தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

லியோ விமர்சனம்!

08:13 PM Oct 19, 2023 IST | admin
Advertisement

ம்ம கோலிவுட் சினிமா கடந்த 83 ஆண்டுகளில் ஏகப்பட்ட ஹீரோக்களை சந்தித்துவிட்டது. அதில் வெகு சிலர் மட்டுமே தமிழகத்தின் பெரிசுகள் முதல் குட்டிகள் வரையிலான சகல ஜனக்கள் மனதையும் ஆட்சி செய்து மாஸ் ஹீரோக்களாக உருவெடுக்கின்றனர். அப்படியான மாஸ் அந்தஸ்தைப் பெற்று இந்தத் தலைமுறையின் டாப் ஸ்டாராக வலம் வருபவர் விஜய். கடந்த 31 வருஷங்களாக தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய், எந்த அளவுக்குப் பாராட்டப் பட்டிருக்கிறாரோ அதே அளவிலான நெகட்டிவ் விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார்.. அந்த வகையில் இப்போது ரிலீஸாகி இருக்கும் லியோ படத்தை வைத்து விஜய் மார்கெட் வேல்யூவை குறைக்க பாடுபடுவோர் நிறைய உண்டு. அதற்கு ஏற்றார் போல் இந்த லியோ history of violence என்ற ஹாலிவுட் படத்திற்கான ட்ரிப்யூட் என்பதை டைட்டில் கார்டிலேயே போட்டு புஸ் ஆக்கி விடுகிறார்கள். வழக்கமான பக்கா ஆக்‌ஷன் கதைதான். ஆனால் இப்பபட எழுத்தாளர்கள் லோகேஷ், ரத்னகுமார், தீரஜ் ஆகிய மூவரும் நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய ,தெறி, பாட்ஷா, விக்ரம் போன்ற படங்களின் கதைகளை நினைவூட்டும் படியாக இருந்தாலும் தங்களின் டிரேட் மார்க் திரைக்கதை யுக்திகள் மூலம் அதற்கு ஒரு புது வடிவம் கொடுத்து ஒரு இடத்தில் கூட ஆங்கிலப்படத்தின் சாயல் தெரியாதது போல் வழங்கி ரசிகர்களை மீண்டும் ஒருமுறை குஷிப்படுத்தி அனுப்புவதில் ஜெயித்து விட்டார்கள். ஆனால் இது மிக வன்முறையான படம், போதைப் பொருள், புகைப்பிடிப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் இந்தக் கதை களத்துக்கு அவசியமானது என்பதால் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். எனவே அது போன்ற பலான விஷயங்கள் இருப்பதால் இப் படம் கண்டிப்பாக  குழந்தைகள் பார்ப்பதற்கு உகந்தது அல்ல.

Advertisement

கதை என்னவென்றால் குளுகுளு காஷ்மீரின் ஒரு தக்கனூண்டு வில்லேஜில் ஒய்ஃப் , டாட்டர், சன் என ஃபீஸ்புல் லைஃப்பில் இருக்கிறார் நாயகன் விஜய். மாடர்ன் காஃபி ஷாப் ஒன்று வைத்திருக்கும் அவர், அவ்வப்போது ஊருக்குள் வரும் காட்டு விலங்குகளை பிடிக்கும் அனிமல் ரெஸ்க்யூவராகவும் இருக்கிறார். அப்படி ஒருமுறை ஊருக்குள் வந்து விடும் கழுதைப்புலியை திறமையாக பிடிப்பதை நேரில் பார்த்த அவ்வூர் மக்களிடன் தனி அன்பையும், கவனத்தையும் பெறுகிறார். இன்னொரு பக்கம் அந்த ஊரில் தொடர்ந்து கொலைகள் நடக்கின்றன. அதாவது மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டரின் ரவுடி கும்பல் திருட்டில் ஈடுபட்டு, அதைப் பார்ப்பவர்களை எல்லாம் போட்டுத் தள்ளுகின்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் தானுண்டு , தன் வேலையுண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் விஜய்யுடன் மோத நேர்கிறது. அந்த மோதல் விளைவாகவும் அடாவடி மிஷ்கின் கும்பலால் தன் மகளின் உயிருக்கே ஆபத்து வரும் காரணத்தாலும் ஒட்டு மொத்தமாக அந்த சல்லியர்களை அடித்தேக் கொன்று விடுகிறார். இந்த சமாச்சாரம் ஊர் முழுக்கப் பரவி விஜய் புராணம் பாட ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படியான சூழலில் ஜெயிலில் இருந்து ரிலீஸாகும் சஞ்சய் தத் மற்றும், அர்ஜீன் ஆகியோர் விஜய் போட்டோவை பேப்பரில் பார்த்து, பல வருடங்களுக்கு முன்பு இறந்து போன லியோ தாஸ் தான் என்பவர்தானா இந்த விஜய் என்பதை தெரிந்து கொள்ள காஷ்மீர் வருகின்றனர் . வந்த இடத்தில் கேங்ஸ்டர் லியோ விஜய் உயிரோடு இருப்பதாக நினைத்துக் கொண்டு, காபி ஷாப் வைத்திருக்கும் பார்த்திபன் விஜய்யை தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். ஆனால் பார்த்திபன் விஜய்யோ தான் லியோ இல்லை என மறுக்கிறார். அதை அடுத்து இவர்களால் விஜய்-க்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அடுத்தடுத்து இடையூறுகள் நிகழ்கின்றன. அவற்றில் இருந்து விஜய் தப்பித்தது எப்படி?, இறந்து போன லியோ யார்?, அப்படியானால் இப்படம் LCU-இல்லையா? - என்பது போன்ற சகல கொஸ்டின்களுக்கும் ஆன்சர் சொல்வதே ‘லியோ’.

Advertisement

இந்த படத்தின் நாயகன், நாயகி உள்ளிட்ட நடிகர்களை எல்லாம் ஓவர் டேக் செய்து படத்தில் பலமாக தெரிவது அனிருத்தின் மியூசிக்தான் என்று சொல்வது மிகையல்ல. சில ஆங்கில பாடல்களாகட்டும், ஆக்‌ஷன் காட்சிகளில் கொடுத்த பின்னணி இசையாகட்டும் லியோ-வை தூக்கி நிறுத்துவதே அனிருத்தான்.. ஆக இப்படத்தின் ஒரு ஹீரோவாக இருக்கும் அனிருத் எப்பொழுதும் போல் சிறப்பான இசையை கொடுத்து லியோவைவேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். பாடல்களை காட்டிலும் வழக்கம்போல் பின்னணி இசை சிறப்பாக கொடுத்து மிரட்டி இருக்கிறார் என்பதை ஒவ்வொருவருக்கும் புரியும்படி தன் பங்களிப்பை வழங்கி ஸ்கோர் செய்திருக்கிறார்.

இன்று வரை ஃபீல்டில் மார்க்கெட் வேல்யூ அதிகம் உள்ள விஜய் சில பல கால இடைவெளிக்குப் பிறகு ஆக்ஷன் அவதாரத்துடன் நன்றாகவே மிளிர்கிறார். பரபரக்கும் சண்டைக் காட்சிகளைக் காட்டிலும் சென்டிமென்ட் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, இப்போதும் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். அதிலும் எந்த ஒரு இடத்திலும் தேவையில்லாத பொலிட்டிக்கல் பஞ்ச் டயலாக் பேசாமல் முழுக்க முழுக்க நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி கைதட்டல் பெற்று இருக்கிறார் விஜய் . விஜய் பட நாயகிக்கு டேன்ஸ் ஆடறதைத் தவிர வேலை கிடையாது என்று சொல்லாடலுக்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும் வகையில் நாயகி த்ரிஷாவின் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. விஜய் - த்ரிஷா இடையிலான கெமிஸ்ட்ரியும் பல வருடங்களுக்குப் பிறகும் கூட லைக் போட வைக்கும் விதத்தில் அமைந்ததில் வாய்ஸ் ஓவர் கொடுத்த சின்மயிக்கும் தேங்க்ஸ்.

வில்லன் கேரக்டர்களில் வரும் சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன், ஜார்ஜ் மரியான், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உட்பட பலர் அவரவருக்கான கொடுக்கப்பட்ட வேலையை மிகச் சிறப்பாக செய்து இப்படத்தை பிரம்மாண்டமான ஒரு படமாக காட்ட உதவி புரிந்துள்ளனர். குறிப்பாக கௌதம் வாசுதேவ் மேனன் விஜய்யுடன் படம் முழுவதும் பயணிக்கும் படியான கேரக்டரில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு எதிர்பார்க்காத கேரக்டரில் வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிந்திருக்கிறார் மடோனா செபஸ்டின். விஜய்யின் மகனாக வரும் மோலிவுட் ஆக்டர் மேத்யூ தாமஸூம் மகளாக வரும் இயலின் நடிப்பும் அடடே சொல்ல வைக்கிறது..!

கேமராமேன் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் சில பல அண்டுகளாக அந்நியப்பட்டுப் போன காஷ்மீர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் லியோ சம்பந்தப்பட்ட காட்சிகள் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அந்த கார் & பைக் சேஸுக்கு எஃபெக்ட் டீமுக்கு தேவையான காட்சிகளை வழங்கி இந்த லியோவின் ஸ்கோரை உயர்த்த பாடுபட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது, கழுதைப் புலி (ஹைனா) வரும் சண்டைக் காட்சி மற்றும் கார் சேசிங் காட்சிகளின் டேபிள் ஒர்க் பிரமிக்க பைக்கிறது. ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு இன்னொரு அனிருத் லெவலில் இதில் வரும் ஒவ்வொரு சண்டைக் காட்சிகளையும் முதுகெலும்பாக நினைக்க வைத்து விட்டார்கள்.

டைரக்டர் லோகேஷ் கனகராஜின்முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படம் கொஞ்சம் வீக்-தான் . கூடவே அது சரியில்லை.,,இது சரியில்லை என்று சொல்ல பல விஷயங்கள் உண்டு என்றாலும் தியேட்டருக்கு போய் பார்த்தால் இன்னொரு முறை பார்க்க தூண்டும் சினிமாதான் இது!

மார்க் 3.75.5

Tags :
AniruthLeoLokesh KanagarajreviewtrishaVijay
Advertisement
Next Article