For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சென்னையில் உள்ள பொது நீச்சல் குளங்களின் பட்டியல்!

01:49 PM Sep 17, 2024 IST | admin
சென்னையில் உள்ள பொது நீச்சல் குளங்களின் பட்டியல்
Advertisement

ரந்து விரிந்த நீர் நிலைகளில் மகிழ்ந்து குளித்த மாபெரும் வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாகிய நமக்கு, இன்று குளிக்க ‘பக்கெட்’ தண்ணீர், குடிக்க ‘பாக்கெட்' தண்ணீர் என்கிற நகர வாழ்க்கை பழகிப் போனது விந்தைதான். நம் மீது திணிக்கப்பட்ட அல்லது நாமே விரும்பி ஏற்றுக் கொண்ட இந்த நகரத்துச் சூழலிலும், நீர் நிலைகள் நமது நினைவுகளை விட்டு அகலவில்லை. நகரத்து வீடுகளில் பரந்து விரிந்து கிடக்கும் நீச்சல் குளங்களே இதற்குச் சாட்சி.முன்னெல்லாம் ஆறு, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளுடனான நமது உறவு ஆழமானது. குளிப்பது, குடிப்பதில் தொடங்கி உயிர் வாழ்வதற்கான இன்னபிற தேவைகள் அனைத்துக்கும் நீரையே சார்ந்திருக்கும் நமக்கு, “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்'' என்று பாடிய நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு.வசதிப் படைத்தவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் வரமாக இருந்த நீச்சல் குளங்கள், தற்போது அமைக்க எளிதாகவும் விலை குறைவாகவும் இருப்பதால், மத்திய தர வீடுகளுக்கும் வந்து விட்டன. 30 க்கு 15 அடி அளவில் ஒரு நீச்சல் குளம் கட்ட சுமார் நான்கு லட்சம் ரூபாய் இருந்தால் போதும். இதனால் தனி வீடுகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் என நமது வாழிடங்கள் அனைத்திலும் நீச்சல் குளங்கள் நிரம்பி வழிகின்றன. நீச்சல் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதால், மன அழுத்தங்களுக்கு மத்தியில் நாட்களை நகர்த்தும் நகர வாழ்க்கையில் நீந்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

Advertisement

அந்த வகையில் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஈடுபடும் உடல் செயல்பாடுகளில் ஒன்றே நீச்சல் பயிற்சி ஆகும். உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும் செயல்பாடே நீச்சல் பயிற்சி. நீச்சல் பயிற்சி உடல் வலிமை, சகிப்புத் தன்மை மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நீச்சல் அடிப்பது பல தசை குழுக்களை ஒரே நேரத்தில் உள்ளடக்கியதாகும். இது தசை வலிமையை அதிகரிப்பதுடன், சகிப்புத் தன்மையையும் ஊக்குவிக்கிறது. நீச்சல் பயிற்சி செய்யும் போது நீரின் எதிர்ப்பு தசைகளை எதிர்த்துப் போராட வைக்கிறது. இதன் மூலம் தசை வலிமை அதிகரிக்கிறது. மேலும் இது உடலுக்கு சீரான பயிற்சியை அளிப்பதுடன் முதுகு, கைகள், கால்கள் மற்றும் தோள்களை பலப்படுத்த உதவுகிறது.

Advertisement

நீச்சல் அடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இதில் கட்டுப்படுத்தப்பட்ட சுவாச நுட்பங்களுடன் கூடிய ஏரோபிக் உடற்பயிற்சி இதயத்துடிப்பை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதய தசைகளை பலப்படுத்துகிறது. நீச்சல் பயிற்சி எடை மேலாண்மை மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. நீச்சல் பயிற்சி கலோரிகளை எரிப்பதுடன், தசைகளை வலுப்படுத்துகிறது. இதனுடன் சீரான உணவை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பொது நீச்சல் குளங்களின் பட்டியல் இதோ

அண்ணா பல்கலைக்கழக நீச்சல் குளம், கோட்டூர்புரம்

கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள இந்த குளம் சென்னையில் உள்ள பிரபலமான பொது நீச்சல் குளங்களில் ஒன்றாகும். குளத்தின் ஆழம் நான்கு அடி முதல் 12 அடி வரை உள்ளது. எனவே உங்கள் வசதியின் அளவைப் பொறுத்து நீங்கள் நீந்தலாம்.

மேலும் இங்கு, பயிற்சி பெற்ற நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் சிறப்பான நீச்சல் பயிற்சியும் வழங்கப்படுகிறது. புதன் முதல் திங்கள் வரை காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4-8 மணி வரையிலும் நீங்கள் அங்கு செல்லலாம். ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் செலுத்த வேண்டும். அவர்களை 9841631365 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மெரினா நீச்சல் குளம்

100 மீட்டர் நீளமுள்ள மெரினா நீச்சல் குளம், தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்ட பின்னர், ஏப்ரல் 6, 2022 அன்று மீண்டும் திறக்கப்பட்டது. திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் காலை 5:30 முதல் இரவு 7:30 வரை இங்கு செல்லலாம். இந்த குளம் சென்னை மாநகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது.

SDAT ஆக்வாட்டிக் காம்பிளக்ஸ், வேளச்சேரி

வேளச்சேரி சாலையில் உள்ள ஆக்வாட்டிக் காம்பிளக்ஸ், மாநில அரசால் ரூ.11.32 கோடியில் 1995ல் கட்டப்பட்டது. இது ஒரு அவுட்டோர் குளம். இங்கு உடற்பயிற்சி மையம் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸிற்கான உட்புற கூடமும் உள்ளது. நீச்சலில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த குளம் வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர மெம்பர்ஷிப் வழங்குகிறது. இங்கு ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தின் ஏழு நாட்களும் குளம் திறந்திருக்கும்.

ஒய்எம்சிஏ நீச்சல் குளம், நந்தனம்

நந்தனம், அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரியில் இந்த நீச்சல் குளம் அமைந்துள்ளது. இங்கு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இது ஏழு நாட்களும் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இங்கு மாதத்திற்கு, ரூ.1,800 செலுத்த வேண்டும்.

வேவ்ஸ் ஸ்விம்மிங் அகாடமி, பல்லாவரம்

பல்லாவரத்தில் அமைந்துள்ள வேவ்ஸ் ஸ்விம்மிங் அகாடமி, குழந்தைகள், பெரியவர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலதரப்பட்ட மக்களுக்கு நீச்சல் வசதிகள் மற்றும் படிப்புகளை வழங்குகிறது.

போட்டிக்கான நீச்சல் வகுப்புகள், மேம்பட்ட நீச்சல் பயிற்சி, நீர் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை நீச்சல், ஆட்டிசம் அல்லது டவுன் சிண்ட்ரோம் போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உதவி நீச்சல் அமர்வுகள் உள்ளிட்ட திட்டங்கள் இங்கு உள்ளன.

இங்கு வாரத்தின் ஏழு நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். குழந்தைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் மற்றும் பெரியவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 150 ரூபாய். உறுப்பினர் சேர்க்கைக்கு மாதம் ரூ.4,000 செலவாகும். தொடர்புக்கு: 044-49597004

எம்ஏவி நீச்சல் குளம், சேலையூர்

கிழக்கு தாம்பரம் சேலையூரில் அமைந்துள்ள எம்ஏவி நீச்சல் குளம் வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருக்கும். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:30 முதல் மாலை 3 மணி வரையிலும், மற்றும் வார இறுதி நாட்களில், காலை 10:30 முதல் இரவு 7:30 வரை திறந்திருக்கும். இங்கு ஒரு மணி நேரத்திற்கு பெரியவர்களுக்கு ரூ.120, குழந்தைக்கு ரூ.100 செலுத்த வேண்டும். 044-22276060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

MJL நீச்சல் குளம், கேம்ப் ரோடு

சென்னை சேலையூரில் கேம்ப் ரோடு எண் 10ல் அமைந்துள்ள இந்த குளம் ஏழு நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இங்கு ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் செலவாகும். இங்கு குழந்தைகளுக்கு மாதம் ரூ 2500 மற்றும் பெரியவர்களுக்கு மாதம் ரூ 3000 கட்டணத்தில் பயிற்சி அளிக்கிறது. தொடர்பு எண் 9841470360.

எஸ்பி நீச்சல் அகாடமி, போரூர்

போரூரில் உள்ள எஸ்பி நீச்சல் அகாடமி உள்ளரங்க குளம். இது புதன் முதல் திங்கள் வரை வாரத்தில் ஆறு நாட்கள் திறந்திருக்கும், செவ்வாய் விடுமுறை. குறிப்பிட்ட நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளம் திறந்திருக்கும். தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை, பெண்களுக்காக பிரத்யேகமாக திறந்திருக்கும். இங்கு ஒரு மணி நேரத்திற்கு, ரூ.150 செலுத்த வேண்டும். தொடர்பு எண் 9962282613.

அனைத்து நீச்சல் குளங்களுக்கும் பொதுவான விதிகள்:

- உங்கள் சொந்த நீச்சலுடை எடுத்து வர வேண்டும்.

- கண்ணாடி மற்றும் ஷவர் கேப் கட்டாயம்

Tags :
Advertisement