தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

குழந்தைகள் உரிமையை பாதுகாப்போம்-அரசியல் கட்சிகள் உறுதி!

12:09 PM Aug 14, 2024 IST | admin
Advertisement

நாவின் குழந்தைகள் நல அமைப்பும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறையும் இணைந்து தமிழ்நாட்டில் முதல் முறையாக அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுடன் “குழந்தைகள் உரிமைகளைப் பரப்புவதில் அரசியல் கட்சிகளின் பங்கு” எனும் தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு நடத்தியது. இதில் ஆளும் கூட்டணி கட்சிகள் பிரதிநிதிகளும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டதோடு குழந்தைகள் உரிமைகளை நிலைநாட்டிட உறுதி அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி குழந்தைகளுக்கு தங்கள் கருத்துகளை வெளிபடுத்தவும், தன்னிச்சையாக முடிவெடுக்கவும் குழந்தைகள் உரிமைகள் வழி வகுகிக்கிறது. குழந்தைகள் வினா எழுப்புவதை ஊக்குவிப்பதும் அதற்கான சூழல்களை ஏற்படுத்தித் தருவதும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியரின் கடமை எனத் தெரிவித்தார்.

Advertisement

முன்னேற்றதிற்கு அரசியல் விருப்பம் அடிப்படைக் காரணம், தமிழ்நாட்டில் அது அதிகம் இருக்கிறது. அரசியல் கட்சிகளுடன் இணைந்து குழந்தைகள் உரிமைகளை நிலைநாட்டுவதோடு குழந்தைகள் நல்ல எதிர்காலத்தை அடைவதற்கு நிறைய முன்னேற்றங்கள் செய்ய அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது முக்கியம் என ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளா அலுவலகத் தலைவர் கே.எல் ராவ் தெரிவித்தார்.

Advertisement

அரசியல் கட்சிகளின் உதவியுடன் குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்ய ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பு முனைப்பு காட்டுகிறது. உரிமைகளைத் தொடர்ந்து உறுதி செய்யும் போது குழந்தைகள் முழுத் திறன்களை அடைவதோடு எல்லோருக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும். அது மட்டுமல்லாமல், குழந்தைகள் உரிமைகள் முன்னிலைப் படுத்துவதும் பாதுகாப்பதும் சமஉரிமைகள் மாண்பு குறித்தான நமது கூட்டு மதிப்புகள் பிரதிபலிக்கும். குழந்தைகள் உரிமைகளை நிலைநாட்டுவதும் பாதுகாப்பதும் அரசுகள், சமூகங்கள் மற்றும் தனி நபர்கள் என அனைவரின் கடமையாகும். குழந்தைகள் உரிமைகள் குறித்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தேவை இருப்பதால் பள்ளி பாடத்திட்டத்தில் குழந்தைகள் உரிமை சேர்க்க வேண்டும் எனும் கோரிக்கையை அரசிடம் பரிந்துரைக்கப்படும் என திமுக வின் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் டி. கே. எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

முன்னேற்றத்திற்கான கொள்கை உரையாடலில் குழந்தைகளை முன்னிலைப் படுத்தும் போது பெற்றோர்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என அ.. இ. அ. தி. மு. க வின் செய்தித் தொடர்பாளர் அப்சரா ரெட்டி கூறினார்.. பா.ஜ.க வின் தொழில்நுட்ப அணியின் செயலாளர் பிரதீப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் குறித்தான திட்டங்கள் மற்றும் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறையும் ஐநாவின் குழந்தைகள் நல அமைப்புடன் சேர்ந்து குழந்தைகள் உரிமைகள் பாதுக்காக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழு ஒன்று அமைக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறை தலைவர் முனைவர் சி,அருள்செல்வன் கூறினார்.

சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்த ஆறுமுக நயனார், நர்மதா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ராஜசேகர், ஆசைத்தம்பி, மதிமுக, பாவலன் வி. சி க. செய்தித் தொடர்பாளர், வசீகரன் ஆம் ஆதமி கட்சித் மாநிலத் தலைவர், சங்கர், சட்டத் துறை நாம் தமிழர் கட்சி , இந்தியன் யூனியன் லீக் கட்சியைச் சார்ந்த கமில் , மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆபூ முகமது உள்ளிட்டோருடன் மற்றும் பலர் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்

Political Parties - Child Rights PR Tamil (2)

Tags :
Child Rightschildren's rightsCommittedLet's protectpolitical partiesUNICEF
Advertisement
Next Article