For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

லக்கி பாஸ்கர் - விமர்சனம்!

09:31 PM Oct 31, 2024 IST | admin
லக்கி பாஸ்கர்   விமர்சனம்
Advertisement

ருமையான ஒன்லைன்.. ஒரே நேர்கோட்டில் போகும் கதை. பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை நாயகனுக்கு ஒரு பிரச்னை முளைத்து அடுத்த சில நிமிடங்களில் அது முடிந்து இன்னொரு பிரச்சனை என மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது.அதையும் படு சுவாரஸ்யமாவும் சொல்லி அசத்து இருக்கிறார்கள். .படம் தொடங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை எங்கேயும் எந்த தொய்வும் இல்லாமல் லக்கி பாஸ்கர் பறந்து கொண்டே இருக்கிறான்.. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் பேங்க், ஷேர் மார்க்கெட், இம்போர்ட் என எல்லா வித ஸ்கேம்களையும் எளிமையாக புரிய வைப்பதிலும் சாதித்து விட்டார்கள்.

Advertisement

இப்படத்தின் கதை என்னவென்றால் பேங்க் ஒன்றில் கேஷியராக பணிபுரிபவர் பாஸ்கர் குமார் (துல்கர் சல்மான்). மிடில் கிளாஸ் ஃபேமிலியைச் சேர்ந்த இவர் தான் குடும்பத்தில் மூத்த பையன். கூடவே மனைவி, மகன், தம்பி, தங்கை, உடல்நிலை சரியில்லாத அப்பா என மொத்த குடும்பத்தையும் கரை சேர்க்கும் பொறுப்பை சுமப்பவர். ஆனால் , கிடைக்கும் மாதச் சம்பளத்தை வைத்துக் கொண்டு குடும்பப் பிரச்னைகளைச் சமாளிக்க திணறுகிறார்.. அடுத்தடுத்து பணத்தேவை அழுத்தம் அதிகமான சூழலில் வாங்கிய கடன்காரர்களின் கிண்டல், அவமானம், எதிர்பார்த்த புரோமோஷன் கிடைக்காத விரக்தி இதெல்லாம் சேர்ந்து அவர் மனதைக் குழப்பி வேறொரு வழிக் கண்டுபிடித்து பெரும் பணக்காரர் ஆகி விடுகிறார். ஆனால். ஒரு கட்டத்தில் அவர் சிபிஐ அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார். அப்போது ஹீரோவின் பேங்க் அக்கவுண்டில் 100 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதைக் கண்டு மிரண்டு போய் விடுகிறார்கள்.. ஒரு சாதாரண வங்கி ஊழியர் கணக்கில் எப்படி இவ்வளவு பணம்? சிபிஐ=யிடம் பிடிப்பட்ட பின் அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? என்பதை சொல்வது தான் ‘லக்கி பாஸ்கர்’.

Advertisement

டைட்டில் ரோலான பாஸ்கர் என்ற கேரக்டரில் மிடில் கிளாஸ் ஃபேமிலித் தலைவராக நடித்திருக்கும் துல்கர் சல்மான், வருத்தம், வெறுப்பு, ஆதங்கம், கோபம் நெகிழ்ச்சி, கெத்து, திமிர், மாஸ், முதிர்ச்சி எனக் கதையில் வரும் சகல மன நிலைகளையும் தன் அளப்பரியா நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி பலே சொல்ல வைத்து விடுகிறார். குறிப்பிட்டு சொல்வதானால் பொருளாதார பிரச்சனைகளையையும் மீறி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பது, வசதி வந்த உடன், அதை தன் வாழ்க்கை முறையில் மட்டும் இன்றி உடல் மொழியிலும் நேர்த்தியாக வெளிப் படுத்துவது ,தனக்கான புரொமோசன் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில், வங்கி மேளாளரிடம் கோபப்பட்டு, பிறகு அவரிடமே அழுது கெஞ்சும் காட்சியிலும் சரி, அந்த சூழலை அடுத்த சில நிமிடங்களில் மறந்துவிட்டு சாதாரண நிலைக்கு திரும்புவது என மொத்தப் படத்தையும் தூக்கிப் பிடித்து அசர வைத்து விட்டார்.கணவருக்கு ஆதரவு கொடுக்கும் காதல் மனைவியாக மீனாட்சி செளத்ரி (சுமதி). தன் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இவர்கள் தவிர நண்பராக நடித்துள்ள ஹைப்பர் ஆதிக்கும், அந்தோணியாக வரும் ராம்கிக்கும் விசில் பறக்குமளவு முக்கிய வேடங்கள். மாஸ்டர் ரித்விக் வழக்கம் போல் பலே பலே சோல்ல வைத்து விடுகிறார் சச்சின் கேடேகர் தூக்கி வாரிப்போடும் காட்சியில் தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்

1989 முதல் 1992 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் நடக்கும் கதைக்கான காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, தனது கேமரா மூலம் நம்மை 30 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறார். நவீன் நூலியின் படத்தொகுப்பு பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், தொய்வில்லாமல் படத்தை பயணிக்க வைத்திருக்கிறது. 92-ம் காலக்கட்டத்தின் மும்பை பகுதியை வடிவமைத்த கலை இயக்குநரின் பணி கவனம் ஈர்க்கிறது.

மியூசிக் டைரக்டர் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்து பக்கபலமாய் அமைந்து ஸ்கோர் செய்து விட்டார் . அத்துடன் பாடல்களும் கதையின் போக்கை எந்த இடத்திலும் தொந்தரவு செய்யாத மினிமம் கேரன்ட்டி மெட்டீரியல்.

தொடக்கத்தில் பழையபட பாணியில் ஒவ்வொரு கேரக்டராக அறிமுகம் செய்து சகலரையும் பக்கா லாஜிக்கோட கோர்த்து இருப்பது. அழகு. அதிலும் சின்ன சின்ன விஷயங்கள முன்பே சொல்லி அதை பின்னால் வரும் காட்சிகளுடன் கோர்த்து இருப்பதும் அழகோ அழகு.! ஆனால் அந்த 92ம் வருஷமே 100 கோடி, உடன் ஒர்க் செய்பவர் தொடங்கி மனைவி வரை பணம் வந்த ரூட் பற்ரி விசாரிக்காகது என கொஞ்சம் உஷாராகி சில பல லாஜிக் ஓட்டைகள் அப்பட்டமாக வெளிப்பட்டாலும் பரபரவென நகரும் திரைக்கதை மடை மாற்றி விடுகிறது. மேலும் பேங்கில் இருந்து பணம் திருடும் போது ஹீரோ மாட்டிக் கொள்ள மாட்டார் என கணிக்க முடிந்தாலும் திரையில் பாஸ்கருக்கு வரும் பதற்றமும், அவர் பிரச்சினையில் இருந்து வெளியே வரும் போது ரசிகனும் ரிலாக்ஸ் ஆவதே இயக்குநர் வெங்கி அட்லூரியின் வெற்றி.

மொத்தத்தில் லக்கி பாஸ்கர் - லவ்லி மூவி

மார்க் 4/5

Tags :
Advertisement