For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்திய மாணவர்கள் உயர்கல்வியை படிக்க அதிகம் விரும்பும் நாடுகள் பட்டியல்!

02:28 PM Feb 22, 2024 IST | admin
இந்திய மாணவர்கள் உயர்கல்வியை படிக்க  அதிகம் விரும்பும் நாடுகள் பட்டியல்
Advertisement

நம் மத்திய அரசின் உயர் கல்வி அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளி விபரப்படி, ஏறத்தாழ 4,15 கோடி மாணவர்கள் உயர்கல்வித் துறையில் பயில்கின்றனர். தேசிய அளவிலான சராசரி மொத்தப் பதிவு விகிதம் 29.5, அதாவது 18-23 வயதுடைய நபர்களில் 100 பேரில் 29.5 நபர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். வளர்ந்த நாடுகளான அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மற்றும் கனடா நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் உயர்கல்விக்கான வருடாந்திர கட்டணம் என்பது 5 முதல் பத்து மடங்கு வரை குறைவு. இருப்பினும், வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2019ஆம் ஆண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஏறத்தாழ 13.2லட்சம் மாணவர்கள் இந்தியாவில் இருந்து உயர்கல்வி பெறுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அது சரி ஏன் வெளிநாடுகளில் உயர்கல்வி பெற‌ மாணவர்கள் விரும்புகிறார்கள்? என்ற கேள்வி எழலாம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. வளர்ந்த நாடுகளில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பு பயிலச் செல்லும் போது அந்த நாடுகளிலேயே வேலைவாய்ப்பு பெற்று நிரந்தரமாக குடியுரிமை கிடைத்திட வாய்ப்புள்ளது அல்லது வெளிநாடுகளில் பயின்று விட்டு இந்தியா திரும்பும் போது முன்னோடி தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் நல்ல சம்பளம் கிடைக்கிறது.

Advertisement

வெளிநாடுகளில் ப‌ல்கலாசாரச் சூழலில் (Multicultural) மாறுபட்ட கல்வித் திட்டத்தில் பயிலும் போது மாணவர்களுக்கான கற்றலின் நோக்கத்தில் (Learning outcomes) நல்ல பலனைப் பெற இயலும் என மாணவர்கள் திடமாக நம்புகின்றனர். உதாரணத்திற்கு பிரிட்டனில் ஓராண்டு காலத்திற்குள் முதுநிலை கல்வி பயிலவும் வாய்ப்புண்டு, மேலும் ஆய்வு சார் பாடத்திட்டங்கள் (Research led curriculum) நேரடியாக தொழில்துறை நிறுவனங்களோடு இணைந்து கற்கும் வாய்ப்பையும் தருகிறது. இதுபோன்று இன்ன பிற காரணங்களுக்காகவும் வெளிநாடுகளுக்கு சென்று பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இனி வரும் வருடங்களில் அதிகரிக்கவே செய்யும்.

Advertisement

அவ்வாறு அதிகரிப்பின் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பயில்வதற்கு ஆகும் செலவினம் 2024ஆம் ஆண்டில் 80 பில்லியன் டாலர்களைத் தொடும் என RedSeer நிறுவனம் கணிக்கிறது. வெளிநாடுகளுக்கு சென்று பயிலும் மாணவர்களில் ஆந்திரா, பஞ்சாப், மகாராஷ்டிரா வரிசையில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது ஏறத்தாழ 7% மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பயில ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் இந்திய மாணவர்கள் படிக்க விருப்பப்படும் வெளிநாடுகளின் பட்டியலில், முதலிடத்தில் ஜெர்மனி, இரண்டாவது இடத்தில் அமெரிக்கா மற்றும் மூன்றாவது இடத்தில் பிரித்தானியா இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

இந்திய மாணவர்கள் படிக்க விரும்பும் வெளிநாடுகள் பட்டியல் இதோ :

1. ஜெர்மனி :

ஜெர்மனியில் மொத்தம் 423 உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன, இதில் 108 பல்கலைக்கழகங்கள், 211 பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் 52 கலை மற்றும் இசைக் கல்லூரிகள் உள்ளன.

தற்போதைய நிலவரப்படி, ஜெர்மனியில் இந்தியாவில் இருந்து 42,997 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் பொறியியல், சட்ட மேலாண்மை மற்றும் கணிதம் ஆகியவற்றை விருப்ப பாடமாக தேர்ந்தெடுகின்றனர்.

அதேபோல் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெர்மனியில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக ஜெர்மனியின் தரவு கூறுகிறது.

2. நெதர்லாந்து :

நெதர்லாந்தில் 30க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை ஆம்ஸ்டர்டாம், ரோட்டர்டாம், க்ரோனிங்கன் மற்றும் டெல்ஃப்ட் ஆகிய இடங்களில் உள்ளன.

நெதர்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் தரவுகள் படி, நெதர்லாந்தில் தற்போது 3,500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகக் கூறுகிறது.

3. போலந்து :

போலந்தில் கிட்டத்தட்ட 457 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. போலந்தில் சுமார் 2,500 இந்திய மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

போலந்தில், துருக்கி மாணவர்களுக்கு அடுத்தபடியாக இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தரவுகள் கூறுகிறது.

4. ஹங்கேரி :

ஹங்கேரியில் மொத்தம் 65 பல்கலைக்கழகங்கள் உள்ளன, அவற்றில் பல புடாபெஸ்டில் உள்ளன. புடாபெஸ்ட் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார பல்கலைக்கழகம், மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகம் மற்றும் ESSCA மேலாண்மை பள்ளி ஆகியவை நன்கு அறியப்படும் பல்கலைக்கழகமாக உள்ளன.

ஹங்கேரிய பல்கலைக்கழகங்களில் ஏறக்குறைய 1,000 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) வெளியிட்ட தரவு கூறுகிறது.

5. பெல்ஜியம் :

பெல்ஜியம் ஐரோப்பாவின் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ளது. சமீபத்தில் பெல்ஜியத்தில் சுமார் 24,732 இந்திய மாணவர்கள் படித்து வருவதாக தரவுகள் கூறுகிறது.

6. நியூசிலாந்து :

நியூசிலாந்தில் எட்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன, அவற்றில் ஆக்லாந்து பல்கலைக்கழகம் உலகளவில் உயர்ந்த தரவரிசையில் உள்ளது.

பல இந்திய மாணவர்கள் தங்கள் எம்பிஏ படிப்பு அல்லது கல்வி ஆராய்ச்சிக்காக நியூசிலாந்து செல்கின்றனர். அந்நாட்டில் கிட்டத்தட்ட 15,000 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement