தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

காதலும், செக்ஸூம் மதிப்பிழக்கப் போகிறது!?

05:31 PM Sep 19, 2024 IST | admin
Advertisement

திர்காலத்தில் மதிப்பிழக்கப் போகிற விஷயங்களில், காதலும் செக்ஸும் முக்கியமானதாக இருக்கும்போல..!இரண்டுமே சப்பையான மேட்டர்கள். ஈசிலி அவைலபிள் என்று சமூக வலைத்தளங்களில் சர்வ சாதாரணமாக நார்மலைஸ் பண்ணுகிறார்கள்.திரை மறைவு விஷயங்கள் அனைத்தும் ரீல்ஸ், இன்ஸ்டா, வெப் சீரிஸ் பிட்டுகள் என பப்பரக்கா பரக்கா என பப்ளிக்காக பல்லிளிக்கின்றன.

Advertisement

ஏதோ ஒரு துண்டு வீடியோ.. சினிமாவா குறும்படமா ரீல்ஸ்சா என்று தெரியவில்லை. இளைஞனிடம் ஒரு இளம் பெண் அவனுக்கு mastrubation பழக்கம் உண்டா இல்லையா என்று கேட்டு அதைப்பற்றி டீடெயிலாக அந்தப் பெண்ணே விளக்கி கேட்கிறார்.

Advertisement

இன்னொரு காட்சி.. இரவு நேரத்தில் ஒரு இளம் 'காதல்' ஜோடி சாலையில் பைக்கில் நிற்கிறது. எதிரே மெடிக்கல் ஷாப்.அப்போது இளம்பெண்," என் அப்பா ஊரில் இல்லை. உனக்கு ஏதாவது தேவை என்றால் மெடிக்கல் ஷாப்பில் வாங்கிக் கொள்" என்று சொல்கிறார்..அடுத்த சீனில், இருவரும் போர்வைக்குள் உருள்கிறார்கள்..

எந்த சமூக வலைத்தளத்தை ஸ்கிரால் செய்தாலும் வெப் சீரிஸ் துண்டு வீடியோக்கள் அவ்வப்போது கொட்டுகின்றன. முக்கல் முனகலை தாண்டி, பச்சை பச்சையாகவே பேசி கொள்கிறார்கள்.

பேஸ்புக் இன்னும் அந்த அளவுக்கு கெடவில்லை.

முப்பது நாற்பது ஆண்டுகாலத்திற்கு முன்பு மஞ்சள் பத்திரிகைகளில்கூட உடல் உறுப்புகளை ஜாடை மாடையாகத்தான் சொல்லி கதை எழுதுவார்கள். ஆனால் இப்போது பெண் பதிவர்களேஅந்த வார்த்தைகளை நார்மலைஸ் பண்ணி எழுதுகிறார்கள்.

ஊரும் உறவும் அறியும் வரையில்
கண்கள் மட்டோடு
மணமாலை தோளில் சூடும் நாளில் கைகள் தொட்டாடு..வாலி (1970)

சலிப்பு வந்து ஆளை மாற்றும்வரை போட்டு தாக்கு.. ரிஜிஸ்டர் ஆபீசில் முடிய வந்தால் டைவர்ஸ் கொண்டாடு -இப்படிதான் தற்போதைய நிலைமையை பற்றி எழுதனும் போல.

மொத்தத்தில் ஊறுகாயையே சாப்பாடாக மாற்றி தந்து கொண்டிருக்கிறது ஆண்ட்ராய்டு..!

ஏழுமலை வெங்கடேசன்

Tags :
InvaluedloveREELSsex
Advertisement
Next Article