தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

லிவிங் டுகெதர் வாழ்க்கை குடும்பமாகாது! - கேரளா ஐகோர்ட் தீர்ப்பு!

09:40 PM Jul 11, 2024 IST | admin
Advertisement

ரறிய, சமூக ஏற்போடு திருமணம் முடித்துதான் ஒன்றாக வாழ வேண்டும் என்றில்லாமல், காதல் இணையர் மணமுடிக்காமலேயே சேர்ந்து வாழ்வதுதான் லிவிங் டுகெதர் உறவு முறை. மேற்கத்திய நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த லிவிங் டுகெதர் கலாசாரம், இந்தியாவில் சமீப காலமாகத்தான் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், இந்தியா போன்ற நாடுகளில் இதுதொடர்பான ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. இந்நிலையில் இந்த உறவு ஃபேமிலி ஆகாது என்று கோர்ட் அறிவித்துள்ளது

Advertisement

எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு இளைஞர் இளம்பெண்ணுடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்துள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இளைஞர், தன்னை குடும்ப வன்முறை செய்ததாக இளம்பெண் புகாரளித்தார். இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டி ல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், ''இளைஞர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப வன்முறை வழக்கு தவறானது. லிவிங் டுகெதர் உறவில் பங்குதாரர் (பார்ட்னர்) என்று மட்டுமே கூற முடியும். அந்த உறவு திருமணம் அல்ல. துணையை கணவர் என்று அழைக்க முடியாது. சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவரை கணவர் என்று அழைக்க முடியும். பங்குதாரர்களிடம் இருந்து உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால், அது குடும்ப வன்முறை வரம்பிற்குள் வராது'' என்று தெரிவித்துள்ளனர்

Advertisement

Tags :
High Courtkeralaliving togethernot a familyverdict
Advertisement
Next Article