For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு முழுக்க லாரி உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்!

01:20 PM Nov 09, 2023 IST | admin
தமிழ்நாடு முழுக்க லாரி உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்
Advertisement

டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண விலை உயர்வு போன்றவற்றால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காலாண்டு வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவற்றை கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (09.11.2023) மாலை 6 மணி வரை லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், மாநில லாரி புக்கிங் ஏஜென்ட்கள் சங்கம் மற்றும் வாகன பழுதுபார்ப்போர் சங்கம் என பல்வேறு இணைந்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

தமிழ்நாட்டில் 6.50 லட்சம் லாரிகள் இயங்கி வருகின்றன. டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் லாரி உரிமையாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் லாரிகளுக்கான பசுமை வரி உள்ளிட்டவை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வை மறு பரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ள லாரி உரிமையாளர்கள், இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்த வரி உயர்வை மறு பரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ள லாரி உரிமையாளர்கள், இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, லாரி உரிமையாளர்களுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படட கூடும் என கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், லாரி ஓடாத காரணத்தால், கொடிக்கணக்கிலான சரக்குகள் தேங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

முன்னதாக, நவம்பர் 6ம் தேதி சேலம் கொண்டலாம்பட்டியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனம் தலைவர் தனராஜ், ``ஏற்கனவே டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண விலை உயர்வு போன்றவற்றால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காலாண்டு வரி உயர்வை 40 சதவீதம் அளவில் அரசு உயர்த்தி உள்ளது. எனவே காலாண்டு வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மேலும் ஆன்லைன் மூலம் வழக்கு போடுவதை ரத்து செய்ய வேண்டும், மணல் குவாரிகளை அரசு உடனே திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே அறிவித்தப்படி இன்று 9 ஆம் தேதி லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாக இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் சுமார் ஆறு லட்சம் லாரிகள் மற்றும் 20 லட்சம் டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது`` என்று கூறினார்... மேலும்"இதனால் ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக பாதிப்பு ஏற்படும். இதனால் 200 கோடி ரூபாய் அளவில் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை பாதிப்பு ஏற்படும். எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு உடனடியாக காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வழக்கு விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், மணல் குவாரிகளை அரசு உடனடியாக திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், அரசு அழைத்து பேசி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றார்.

இந்த போராட்டத்தை ஒட்டி வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய லாரிகள் அப்படியே அந்தந்த மாநில எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய லாரிகள் அத்திப்பள்ளியிலும், புதுவையில் இருந்து வரக்கூடிய லாரிகள் புதுச்சேரி எல்லையிலும், ஆந்தரா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து வரக்கூடிய லாரிகள் அந்தந்த மாநில எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

Tags :
Advertisement