங்கீகாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து ஏமாற வேண்டாம் என்றும், இந்த படிப்புக்கான அங்கீகாரம் ஏற்கெனவே நிறுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement