மூத்திர வகைகளில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பாக்டீரியாக்கள்!
பசு மூத்திரத்தில் பாக்டீரியாக்களால் உருவாகும் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் Antimicrobial Properties இருக்கிறதா?ஆமாம், இருக்கிறது. பசுக்கள் உட்கொள்ளும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்களில் இருந்து உருவாகும் என்சைம்கள் பசுவின் சீரண மண்டலத்தில் process செய்யப்பட்டு வெளியேற்றப்படும் போது antifungal properties உடன் வெளியேறுகிறது. ஆகவே பசு மூத்திரத்தில் இருக்கும் சில Peptides நோய் எதிர்ப்பு மருந்தாகப் பயன்படலாம். ஆகவே பசு மூத்திரத்தைக் குடிக்கலாம் என்பது பிற்போக்குவாதிகளின் நீண்டகால வாதம்.மனித மலத்தில், மனித மூத்திரத்தில் பாக்டீரியாக்களால் உருவாகும் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் Antimicrobial Properties இருக்கிறதா?ஆமாம், இருக்கிறது. மனித மலத்தில் டிஃபென்சின்கள் (Defensins) இருக்கிறது, இவை ஆண்டிமைக்ரோபியல் பெப்டைடுகள் (Antimicrobial Peptides) என்றழைக்கப்டுகிறது, அவை பல்வேறு நோய்க்கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. சிறுகுடல் மற்றும் பெருங்குடல் உட்பட பல்வேறு எபிடெலியல் (Epithelial Surfaces) பரப்புகளில் டிஃபென்சின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அப்படியானால், பசு மூத்திரத்தைக் குடிப்பதைப் போலவே மனித மலத்தையும், மூத்திரத்தையும் உட்கொள்ளலாம் என்பது தான் சரியான எதிர்வாதமாக இருக்கும் அல்லவா? பிற்போக்குவாதிகள் இதைக் கடைப்பிடிக்க முன்வருவார்களா? இத்தகைய பழக்கங்கள் நவீன மருத்துவம் வளர்ச்சி அடைவதற்கு முந்தைய காலங்களில் உலகின் பல்வேறு நிலப்பரப்புகளில் பல்வேறு இனக்குழுக்களால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இன்றும் நவீன சமூகங்கள் வளர்ச்சி அடையாத பகுதிகளில் பின்பற்றப்படுகிறது.ஆகவே வாதப்பிரதிவாதங்களின் அடிப்படையில் பசு மூத்திரம் குடிப்பது நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தும் என்பது சரியான கருத்தைப் போலத் தோற்றமளிக்கும். உண்மையில் இது சரியானதுதானா?
பசு மூத்திரத்திலும் சரி, மனிதக் கழிவுகளிலும் சரி, Antimicrobial Properties இருக்கிறது என்பது உண்மைதான், ஆனால், நாம் அதிலிருக்கும் Peptides களைப் பிரித்து எடுக்க வேண்டும்...பிறகு நோயாளரின் உடலில் என்ன விதமான பாக்டீரியல் தொற்று உருவாகி இருக்கிறது, அதற்கான எதிர் மருத்துவ ஆற்றல் மேற்கண்ட கழிவுகளில் இருக்கிறதா என்பதை சோதனை செய்து பிறகு சரியான பதத்தில் அவற்றை உள்ளெடுக்க வேண்டும் என்பதுதான் மருத்துவ விதி.எளிதாகப் புரியும்படி சொல்ல வேண்டுமானால், நவீன மருத்துவத்தில் நாம் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்னதாக இத்தகைய Anti Microbial Peptides களை தொழில்முறையில் உற்பத்தி செய்யத் துவங்கி அவற்றை patent செய்து மருந்துகளாக மாற்றி இருக்கிறோம். இன்றைய Anti-Biotic மருந்து மாத்திரைகள் எல்லாம் மேற்கண்ட Anti Microbial Peptides தான்.
தனித்தனியாக ஒவ்வொரு நோய்த்தொற்றுக்கும் நவீன மனிதர்களாகிய நாம் தனித்தனியான specific Anti-Biotics மருந்துகளைக் கண்டறிந்து விட்டோம். ஆகவே, இனியும் பசு மூத்திரத்தையும், மனித மலத்தையும் உட்கொள்ள வேண்டிய எந்த மருத்துவ அவசியமும் நமக்கு இல்லை என்பதுதான் அறிவியல்பூர்வமான உண்மை.பசு மூத்திரம் குறித்து 5 ஆய்வு அறிக்கைகள் இருக்கிறது என்கிற IIT இயக்குனர் காமகோடியின் கூற்று உண்மையா? 100 % உண்மை, அவர் குறிப்பிடுகிற 5 பன்னாட்டு ஆய்வறிக்கைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பசு மூத்திரத்தில் இருக்கும் மருத்துவப் பண்புகளைக் குறித்த நூற்றுக்கணக்கான ஆய்வறிக்கைகள் இணையத்திலேயே கிடைக்கிறது.
தவிர இந்துத்துவ இந்திய அரசு இதற்காகவே பல கோடி நிதி ஒதுக்கீடு செய்து கோமாதாவின் புகழ் பரப்ப பல்வேறு நிறுவன ரீதியிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. பசுக்களுக்கு என்று அவசரகால ஊர்திவரை மோடி அரசு அக்கறை காட்டி வருகிறது.கடந்த ஆண்டு "தாமிர பஸ்பம்" என்கிற ஒரு சித்த மருந்து குறித்த ஆய்வுக் கட்டுரையை மொழியாக்கம் செய்வதற்காகப் படித்த போது அது ஒரு Anti-ageing மருந்து என்பதும், ரசவாத வேதியியலில் உலோகங்களைத் தங்கமாக்கும் முயற்சியில் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது என்கிற தகவலும் வியப்பான ஒன்றாக இருந்தது.அதன் உண்மைத்தன்மை குறித்தும், அதில் புடம் போடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட மூலிகைத் தாவரங்களின் Mettalic Properties மற்றும் வேதிச் சமன்பாடுகள் குறித்த மிகப்பெரிய ஆய்வு நடந்து முடிந்தால் மட்டுமே அந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் உண்மைத்தன்மை கொண்டவை தானா என்பதை உறுதி செய்ய முடியும்.
அதுபோலவே, ஹோமியோபதியின் "ஒத்ததை ஒத்தது குணமாக்கும்" என்கிற ஹானிமனின் தத்துவம் இன்றளவும் ஆய்வுகளுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது, ஆனால், Placibo என்கிற மருந்தே இல்லாத இனிப்புருண்டைகள் தத்துவம் குறிப்பிட்ட அளவில் வெற்றிகரமானதாக இருப்பதாக ஆய்வுகள் முடிவு செய்கிறது.
ஆகவே எதையாவது தின்று நாம் பிழைத்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கை மனித உடலில் குறிப்பிட்ட அளவு நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு உதவுகிறது என்பதை நவீன மருத்துவம் ஒப்புக் கொள்கிறது.அந்த வரிசையில் பசு மூத்திரம், புலிப்பால், மனித மலம் என்று எதுவும் குறிப்பிட்ட நம்பிக்கை கொண்ட மானுடக் குழுக்களின் மருத்துவ நம்பிக்கையாக இருப்பதில் நமக்கு எந்த முரண்பாடுகளும் இல்லை.அவரவருக்கு ஏற்ற நம்பிக்கைக்குரிய கழிவுகளை தாராளமாக உட்கொள்ளலாம், பசு மூத்திரத்தைப் போலவே புலி மூத்திரம், சிங்க மூத்திரம், யானை மூத்திரம், பன்றி மூத்திரம் போன்றவற்றிலும் அரிதான Anti Microbial Peptides கள் காணப்படுகிறது, இதுகுறித்த ஆய்வறிக்கைகளும் (Research Papers & Journals) உலகம் முழுவதும் கிடைக்கிறது.
நிற்க, அரசுகளும், கல்வி நிறுவனங்களும் நம்பிக்கையின் வழியில் கட்டமைக்கப்படுவதல்ல, மாறாக எத்தகைய நம்பிக்கைகள் மானுட சமூகத்திற்கு நன்மை விளைவிக்கும்...எத்தகைய நம்பிக்கைகள் நவீன மருத்துவத்தின் அறிவியலுக்கு ஏற்றவை, முரண்பட்டவை என்பதை சட்டப்பூர்வமாக மாற்றி நடைமுறைப்படுத்தும் இடத்தில் இருக்கும் அரசும், கல்வி நிறுவனங்களும், அதன் தலைவர்களும் அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கப்படாத நம்பிக்கைகளைப் பொது வெளியில் பேசி மாணவர்களின் அறிவு வளர்ச்சியிலும், சிந்தனைப் போக்கிலும் குழப்பத்தை விளைவிக்கக் கூடாது.அந்த வகையில் காமகோடி, தமிழிசை போன்ற கல்வியாளர்களின், அரசியல்வாதிகளின் பொதுவெளிக் கூற்றுக்கள் பிற்போக்குத் தனமானது மட்டுமில்லாமல் அரசியல் சாசன வரம்புகளுக்கு எதிரானவை. பசுவின் மூத்திரத்தை விட எருமையின் மூத்திரத்தில் அதிக அளவிலான Antimicrobial Peptides இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது என்பது ஒருபக்கம் மறைக்கப்படுகிறது.
இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் என்கிற அமைப்பின் சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் இயங்குகிறது இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிலையம் (Indian Veterinary Research Institute -IVRI). இங்குள்ள தொற்றுநோய்கள் பிரிவின் தலைவர் போஜ்ராஜ் சிங் என்பவர் தலைமையில் ஒரு ஆராய்ச்சி நடைபெற்றது.இந்த ஆய்வில் பசு மூத்திரம் அல்லது 73 வகையான (மனித மூத்திரம் உட்பட) பிற இத்தகைய Sample மூத்திர வகைகளில் 14 உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இ-கோலை போன்ற பாக்டீரியாக்கள் இருக்கிறது என்று தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.பசு மூத்திரம் குடிப்பவர்கள், மனித மலம் தின்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம். ஆனால், அதைப் பரப்புரை செய்வதும் பிறருக்குப் பரிந்துரை செய்வதும் சட்டப்படி குற்றம். குறிப்பாக IIT மாதிரியான உயர் அறிவியல் அமைப்புகளில் இருக்கும் கல்வியாளர்கள் பேசுவது மூடத்தனம் மட்டுமல்ல, அயோக்கியத்தனமும் கூட.